Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யாருக்கும் வெட்கமில்லை. . .

ஆகஸ்டு 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

ஆகஸ்டு 15 – இந்திய தேசத்தின் 64 ஆவது சுதந்திர தினம் இது என்று நெஞ்சம் நிமிர் த்தி, தலையை உயர்த் தி, தோள் தட்டி சொல் லிக்கொள்ள நம் எல் லோருக்கும் ஆசை தான்!.

ஆனால் நம் தேசம் இன்று அப்படி பெருமைப்பட்டுக் கொள் ளும் படியாகவா இருக்கிறது? காந்தி தேசம் கரன்சி தேச மாக• . . சுதந்திர இந்தியா சுவிஸ்வங்கி இந்தியாவாக• . . அல்லவா காட்சியளிக்கிறது.

ஊழலுக்காக உள்ளே இருக்கும் ராஜா தன் பிற மந்திரியை யும், பிரதம மந்திரியையும் சகட்டு மேனிக்கு தன் வலைக்குள் இழுத்திருக் கிறார்.

மௌனமாய் இருப்பது முதல் குற்றம். அதை மன்னிக்கலாம். ஆனால் எதிர்க் கட்சிகள் மட்டும் என்ன யோக்கியமா? என்று திருவாளர் பரிசுத்தப் பிரதமர் திருவாய் மலர்ந்து, ஆமான்யா நானும் தான் செஞ்சேன்… நீயும் செஞ்சேல்ல• . . என்று கட்டப் பஞ்சா யத்து அளவுக்கு இறங்கியிருப்பது எவ்வளவு கேவலம்?

தப்பு செய்தாலும், அவ ங்களுக்காக இன்னும் இரண்டு இடம் காலியா கவே இருக்கு என்கிற மத்திய அரசின் கொள் கை இதை விட கொடு மை.

இன்னொரு பக்கம், எடியூரப்பா நீ செய்ததெ ல்லாம் ஊழலப்பா நீ இருப்பது கட்சி க்கு இடையூரப்பா, தயவுசெய்து வெளியோ போயே ம்பா. என்று கருத்தை பிடித்து தள்ளாத குறையாக ஒருவரை வெளி யேற்ற வேண்டியிருக்கிறது.

விலைவாசி ஏறுகிற தென்றால்,… சகித் துக்கொள்ள சொல் கிற அமைச்சர்… தீவிரவாதம் பெரு குகிறதே என்றால், … சென்ற ஆண்டை விட இது குறைவு என்று கவலைப்படுகிறத குட்டித் தளபதி… ஊழலுக்கு எதி ராக சட்டம் கொண்டு வரலாம் என்றால், அதில் யாரைச் சேர்ப்பது, யாரை விடுவது என்கிற விவாதம்….

இப்படி நம் தேசத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை பார்க்கும் போது, யாருக்கும் வெட்கமில்லை… இங்கே எவருக்கும் ரோஷ மில்லை … என்று சொல்லத்தோன்றுகிறதல்லவா?

உரத்த சிந்தனையாளர்களின் இந்த ஆதங்கம் என்று கோப மாக மாறுகிறதோ அன்றுதான் இந்த தேசம் புதிதாய் பொலி வுறும். இந்திய சுதந்திரம் பெருமை பெறும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply