Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு: விதிமுறை தளர்வு எப்போது?

தமிழகத்தில் புதிய ஆட்டோக்களுக் கான பெர்மிட் பெற விதிக்கப் பட்டு ள்ள தடையை நீக்கவேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள், விற்ப னையாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தமிழக சட்ட பேரவை தேர்த லையொட்டி அமல்படுத்தப் பட்ட விதிமுறைகளின்படி புதிதாக ஆட் டோ க்களுக்கு பெர்மிட் வழங்க தடை விதித்து கடந்த மார்ச் 8ம் தேதி தேர்தல் அதிகாரி பிர வின்குமார் உத்தரவிட்டார். தேர்தல் முடிவு கள் வெளிவந்த பின்னர் தடை நீக்கப்பட்டு பெர்மிட் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வராக ஜெ.,பொறுப்பேற்ற பின்னர் 10 நாட்கள் மட்டுமே அனு மதிக்கப்பட்ட ஆட்டோ பெர்மிட் பின்னர் உடனடியாக நிறுத்தப்பட் டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் டீசல் ஆட்டோக்க ளால் மாசுஏற்படுவதை தடுப்பதற்காக எல்.பி.ஜி.,கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனு மதி வழங்கப்படுகிறது. மற்ற மாவட் டங்களில் டீசல் ஆட்டோக்கள் இய ங்குகின்றன. அரசு பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஆட் டோக்களின் சேவையும் இன்றிய மையாததாகிவிட்டது. வேறு தொ ழில் இல்லாதவர் கள் ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலையில் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் இல்லாததால் பலரும் ஏற்கனவே பெர் மிட் வைத்துள்ள ஆட்டோக்களுக்காக கூடுதலாக 70 ஆயிரம் ரூபா ய் வரை கொடு த்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பஜாஜ், மகிந்திரா, டிவிஎஸ், பியாஜி யோ உள்ளிட்ட ஆட்டோ தயா ரிப்பு நிறுவனங்கள் மாதம் ஒன் றிற்கு சுமார் 3 ஆயிரத்து 500 ஆட்டோ க்களை தயாரிக்கின் றன. இவற்றிற்காக கோடிக்கணக் கில் வரியும் செலுத் தப் படுகிறது. தற்போது பெர்மிட் வழ ங்காததால் புதிதாக ஆட்டோ க்கள் வாங்கியவர்களின் நிலை சிக்கலில் உள்ளது. தமிழக அர சின் திட்டங்களின்படி தாட்கோ, டிட்கோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட்டோ வாங்கி தொழில் செய்ய கடனுதவி கிடைத்தும் கூட பெர்மிட் இல்லாததால் புதிதாக ஆட்டோ வாங்கி ஓட்ட முடியாத நிலையில்< உள்ளனர். இதுகுறித்து தமிழக போக்கு வரத்து துறை அமைச்சருடன் பல்வேறு தரப்பினரும் நேரடியாக கோரிக்கை விடு த்துள்ளனர். தமிழகத்தில் போலீசார் உள்பட ஆட்டோவை தொழிலாக செய்பவ ர்கள் ஒரு நபரே பல ஆட்டோக்களை

இயக்குவதற்கு எதிர்ப்பு உள்ளது. இதனை தடுக்க அரசு புதிய விதி முறைகளை அறி முகப்படுத்தியாவது முறைகேடுகளை தடு க்க வேண்டும். இருப்பினும் ஆட்டோக் களுக்கு பெர்மிட் வழங்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply