Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (07/08)

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது 30; திருமணமானவள். என் அப்பாவுக்கு, இரு மனைவி யர்; இருவரும் சகோதரிகள். என் தாய், இரண்டாவது மனைவி. அம்மாவின் அப்பாவுக்கும், அதா வது, என் தாத்தாவுக்கும் இரு மனைவியர். என் தாத்தா குடு ம்பத்தில் இருந்த ஏராளமான பிர ச்னைகளாலும், குழப்பங்களாலு மே என் தாய், இரண்டாம் தார மாக வாழ்க்கைப்பட நேர்ந்தது.

சொந்த அக்கா குடும்பத்திலேயே வாழ்க்கைப் பட்டதால், குடும்ப பாரம் முழுக்க என் அம்மாவே விரும்பி ஏற்றுக் கொண்டார். என் அப்பா, சாதாரண, குறைந்த சம்ப ளத்தில் வேலை பார்த்து வந்தார். என் அம்மா மேற்கொண்ட சுய தொழில் மூலம், என் குடும்பம் ஓரளவு முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. ஆனாலும், என் அம் மா, நான், என் தங்கை மூவரும் அந்த வீட்டில் வேலைக்காரியை விட, கேவலமாகத் தான் நடத் தப்பட்டோம்.

என் பெரியம்மாவுக்கு ஒரே மகன். அவனுக்கு படிப்பும், வே லையும் சரியாக இல்லை. என் தாய் சம்பாதித்த பணத் தையோ, ஒரு பொட்டு தங்கத்தையோ, என் திருமணத்துக்கு முன் வரை, கண்ணில் கூட பார்த்ததில்லை. என் திரும ணத்தின் போது தான், தங்க செயின் ஒன்றை, என் பெரி யம்மாவின் அனுமதியோடு செய்து போட்டார் என் அப்பா.

பெரியம்மாவும், அவள் பிள்ளையுமே, என் அம்மாவின் சம் பாத்தியம் முழுவதையும் அனுபவித்தனர். இன்று, அனை வரும் திருமணமாகி, தனித் தனியாக இருக்கிறோம். சகல வசதியோடு இருக்கும் என் அண்ணன் வீட்டோடு தங்கி விட்டார், என் பெரியம்மா.

என் அம்மாவும், அப்பாவும் மட்டும் தனியாக ஊரில் வசிக்கி ன்றனர். வயது காரணமாக, என் அம்மாவால் முன் போல் வேலை செய்ய முடிவதில்லை. அப்பாவோ, முதல் தாரத் தையும், அவரது மகனை பற்றி மட்டுமே நினைத்து, சுய நலமாக இருக்கிறார்.

சொத்து, பத்து எல்லாம், என் அப்பா காலத்துக்குப் பின், மூத்த தாரத்துக்கு சென்று விடும். “இப்போதே, மகள்கள் இரு வருக்கும் ஏதாவது செய்ய வேண்டும்…’ என்று, என் தாய் விரும்பி, அப்பாவிடம் கேட்டால், “என் முதல் மனைவி பார் த்து செய்வாள்…’ என்று கூறி விடுகிறார். ஒவ்வொரு சமய மும், என் அம்மா மனம் வருந்தி பேசும் போது, பயமாக இருக்கிறது.

என் அம்மாவை, என்னுடன் வந்து தங்கும்படி சொன்னால், மறுக்கிறாள். என் அம்மாவுக்கு என்ன தான் வழி. சட்டப்படி ஏதும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

உங்கள் பதில் தவிர, வேறு ஆதரவு ஏதும் எனக்கில்லை.
— உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
படித்தால் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அள வுக்கு, குழப்ப நடையில் எழுதியிருந்த உன்னுடைய நீண்ட கடிதத்திலிருந்து, சாராம்சத்தை மட்டும் எடுத்துக் கொண் டேன். நீ எந்த மதத்தைச் சேர்ந்தவள் என்ற விவரமும் இல் லை; இந்து மதத்தை சேர்ந்தவள் என, யூகித்துக் கொண் டேன்.

உன் தாய் முட்டாள் அல்ல; இளிச்சவாய் அல்ல; உறவுகளின் சூழ்ச்சிகளை அறியாத அப்பாவி அல்ல. பிறருக்காக வாழ் நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பது உன் தாயின் பிறவிக் குணம். பண இழப்பை கணக்கிட்டு, உன் தாயை பிழைக்கத் தெரி யாதவள் என விமர்சனம் செய்கிறாய். ஒரு நிலை வரும் வரை, கூட்டுக் குடும்பம் சிதறிப் போகாமல் கட்டிக் காத்திருக்கிறாள். கண்ணியக் குறைவாய் தன்னைப் பற்றி யாரும் பேசிவிடக் கூடாதென்று, மாதர் குல அரசி யாய் திகழ்ந்திருக்கிறாள் உன் தாய்.

உன் வீட்டில் தான் இத்தனை பிரச்னை என்று நினைக் காதே… வீட்டுக்கு வீடு வாசற்படி.

உனக்கு, உன் தாயின் மீது பாசம் அதிகம். வசதி பத்தாத உன் தங்கைக்கு, இன்னும் உழைத்து உதவுகிறார். உழைத்து, உழைத்து உன் தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட் டது. தன் மன வேதனையை, தன் கணவனிடம் கூட வெளி யிடாது, உன்னிடம் தினம், இருபது நிமிடமாவது வெளியி ட்டு, வடிகால் தேடிக் கொள்கிறார் உன் தாய்.

ஒவ்வொரு உயிர் படைக்கப்பட்டதற்கும், ஓர் உன்னத நோக் கம் இருக்கிறது. நோக்கம் நிறைவேறாமல் உன் தாய் இறந்து விட மாட்டார். யார் கண்டது? அவர் பார்க்கும் பணிதான், அவரின் நோவு களுக்கு மருந்தோ என்னவோ!

உன் தாய் போன்ற பெண்கள், தமிழ்நாட்டு குடும்பங்களில் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் இருப்பதால் தான் கூட்டுக் குடும்பம் என்ற நிலைப்பாடும், பண்பாடு, கலாசாரம் என்ற காரணிகளும் நிலைத்து நிற்கின்றன என நம்புகிறேன்.

உரிமையியல் வழக்கு போடலாம்; ஆனால், சாதக தீர்ப்பு பெற நீண்ட நாள் ஆகும். வழக்கு காரணமாக உங்கள் குடும் பங்களில் பிர ச்னை பூத்து, வன்முறை வெடிக்கக் கூடும்; ஜென்மப் பகை தோன் றக் கூடும். உன் தாயின், 31 வருட உழைப்பு சிந்தி சிதறி விடும். விட்டு விடு; மன்னித்து விடு வதே பெரிய தண்டனை.

உன் தாயை, உன் வீட்டில் வைத்து பராமரி. அவர்கள் விரும் பிய வற்றை செய்து கொடு. வெளியூர்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல். கணவன் தராத சந்தோஷத்தை, மகளின் பாசம் தரட்டும்.

உன் தாய் ஒரு வாழும் தெய்வம். அவர் இருக்கும் திசை நோக்கி, வணங்கி மகிழ்கிறேன் மகளே.

—என்றென்றும்
 தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
 (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: