Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை

பச்சை தத்துப்பூச்சி: இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சி கள் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் முதலில் மஞ் சள் நிற மடைந்து பின் னோக்கி வளைந்து சுருங் கிவிடும். தாக்குதல் தீவிர மடையும் பொழுது பூச்சி யின் எச்சில் காரணமாக இலையின் ஓரங்கள் செங் கல் நிறத்திற்கு மாறி தீ யில் கருகியது போல் காணப்படும். இலைகள் முற்றிலும் சுருங்கி உதிர்ந்து விடும். பயிர் வளர்ச்சி குன்றுவதால் மகசூல் பாதிக்கப்படும். முன் பட்ட பருத்தியில் தாக்குதல் அதிகள வில் இருக்கும்.

அசுவினி: பசுமை கலந்த பழுப்பு நிற த்தில் காணப்படும் அசு வினி பூச்சி செடியின் இளம் தண்டு, கொழுந்து மற் றும் இலை யின் அடியில் கூட்டமாக அமர்ந்துகொண்டு சாற்றை உறிஞ்சி குடிக்கும். தாக்குதல் தீவிர நிலையை அடையும் பொழுது இலைகள் சுருங்கி வளர்ச்சி குன்றி காணப்படும். இளம் செடிகள் படிப்படியாக காய்ந்துவிடும். பூச்சிகள் அளவுக்கதிகமான சாற்றை உறி ஞ்சி குடித்தபின் எஞ்சியதை இனிப்பு கழிவுகளாக கீழ்புறமு ள்ள இலையின் மேற்புறத்தில் வெளியிடும். இனிப்பு கழிவு களை உண்பதற்காக வரும் எறும்புகள் அசுவினியை மற்ற பூச்சிகளின் தாக்கு தலிலிருந்து பாதுகாக்கும். இனிப்பு கழிவுகள் மீது கரும் பூசணம் படர்ந்து இலையின் ஒளிச்சேர்க்கையை பாதிக் கும்.

வெள்ளை ஈ: பருத்தி பயிரி டக் கூடிய பகுதியில் பரவ லாகக் காணப்படுகிறது. வெள்ளை ஈக்கள் கூட்டமாக இலையின் அடியில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் இலைகளில் மஞ்சள் நிறப்புள் ளிகள் நரம்பிலிருந்து ஓரத்தை நோக்கி செல்லும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் சப்பைகள், மொக் குகள் உதிர்ந்துவிடும். பூச்சிகள் வெளியேற்றும் கழிவுகளால் கரும் பூசணம் படர்வதால் ஒளிச்சேர்க்கை தடைபடும். இலை சுருங்கல் எனப்படும் நச்சுயி ரி நோயை பரப்புவதற்கு காரண மாக வெள்ளை ஈக்கள் உள்ளன.

மாவுப்பூச்சி: மாவுப்பூச்சிகள் கோ டை காலத்தில் பருத்தி பயிரை தாக்கி பெரும்ளவில் மகசூல் இழ ப்பை ஏற்படுத்துகின்றன. மாவுப் பூச்சியின் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் பருத்தி பயிரைத் தாக்கி சாற்றை உறி ஞ்சுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமடையும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

1. தாக்கப்பட்ட செடிகள் மற் றும் களைச்செடிகளை பூச்சி கள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்க வேண்டும்.

2. களைகளை அகற்றி வயல் களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

3. நன்மை செய்யும் பூச்சிகளா ன பொரிவண்டுகள், நீல வண் ணத்துப் பூச்சி போன்றவை இருக்கும்பொழுது பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும்.

4. விதைப்பிற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 7 கிராம் இமிடாகுளோ பிரிட் 70 டபிள்யூஎஸ் மருந்தை கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் எட்டு வாரங்களுக்கு பருத்தி செடியை சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலில் இரு ந்து பாதுகாக்கலாம்.

5. இமிடாகுளோபிரிட் 200 எஸ்எல் 40மிலி, பாஸ் போமி டான் 40 எஸ்எல், 240 மிலி, டைமெத்தோயேட் 30 இசி 200 மிலி, மெத்தில் டெமட்டான் 25இசி 800மிலி, வேப்பங் கொட்டை கரைசல் 5 சதம் (10 கிலோ வேப்பங் கொட்டைக்கு 200 லிட்டர் தண்ணீர்) போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன் றை ஒரு ஏக்கருக்கு தேவையான தண்ணீரில் கலந்து தெளித்து அசுவினி, இலை ப்பேன், பச்சை தத்துப் பூச்சிகளை கட் டுப் படுத்தலாம்.

6. பாசலோன் 35 இசி 1000 மிலி, குயி னால்பாஸ் 25 இசி 800 மிலி டிரைய சோபாஸ் 40 இசி 800 மிலி, அசிபேட் 75 எஸ்பி 500 கிராம், மெத்தில் டெ மட்டான் 25 இசி 800 மிலி, மீன் எண் ணெய் சோப்பு ஒரு லிட்டருக்கு 25 கிராம், வேப்பங் கொட் டை கரைசல் 5 சதம், வேப்ப எண்ணெய் 1 லிட்டர் நீருக்கு 5 மி.லி. போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்க ருக்கு தேவையான தண்ணீரில் கலந்து தெளித்து வெள்ளை ஈக் களை கட்டுப்படுத்த லாம்.

7. மாவுப்பூச்சியின் குஞ்சுக ளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப் ப எண்ணெய் 20 மிலி. (அ) வேப்பங்கொ ட்டைச் சாறு 5 சதம் (அ) மீன் எண்ணெய் சோப்பு 25 கிராம் கலந்து தெளிக்கவும். முதிர்ந்த பூச்சிகளை கட்டுப்படுத்த அசிபேட் 2 கிராம் (அ) டைமெத்தோயேட் 2 மி.லி. (அ) மெத்தில் டெமட்டான் 2 மிலி (அ) புரோபனோபாஸ் 2 மிலி (அ) குளோர்பைரிபாஸ் 5 மி.லி.ஐ ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

ஜட்டா கவிதா, சி.விஜயராகவன்,
வேளாண்மை அறிவியல் நிலையம், ராமநாதபுரம்-623 503.
மற்றும் ப.பாலசுப்பிரமணியன்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
செட்டிநாடு-630 102.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: