Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் . . . (தம்பதியர்களுக்காக)

உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தி யவசிய தே வையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உற வும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உள வியலாளர்கள். அன் பான தாம்பத்யம் ஆ யுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடு பவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதயகோளாறுகள், போ ன்ற நோய்கள் குணமடைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய் வில் தெரிய வந்துள்ளது. மனநோ யினால் பாதிக்கப்பட்டவர்கள் தாம் பத்ய உறவு கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரித்து நோயின் தாக்கம் குறைவதாகவும் அந்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள் ளது.

வயதுக்கு விடை கொடுங்கள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுண ர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை. ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத் திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழு ப்பு, அதிக எடை ஆகியவை உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும்.

மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்வ ரை 50, 60 வயது வரை யிலும் கூடப் பெண்களு க்கு உடலுறவில் ஈடுபா டு இருக்கும். அதனைப் போல, செக்ஸ் ஹார் மோன் டோஸ்டே ரோன் சுரக்கும் 70, 80 வயதுவரை ஆண்களுக்கு உடலுறவில் இச் சையும், ஈடுபாடும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்

மனநிறைவும் திருப்தியும்

உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளை க்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக் கியாகவும் செயல்படுகின் றன. மே லும், அந்தச் சமயத்தில் வெளிப் படும் ஒப்பியட்டுகள் என அழைக் கப்படும் தூக்கக் கலக்கம் கலந்த நிலையையும், உடலில் களைப் பையும் அதே சமயம் முழு மன நிறைவான உணர்வை யும் தருகி ன்றன.

நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல் ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத் தை யும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். ஒரு திருப்தி யான புண ர்ச்சிக்குப் பிறகு உடலும் மன மும் தளர்ந்து ஓய்ந்து தானா கவே தூக்க நிலைக்குப் போய் விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழ கம் கண்டறிந்துள்ளது.

நோய்கள் குணமடையும்

தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தி னால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகி ன்றன. அவ்வாறே உயர் இர த்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்கு ழாய் இறுக்கமும் தளர்த்தப் பட்டு விடுகிறது.

நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக் கும் உடலுறவு நல்ல பல னைத் தருகிறது என்று மருத் துவ ஆராய்ச்சிகள் கூறுகின் றன. டென்ஷ ன், மன இறுக்கம், கவலை, பட படப்பு இவை களுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வய தான பிறகும் தாம்ப த்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கி றார்கள் என் று கூறுகிறது.

எனவே வயது எதுவாக இருந் தாலும் நிறைவான தாம்பத் யமும், உறவும் தொடர்ந் தால் மன நிம்மதிக்கும், உட ல் நல னுக்கும் எந்தக் குறையும் இருக் காது என்பதில் சந்தேகமில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply