Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மன அழுத்தம் ஏற்படும் காலங்களில்…

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை

தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட் டில் மற்றும் வெளியி டங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இத னால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ் வொரு கட்டத்திலும் எதிர் த்துப் போராடலாமா? அல்லது எழுந்து ஓட லாமா? என்ற கேள்வி!

இதையே ஆங்கிலத்தில் “ஸ்ட்ரெஸ்” (STRESS) அல்லது “டென்ஷன்” என்று கூறுகிறோம். மன அழுத்தம் ஏற்படும் காலங்களில் மூளையி லிருந்து “பிட்யூட்டரி க்கு சடஸால்” என்ற பொருளை ரத்தத்தில் தள்ள செய்தி வருகிற து. இதன் பிறகு உடலி ல் உள்ள மற்ற உறுப்பு கள், நிலைமையைச் சமாளிக்கத் தயாராகின் றன. “அட்ரீனல்” என்னு ம் ஹார்மோன் நம் நாடித் துடிப்பையும், ரத் த அழுத்தத்தையும் அதி கரிக்க செய்து நாம் மூச் சு விடுவதற்குக் கஷ்டப் படும் ஓர் நிலைமை யை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் டென் ஷன் ஏற்படுத்தும் அந்த செயல் ஒன்றுமில்லாமல் மறைந்து விட்டாலும், உடலினுள் ஏற்பட்ட மாறுதல்களும் தங்கி விடு வதுண்டு. இதுவே மீண்டும் மீண்டும் நடைபெறுமேயானால் அது ரத்த அழுத்த நோயை யும், நரம்புத் தளர்ச்சியை யும் ஏற்படுத்தி இளமை யைக் கெடுத்துவிடுகின் றன.

கவலை வேண்டாம்:

“என்னது? கவலையில்லா த வாழ்க்கையா? என்ன விளையாடுகிறீர்களா?” என்று கேட்காதீர்கள். வாழ்க்கையும், கவலை யும் நகமும், சதையும் போல! கவ லையைச் சமாளித்து, நம் உடலில் ஏற்படும் மாறுதல்க ளைத் தவிர்த்து இளமையாக வாழ வேண்டும்.

டென்ஷன் நமக்கு மூன்று நிலை களில் ஏற்படுகிறது.

இதில் முதல் நிலை –பயம். இர ண்டாம் நிலை –சமாளித்தல் அல் லது எதிர்த்தல். மூன்றாம் நிலை -முதல் இரண்டு நிலை களைத் தாண்டி வருவதினால் ஏற்படும் அயர்ச்சி. இந்த மூன்று நிலை களில் எந்த ஒரு நிலையை நாம் தடுத்து நிறுத்தி னாலும் அது நம் உடல் நிலையைப் பாதிக்கக் கூடும். அதற்கு பெரும்பாலும் நேரமின்மை காரணமாகிறது.

தியானம்:

“ஸ்ட்ரெஸ்”ஸினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்தால் அது நம் இளமையைப் பாதுகாக்கப் பெரிதும் உதவுகிறது. இதைச் செய்ய பலமுறைகளைக் கையாளலாம். அதில் முக் கியமானது தியான ம். ஆழ்ந்த நிலையில் மனதை ஒரு முகப்ப டுத்தி தியானம் செய் யும்பொழுது கீழான குணங்கள் நம்மை விட்டு அகல்கின்றன. நிரந்தர அமைதியை த் தந்து முகத்திற்கு ஒரு தனி தேஜஸை ஏற்படுத்துகிறது. பணம் கொடுத்தாலும் வாங்க முடி யாத இந்த வசீகர அழகை முய ற்சியால் அடையலாம். புற்றீசல் போல் பெருகிவரும் தேவை களினால் உண்டாகும் பிரச்சி னைகளால் நம் அழகும், ஆரோக்கியமும் குலையாமல் இரு க்கச் செய்யலாம்.

தியானம் என்பது எங்கோ காட்டிற்குச் சென்று உட்கார்ந் து செய்வது அல்ல. நம்முள் இருக்கும் ஒப்பற்றச் சக்தி யை எழுப் புவதற்குச் செய்யு ம் முயற்சிதான் அது. எந்த ஒரு விஷயத்தையும் பிரச்சி னையாகக் கருதி அல்லல்ப டாமல் அன்றா டம் நடக்கும் ஒரு சாதாரண செய்கை என வும், அதை நம்மால் சுலப மாகச் சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கை யையும் தியானம் நமக்குக் கற்பிக்கிறது. சந்தடிகள் அற்ற விடியற் காலை அல்லது இரவு வேளைகளே தியானம் செய் வதற்கு உகந்த நேரம்.

உணவு:

உள்ளத் தூய்மைக்கு உணவுத் தூய்மை அவசியம். அளவோ டு தாவர வகை உணவுகளை உண் பது சிறந்தது என்பதை விஞ்ஞா னிகள் கண்டு பிடித்துள்ளனர்.

நீச்சல், ஓடுதல், விளையாடுதல் (போட்டிக்காக அல்ல), உடற்பயி ற்சி செய்தல் ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை யாவது தினமும் செய்ய பழகிக் கொள்வது அவசிய மாகும். இதை அன்றாடம் செய்ப வர்களுக்கு டென்ஷனை சமாளி க்கும் சக்தி ஏற்பட்டு, உடல் உறுதி ப்பட்டு விடுகிறது. தோலில் எளிதில் சுருக்கங்கள் ஏற்படுவதி ல்லை. டென்ஷனால் ஏற்படும் நரை போன்வற்றையும் ஓரளவுக்கு தவிர்த்து இள மையாக வாழலாம்.

வீட்டில் ஏற்படும் டெ ன்ஷன் பெரும்பாலும் நாம் செய்யும் காரியங் களை செவ்வனே செய்யாததினால் ஏற்ப டுகிறது. நமக்கு ஏற்ப டும் பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றி னை சில ஒழுங்கு முறைகளைக் கடை பிடிப்பதன் மூலம் தவிர் க்கலாம். அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்மணி கள், தங்களது வேலைகளை வீட்டிற்கு க் கொண்டு வரு வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் செய்ய வேண்டிய அன்றாட வேலைகளை யும், திடீரென்று தோன் றும் வே லை களையும் மறந்து விடாமல் இருக்க, அதை ஒரு இடத்தில் எழுதி வைத்துக் கொள்ள பழகு ங்கள். இதற்காக ஒரு போர்டை (பலகை) பயன்படுத்தலாம். அதில் மற்றவர்க ளையும், அவர்கள் கொடுக்கும் அன்றாட வேலைக ளையும் எழுதி வைத்துவிட்டு போகச் சொல்லுங்கள். இத னால் எதை யாவது மறந்து விட்டோமா? என்ற கவலையோ, டென்ஷ னோ ஏற்படாது. வீட்டில் ஒவ்வொரு இடத்தையும் ஒவ் வொரு நாள் என்று தூய்மைப்படுத்த திட்டமிட்டால், “வீடு குப்பையாக உள்ளதே, இ தை எப்படி சீர்படுத்துவது?” என் று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படாது. உங்களால் செய்ய முடியாத வேலைகளைத் தலையில் போட்டுக் கொண்டு எப்படிச் செய்வது? என்ற கவ லை யையும், டென்ஷ னையும் தவிர்க்கலாம். முடிந்ததை செய் யலாம், அதன் மூலம் நிறைவு பெறலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்ம ணிகள் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலை ஏற்படுவதினால் தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை உண்டாவது இயல் பே. இதைத் தவிர்க்க அவர்கள் அவ்வப்பொழுது உடலுக்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வது அவசியம். எந்த வே லையைச் செய்யும்போதும் அ தை ஆசையோடும், ஆவலோடு ம் செய்யுங்கள். இதனால் டென் ஷனையும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் தவிர்க்க லாம்.

மனநலம் என்பது வேறு:

னநலம் என்பது சில விதி முறைகள் மற்றும் அம்சங் களை உள்ளடக்கியதாகும். அது விரும்பப்படும் ஒன்றா கும். அதை முயற்சி செய்து அடையலாம். மாறுபடக் கூடியதல்ல. உலக த்தில் எந்த மூலைக்குச் சென்றா லும் ஏற்புடையதாக இருக்கு ம். எல்லாக் கலாச்சாரமும், வழிமுறை, நடைமுறை பிராந்தியம் என்ற அனைத் திற்கும் பொதுவானதாகும்.

ஆனால் நார்மல் என்பது பெரும்பான்மையை வைத்து முடி வுச் செய்யக் கூடிய ஒன்றாகும். சௌகரியத்தை வைத்து, வசதியை வைத்து, ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். என வே நார்மல் மாறுபடக் கூடிய தாகும்; வேறுபடக் கூடியதா கும்.

அது பற்றி விரிவாக பார்ப் போம்:

1. தன்னைப் பற்றி தெரிந்திருக் க வேண்டும்.

2. ஏனையரோடு சுமூகமாக உறவாடத் தெரிந்திருத்தல்.

3. செய்கைகள் அனைத்தும் தனக்கும், மற்றவருக்கும் பயன் படுவதாக இருத்தல்.

இந்த மூன்று அம்சங்களும் மனநலத்தின் அடிப்படைத் தேவைகளாகும். யார் ஒருவர் மேற்கூறிய மூன்று அம்சங்க ளையும் பெற்றிருக்கி றார்களோ அவர்களை மனநலம் உள்ளவர்க ளாக ஏற்றுக் கொள்ள லாம்.

யார் ஒருவருக்கு தன் னைப் பற்றி தெரிந்திருக் கவில்லையோ அவருக் கு மனநலம் பாதிக்கப் பட்டுள்ளது என்று உறுதி யாகக் கூறலாம். ஒருவரின் செய்கை அல்லது காரியம் அவ ருக்கோ, மற்றவர்களுக்கோ சங்கடத்தையும், சஞ்சலத்தை யும் விளைவிக்குமேயானால் நிச்சயம் அந்த நபர் மன நல பாதிப்புக்குள்ளாகி இ ருக்கிறார் என்று உறு தியாகக் கூற லாம்.

இந்த ஆதார அடிப்படை களை பாதுகாத்து வந் தோமேயானால் அனை வரும் மன நல த்தோடு, மகிழ்ச்சி யோடு வாழ வழி வகை கிடைக்கும். இப்படிப் பட்ட மனதை புறந்தள்ளிவிட்டு மருத்துவம் செய்ய முடி யாது என்பதுதான் ஹோமியோ தத்துவம். மருத்துவரிடம் உங்கள் மனதைச் சொல்லுங்கள்.

டென்ஷனால் உடலில் பல உபாதைகள் ஏற்படு கின்றன. உபாதைகள் இளமையை அழிக்கின் றன. ஆகவே நாம் உபா தைகளைத் தவிர்த்து இளமையோடும், புத்து ணர்ச்சி யோடும் வாழ் வது நம் கையில்தான் இருக்கிறது. மனதில் தான் இருக் கிறது மனதால் உடலில் வரும் நோய்களுக்கும், பயம், பதட்டம், பரபரப்பு ஆகியவ ற்றை குறைக்கவும், குணப்படுத் தவும் ஏராளமான ஹோமி யோபதி மருந்துகள் உள்ளன. இம் மருந்துகள் நோயை பக்க விளைவுகள் இன்றி கட்டுப்படுத்து கின்றன என்பது சிறப்பு அம்சமாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: