Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மதுரை: நெல் சாகுபடியில் அடுத்தது என்ன?

விவசாயிகள்  தேர்ந்து எடுத்த நெல் ரகங்களை நடவு செய்துள்ளனர். பயி ர்களுக்கு தேவையான கட்டுக்கோப்பு முறைகளை விவசாயி கள் கடைபி டிக்க வேண்டும். நெற்பயிருக்கு காய் ச்சலும் பாய் ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். கதிர்கள் உருவாகும் தருணத்திலிருந்து அறு வடை நிலை வரை நான்கு முதல் ஐந் து செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி, கட்டியநீர் ஆவியானவுடன் மீண்டும் நீர் கட்ட வேண்டும். சதுரமுறை நடவினை செய்து ள்ளவர்கள் கோ னோ வீடர் கருவியை உபயோகிக்க வேண் டும். இப்பணியை பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம். பயிரின் ஆரம்ப கட்டத்தில் களை களை கட்டுப்படுத்த பூட்டாகுளோர் என்ற களைக் கொல் லியை 2.5 லிட்டர்/ஏக்கர் என்ற அளவில் உப யோகித்து களைகளை அழிக்கலாம். விவசாயிகள் சாகுபடி யில் சுத்த சாகுபடி செய்ய வேண்டும். அதாவது வயல்களில் உள்ள வரப்புகளில் உள்ள களைச் செடிகளை முழுமை யாக அகற்றி விட வே ண்டும். அப்போது வய லில் நெற்பயிர் மட் டும் அழகாகத் தோன் றும். இதனால் பயிர் மேல் சூரிய வெளிச்சம் நன்றா க விழும். வரப்புகளில் எலிகள் தொந் தரவு இருக் காது. பயிர்களில் பூச்சி, வியாதி அதிக அளவில் இருக்காது. அடுத்து பயிர் நன்கு வளர சிபாரிசு செய்யப்பட்ட உரங்களை இடவேண்டும். மேலுரம் குறிப்பிட்ட தருணங் களில் இட வேண் டும். இது கவனித்து செய்ய வேண்டிய பணி யாகும். பயிருக்கு எக்ட ருக்கு 120:38:38 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட ப்படுகின்றன. தழை, சாம்பல் சத்துக்களை பிரி த்து இடு வதால் பயிர் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். இவை களுக்கு முன் எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை உலர் ந்த மணலுடன் கலந்து வயலில் நடவுக்கு முன் பரவலாக மண்ணின் மேல் பரப்பில் தூவிவிட வேண் டும். நெற் பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளான தண்டு துளைப்பான், சாம் பல் மற்றும் பச்சை தத்துப்பூச்சி, கதிர் நாவாய்ப்பூச்சி, இலை சுருட்டுப்புழு, புகையான், ஆனை க்கொம்பன் ஈ இவை கள் நெற்பயிரை தாக்குகின்றன. நோய்களில் குலைநோய், பாக்டீரியா இலை கருகல் நோய், கதிர் உறை அழுகல் நோய், தானிய நிறமாற்றும் நோய் இவை களுடன் எலிகளின் தாக் குதல் மகசூலை பெரிதும் பாதிக்கின்றன. விவசாயிகள் தாவ ர மற்றும் உயிரின முறைப்படி பயிர் பாதுகாப்பு செய்யலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்தலாம். பயிர் பாதுகா ப்பு செய்யும் போது நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் தேவையின் அடிப்படையில் மட்டு ம்தான் பூச்சி க் கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண் டும். விவசாயிகள் பயிர் பாதுகாப்பில் சமுதாய இயக்கத் தைக் கடைபிடிக்க வேண்டும். இவர்கள் வயலில் எலிகளை அழிக்க பயிர் அறுவடை செய்தபின் வயலில் இறங்கி வரப் புகளை வெட்டி எலிகளை பிடித்து அழித்துவிடலாம். விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.
பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி மற்றும் இலை சுருட்டுப் புழுக்களை அழிக்க வயலில் ஒட்டுண்ணியை விடலாம். ஒட் டுண்ணியின் பெயர் டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம். வய லில் நெற்பயிர் மேல் மரத்தின் நிழல் தொடர்ந்து இருந்து வந்தால் பயிர் இலை சுருட்டுப் புழுவால் பாதிக்கப்படும். நிழலைப் போக்க மரக்கிளையை வெட்டி அகற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும்.

நெல் வயலில் திடமான குச்சிகளை நடவேண்டும். குச்சிக ளின் தலைப்பாகம் பயிரின் உயரத்தைவிட அதிக உயரம் கொண்டிருக்க வேண்டும். குச்சியின் தலைப்பாகத்தில் துணி களை நன்கு சுருட்டி கட்டி அவைகள் மெத்தைபோல் இரு க்கச் செய்ய வேண்டும். இக்குச்சிகளை பரவலாக நெல் வயலில் நட்டுவிட்டால் அவைகளின் மேல் கோட்டான்கள் என்று அழைக்கப் படும் பறவைகள் இரவு நேரத்தில் வந்து உட்கார்ந்துகொள்ளும். இப்பறவைகளுக்கு இரவில் கூர்மை யாக பார்க்கும் திறன் உள்ளது. இரவு நேரத்தில் பயிர்களின் இடைவெளியில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக்கும் எலிகளை கோட்டான்கள் பறந்துசென்று பிடித்து குச்சிகளின் மேல் வந்து உட்கார்ந்துகொண்டு சாவகாசமாக தின்று விடும். சில சமயம் கோட்டான்கள் வயலில் உள்ள தவளை யையும் பிடித்துத் தின்றுவிடும்.   —– எஸ்.எஸ்.நாகராஜன்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: