Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடனாளி என்னமோ அமெரிக்காதான்… ஆனால் கைகட்டி நிற்கிறது உலகம்! – ஏன் ?????

அமெரிக்கா எத்தனை பலமாக தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் பரப்பியிரு க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு… இந்த வாரம் கிடைத்தது.

அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுக ளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது.

அது என்ன கடன் தர வரிசை?

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பாங்கு மற்றும் வசதி தான் கடன் தர வரிசை என்று சொல்லப்படுகிறது. கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட் டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் இருந்தது அமெரிக்கா, இதுநாள் வரை.

இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்க ளும் தங்களது பண த்தை அமெரிக்க பங்கு களில் முதலீடு செய்வ தையே மிகவும் பாது காப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செ ய்து வந்தனர். குறிப்பா க சீனா போன்ற நாடு கள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக் கடியில் சிக்கியது. அதா வது அந்த நாடு எவ்வ ளவு கடன் வாங்கலாம் என அந்நாட்டு நாடாளு மன்றம் நிர்ணயித்த அள வை தொட்டுவிடும் அள வுக்கு வந்துவிட்டது நிலை மை.

அதாவது இந்த அளவை தாண்டிவிட்டால் புதிய கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். எனவே அளவை உயர் த்த வேண்டும், அல்லது கடனே வாங்கக் கூடாது. இரண் டாவது சாத்தி யமில்லாத சமாச்சாரம்.

அமெரிக்காவின் கடன் அளவு 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அளவை கட ந்த 2ம் தேதியே அமெரிக் கா தொட்டு விட்டது.

இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர் ணயிக்க வேண்டிய நிலை க்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க் கட்சி யான குடி யரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற் கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.

இது தொடர்பான தீர்மா னத்தை ஆதரிக்க வேண் டுமானால், குடியரசுக் கட்சியினரை தாஜா செய்ய வேண்டிய நிலை.

2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட் டால், எந்த அமைப்பிட மிருந்தும் அமெரிக்கா வால் நிதி திரட்ட முடி யாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவ மனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

ஒருவழியாக ஆக ஸ்ட் 1ம் தேதி குடி யரசுக் கட்சியினர் சமர சமாகி, மேலு ம் 2.5 டிரில்லியன் வரை கடன் வாங் கும் அளவை உயர் த்த ஒப்புக் கொண் டனர். ஒரு தற்கா லிக நிம்மதி அமெ ரிக்காவுக்கு.

ஆனால் புதிதாக முளைத்துள்ள பிர ச்சினை கொஞ்சம ல்ல…

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களை யும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள் ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரண மாக எடுத்துக் கொள்ள வில்லை.

ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொ டுக்காமல் இருந்திருந் தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரு ம் பொருளாதார சிக்கலி ல் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய் தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்தி ருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீட்டு மாளிகை மாதிரி சரிந்திருக்கும்.

இதனால்தான் ஸ்டா ண்டர்ட் அண்ட் புவர் அமைப்பு, அமெரிக்கா வின் தரத்தை AAA வில் இருந்து AA+ என் ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது. இனி ஏகபோகமாக அதிகாரம் செலு த்த முடியாது அமெரிக்காவால். கடன் கொடு என இத்தனை காலம் அதிகாரமாய் கேட்டு வந்த அமெரிக்கா, இனி கெஞ்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரி சை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நா டுகள் முழுவதுமே பயம் பரவி விட்டது.

இதன் விளைவுதான் உலக பங்குச் சந்தைகளில் பெரும் சறுக் கல்கள் தொடர்கின்றன. இந்திய பங்குச் சந்தைகளான மும் பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சறுக்கு சறுக்கின. இன்றும் அந்த சறுக்கல் தொடர்ந்தது.

அது ஏன் அமெரிக்காவில் தேள் கொ ட்டினால் இந்தியாவில் நெறி கட்டுகி றது?

டப்புதான். அமெரிக்கா மூலம் அவ்வளவு வருமானம் ஆசிய நாடுகளுக்கு. இந்த நாடுகளைத்தானே அமெரிக்கா பல விஷ யங்களுக்கு நம்பி இருக்கிறது. கொஞ்சம் பச்சையாக சொன்னா ல், முதலாளி சறுக்கி விழுந்தால் கூலிகளி ன் நிலைமை என்னா கும்… அதேதான் இப் போது நடக்கிறது!

இந்த பாதிப்பு தனி நபர் கள், நிறுவனங்களோடு நின்று விடு வதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதே உண்மை.

பங்குச் சந்தைகள் இப்படி சரிந்து கிடப்பதால், இப்போதைக்கு எல்லோருமே தங்கத்தில் முதலீடு செய்யக் கூடும். எனவே இன்னும் சில மாதங்கள் – வருடங்க ளுக்கு வரலாறு காணாத விலை உயர்வு என தங் கம் பற்றி செய்தி படித்துக் கொண்டி ருக்க வேண்டி வரலாம்!

எனவே இப்போது நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அமெரிக்கா நல்லாயிருக் கணும் என்று பிரார்த்திக்க வேண்டிய நிலைமை வந்திருக் கிறது!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: