Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும் பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வை த் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தை  யைப் பயன்படுத்துதல். இளம் குழந்தை கள், வளரிளம் பருவ த்தினரும் இதற்கு ஆளாகக்கூடும்.  பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழி யான அல்லது உணர்வு ரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அட ங்கும்…

* பாலியல் நோக்குடன் தொடுதல் அல்லது தடவுதல்
* பெரியவர்களின் பாலுறவுச் செயல்கள் அல்லது பாலுறவுப் படங் களைக் காட்டுதல்
* படம் எடுப்பதற்கோ அல்லது நேரடியாகப் பார்க்கவோ குழந்தை களை ஆடை களைய வைத்தல் அல்லது பாலியல் செயல் செய்து காட்டச் செய்தல்
* குளியலறை, படுக்கைய றையில் குழந்தை இருக் கும் போது மறைந்திருந்து பார்த் தல்
* பாலியல் பலாத்காரம் செய்தல் அல்லது அதற்கு முயற் சி செய்தல்

குற்றம் புரிபவர் மிரட்டி யோ, ஏமாற்றியோ, மிட் டாய் போ ன்றவற்றைக் கொடுத்தோ இவ்வாறு ஒரு குழந் தையைப் பயன்படுத்தக்கூடும். இவ்வாறு செய்பவர்கள் குழந் தைகளை அடித்து மிரட்ட வேண்டிய தேவை அரிதுதான். ஏனெனில், குழந்தைகள் எப்போதுமே பெரி யவர்களின் அன்புக்கும் அங்கீ காரத்துக்கும் ஏங்குகிறார்கள். பெரியவர்கள் செய்வது சரியாக இருக்கும் என்றே கருதுவார் கள். வன்முறையாளர்கள் இதைப் பயன்படுத் திக் கொள்கி றார்கள்.

பாலியல் வன்முறையின் அறிகுறிகள் யாவை?

குற்றம் புரிந்தவரிடம் பயப்படுவதால், தாம் அனுபவித்த வன் முறையை குழந்தைகள் பொது வாகக் கூறமாட்டார் கள். யாரிட மாவது சொன்னா ல் அதற்கு அல்லது அதன் வீட்டில் உள்ள வருக்கு ஏதே னும் தீங்கு செய்து விடுவே ன் என்று குற்றவாளி பயமுறுத் தலாம். குற்றம் புரிபவர் குழந் தைக்குத் தெரிந்தவராக இரு ந்தால், தமக்குள் இருக்கும் ‘சிறு ரகசி யத்தை’ யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லக் கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் நடவ டிக்கைகளில் சில மாற்றங்கள் தெரியும். எனவே பெற் றோரும், கவனிப் பாளர்களும் இவற்றை விழிப்புடனிருந்து கவனிக்க வேண்டும்.

* உறக்கத்தில் பாதிப்புகள்
* பள்ளியில் பிரச்சினைகள்
* குடும்பம், நண்பர்கள் அல்லது வழ க்கமான செயல்களிலிருந்து விலகி யிருத்தல்.

மற்ற பிரச்சினைகள்:

மன அழுத்தம், பதற்றம், கவலை, ஒழு க்கத்தில் பிரச்சினை, போதை மருந்து அல்லது மதுப் பழக்கங்கள், கோபம், எரிச்சல், முரட்டுத்தனம், பாதிக்கப் பட்ட சிலர் வீட்டை விட்டு ஓடி விடு தல் ஆகியவை.

அடிக்கடி பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், அந்த வயதிற்கும் மீறிய பாலியல் பற்றிய தகவல் அல்லது நடத்தையை வெளிக்காட்டு வார்கள். பெரியவர்களின் பாலியல் நடத்தைக ளை செய்துகாட்டுவர். வாயில் விளக்க முடியாத வலி, வீக் கம், எரிச்சல், இரத்தம் கசிதல்; சிறு நீர் உறுப்புகளில் தொற்று, மற்றும் பால் வினை நோய் தொற்றுகள் இருக்கும்.

பாதிக்கப்படும் குழந்தையின் உணர்ச்சி எவ்வாறு இருக் கும்?

பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைக்கு பலவித உணர்ச் சிகள் இருக்கும். குற்றம் செய்தவர் மீதான பயம்; மற் றவர்களி டமிருந்து தான் வேறுபட்டதான உணர்வு; தன்னை பாதுகாக்க வில் லை என்பதற்காக தன்னை சுற்றியுள்ளோர் மீது கோபம்; தனிமை, கவலை, குற்ற உணர்வு, குழப்பம், மற்றும் அவ மான உணர்வு.

பெற்றோர் என்ன செய்ய வேண் டும்?

அக்கறையுள்ள பெற்றோரான நீங் கள் கீழ்க்கண்ட சிலவற்றைச் சொ ல்லிக் கொடுக்கலாம்:

* அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள், மிக அரு மை யானவர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
* சரியான மற்றும் தவறான தொடுதல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குதல்.
* அவர்களுடைய உடல் அவர்களுக்கே சொந்தம், யாருக்கும் அதை பய ன்படுத்தவோ, தீங்கு செ ய்யவோ உரிமை இல் லை என்பதைக் கூற வேண் டும்.
* அசௌகரியம் ஏதும் இருந்தால் எல்லாவற் றையும் பெற்றோருக் குத் தெரிவிக்கக் கூறு தல்.
* குழந்தை பெற்றோரின் மீது நம்பிக்கை வைத்து சம்பவத்தைப் பற்றி பேசும்போது, பெற்றோர் அவர்களுக்குத் தேவையான நல்ல ஆதரவை அளி க்கவேண்டும்.

செய்ய வேண்டியவை:

* அமைதியாக இருங்கள்.
* குழந்தையை நம்புங்கள்.
* ‘உன்னால் தடுக்க முடியவில்லை என்பது எனக்குப் புரிகிறது’, ‘நீ என் னை நம்புவதைப் பற்றி எனக்குப் பெருமை யாக இருக்கிறது’ என்பது போலக்கூறி  நம்பிக்கை ஊட்டுங் கள்.
* குழந்தையின் அந்தரங்கத்தை மதி க்க வேண்டும், வேற்று நபர் கள் முன் அதைப் பற்றிப் பேச வேண்டாம்.
* எந்த நிரந்தர பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய ஒரு மருத்து வரிடம் காட்டவும்.

செய்யக்கூடாதவை:

* பீதியடைவதோ அல்லது அளவுக்கதிக எதிர்வினை காட்டுவதோ கூடவே கூடாது. குழ ந்தைக்குக் கஷ்டமான இந்த நேர த்தில் உதவியும் ஆதரவும் தேவை.
* குழந்தையின் முன்னிலையில் குற்றம் புரிபவரை கண்டிக்க வே ண்டாம்.
* பாலியல் வன்முறை ஒருபோதும் குழந்தையின் குற்ற மாகாது, எனவே குழந்தை மேல் குற்றம் சுமத்த வேண் டாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: