Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜி 5-ன் புதிய 2 சிம் மொபைல்கள்

கூடுதல் வசதிகளுடன், பட்ஜெட் விலையில் மொபைல் போன்க ளை வடிவமைத்துத் தரும் ஜி-5 நிறுவனம், அண்மையில் நான்கு புதிய மொபைல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது. இவை அனைத்து இரண்டு சிம்களை இயக்கக் கூடிய போன்களா கும். முதல் மூன்று போன்கள் G’Five E680, E620 மற்றும் E650 என அழை க்கப்படுகின்றன. அடுத்ததாக G’FIVE G20 என்ற பெயரில் கேம்ஸ் போன் ஒன்று வெளியிடப் படுகிறது.

இதில் G’Five E680 மொபைல் போன், டூயல் ஸ்டேண்ட் பை சிறப்பு டன் கூடிய இரண்டு சிம் போனாகும். 2.2. அங்குல திரை, இரண்டு கேமரா, யமஹா ஆம்ப்ளிபையர், எப்.எம். ரேடியோ பிளே யர், மியூசிக் மற்றும் வீடி யோ பிளேயர் ஆகியன தரப்பட்டுள்ளன. அடுத்த போன் G’Five E620 மேலே கூறப்பட்டுள்ள வசதிகளுடன், அனலாக் டிவி ஒன்றையும் கொண் டுள்ளது. G’Five E650 போன், 2.5 அங்குல வண்ணத்திரையுடன், பிளிப் டைப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த மூன்று போன்களும் மூவி கிங் போன்கள் என அழைக்கப் படுகின்றன. இந்த போன் ஒவ்வொன்று டனும் 4 ஜிபி டேட்டா கார்ட் இணைக் கப்பட்டுத் தரப்படுகிறது. இதில் 20 திரைப்படங்கள் பதியப்பட்டுத் தரப்படுகி ன்றன. இப்போதைக்கு இந்தி, பஞ்சாபி, போஜ்பூரி என அந்த மாநில மொழிகளில் இவை உள்ளன.

G’FIVE G20 மொபைல் போனில், 2.4 அங்குல திரை உள்ளது. இதில் ஆயிரம் வீடியோ கேம்கள் பதிந்து தரப்படுகின் றன. யமஹா ஆம்ப்ளிபையர் தரப்பட்டு ள்ளது.

மேலே சொல்லப்பட்ட நான்கு போன்களின் விலை ரூ. 2,500 முதல் ரூ.3,500 வரை உள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply