Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வண்ண, வண்ண வளையல்கள் அணிய சில முறைகள்

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே… வளையல் கள் அணியும் போது, அதற்கெ ன சில முறைகள் உண்டு. அது தவறும்போது, அழகை குறை த்து விடவும் கூடும். முதலா வது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாது காப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிரு ந்து பாதுகாக்கலாம். பொருளின் உபயோகக் காலமும் கூடும். அடு த்து, நாம் அணியும் ஆடைகளுக்கு, பொருத்தமான வளையல்க ளைத் தெரிவு செய்ய வேண்டும். இன்று, சந்தை யிலே பலவித வளையல் கள் அறிமுகம் ஆகிக் கொ ண் டேதான் இருக்கின்றன.

உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களி ல், கை நிறைய வளையல் களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள், அளவாக வளை யல் போடலாம். ஜீன்ஸ் அணியும் பட்சத்தில், ஓரிரு வளையல் களை போட்டால், எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆ டைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ, அத்தனை வர்ணத் திலும், ஒவ் வொரு வளையல் தெரிவு செய் து அணியும்போது, அது, அழகா கக் காட்சி தரும். விசேஷங் களுக்கு அணியும் வளையல்கள், கொஞ்சம் மினு மினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளை யல்கள், பட்டுச் சேலைக்கு பொருத்தமாய் இருக்கும். எப்படியும், ஒற்றை வளையல் அணியும் போது, விரல் களுக்கு மோதிரங்களை குறைத்துப் போட வேண்டும். குட்டையான பெண்கள், தங்க வளை யல் அணிவதாக இருந்தால், பட்டை யான அமைப்புடன் கூடிய வளையல்களாக இருந்தால், குறை ந்தது, நான்கு வளையல்கள் அணி ந்தால் நன்றாக இருக்கும். உயரமா னப் பெண்கள், பட்டையான வளை யல்கள் அணிந்தால் நன்றாக இரு க்காது.

இவர்கள், இரண்டு மெல்லிய வளையல்கள் அணிந்தால் நன்றாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: