Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விலை மாதர் உடல் உறவால் வரும் நோய்கள் ?

ஓர் இணையத்தில் கண்டெடுத்தது

விலை மாதர் உடல் உறவால் பிறப்புறப்பில் வரும் நோய்களுக்கு- பால்வினை வியாதிகள் என்று பெயர்.

20க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் மனிதனை நாசம் செய்ய காத்து இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு விலைமாதர் உடல் உறவா ல் ஒரு பால்வினை நோய்தான் வரும் என்பது சரி அல்ல. ஒன்று க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள், ஒரு விலைமாதர் பிறப் புறப்பில் குடி இருக்கலாம். அதன் மூலம் அவளுடன் உடல் உறவு கொள்ளும் போதும், அவனுக்கும் பிறப் புறுப்பில் பல பால்வினை நோய்கள் தொற்றி தொல்லை கொடுக்கலாம். அத்து டன் எச்.ஐ.வி. நுண்கிருமியும் தொற்றி மறைந்து வாழ லாம். இப்படி 3 இன் 1 என்றும் சொல்லும்படியாக ஒருவன் பிறப் புறுப்பில் மூன்று க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் தொற்றி, அல்ல ல்பட்டு வைத்தியம் பார்க்க வந்தவன் கதை இது.

கோபால் என்பது அவது பெயராக இருக்கட்டும். கோயம்புத்தூர் அரு கில் இருக்கும் சூலூர் என்பது அவன து சொந்த ஊர். அவன் ஒரு லாரி டிரைவர். கோயம்புத்தூருக்கும், மும் பைக்கும் பம்பு செட் சாமன்களை ஏற்றி இறக்கி விட்டு, வருபவன். மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு தடவை அப்படி மும்பைக்கு சரக்கு ஏற்றிப்போனான். இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண் டியதாகி விட்டது. அவனது நண்பன் ஒருவன் மும்பை விலை மாதர்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டிப் போய்விட்டான். அந்த “சிவப்பு விளக்கு” ஆந்திரா அழகி கோவிந்தம்மாளுடன் உடல் உறவு கொண்டு விட் டான். அவளோ பல ஆடவர்களுடன் உறவு கொண்டு, பலவித பால்வினை நோய்களைத் தன் பிறப்புறுப் பில் குடி வைத்து வாழ்பவள். அவளுடன் உடல் உறவு கொண்ட கோபால் மகிழ்ச்சியில் ஊர் திரும்பினான். சில நாட்களில் அவனது மகிழ்ச்சி மறைந்து துன்பம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வாரத்திற்குள் சிறுநீர் கடுக்க ஆரம்பித்தது. சிறுநீருடன் மோர் மா திரி திரவமும் வடியத் தோன்றியது. சில நாட்டு, காட்டு பொலி மரு த்துவர்களை நாடி லேகியம், சூரணம், மாத்திரை எனச் சாப் பிட்டு, சில நாட்களில் சிறு நீர்க கடுப்பை தற்காலிகமாக நிறு த்தி வைத் தான். 3-4 மாதம் ஆகி விட்டது.

இப்போது கோபாலின் ஆண் குறி யின் முன்பகுதியில் சிறு கட்டி போன்று தோன்றி “சீழ்” வைத்து “விண்… விண்…” என்று தெரித்து தொல்லை கொடுத்தது. சிறுநீர்க்கடுப்பும், மறுபடியும் தோன்றத் துவங்கியது. இந்த நிலையில் நல்ல வைத்தியம் பார்த்து குணம் பெற மருத்துவமனைக்கு வந்தான். பாலியல் சிறப்பு டாக்டர் முறை யாக அவனைச் சோதித்துப் பார்த்தபோது, கீழே விவரித்துள்ள பல பால்வினை நோய்கள் தாக்கியிருப்பதை அறிந் தார்.

ஒரு குளத்தில் கிணற்றில் பல்விதமான விஷப் பூச்சிகள் இருப்பது போல் கோவிந்தம்மாள் பிறப் புறுப்பு கிணற்றிலும் பலவித பால் வினை நோய் கள் வாழ்ந்து கோபாலுக்கு தொற்றிவிட்டது. அவை கள்

urethral stricture

1. டைசன் சுரப்பி அழற்சியால் தோன்றிய கட்டி (Tyson gland abscess)

2. சிறுநீர்த்தாரை அடைப்பு (urethral stricture)

3. பிறப்புறுப்பு “மருப்பு” (genital warts)

4. அக்கிக் கொப்பளங்கள் (genital herpes)

5. விதைப்பையில் சிறு கட்டி (sebaceous cyst)

1. டைசன் சுரப்பி அழற்சி

பொதுவாக வெட்டை நோய் (gonococcal infection) ஒருவனுக்கு சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை போ ன்றவற்றைத் தாக்கி சிறு நீர்க் கடுப்பை உண்டாக்கும். ஆண் குறியின் “மலர்” பகுதியில், உட ல் உறவுக்கு “பிசு பிசு” என எண் ணெய் மாதிரி திரவம் சுர் ந்து, உதவி புரியும் சுரப்பி ஒன்று உள் ளது. இதற்கு ‘டைசன் சுரப்பி’ என் று பெயர். இந்த டைசன் சுரப்பி யை வெட்டை நோய்க் கிருமிகள் தாக்கி உள்ளே புகுந்து, சுழற்சி யாக்கி, சீழ் வைத்து கட்டியாகி வேதனை கொடுக்க ஆரம் பித்து விட் டது. இந்தக் கட்டி ஆண்குறியின் முன்புறத்தோலிலும் முன்புறத் தோலை மடக்கி முகைப் பகுதியை பார்த்தபோது, இழு மடி என்ற ஃபிரினம் பகுதியில் இருந்த கட்டி சீழ் வைத்து , வலி கொ டுத்து, பின் அதுவாகவே உடைந்து சீழ் வெளியேறியது. இழுமடி யில் இருந்த “சீழ் கட்டி” மறையவில்லை. வலி கொடுத்தது.

2. சிறுநீர்த்தாரை அடைப்பு

வெட்டை நோய் கோனக்கால் கிருமிகள், சிறுநீர்த் தாரையில் உள்ள “ம்யூக்கஸ்” என்ற ‘சவ்வுப் பகுதியை’ தாக்கி அழற்சி ஏற்படுத்தி, அதைத் தடித்த கனமான இறுகிய குழ யாக மாற்றி சிறுநீர்த் தாரையில் அடைப்பு உண்டாக்கிவிட்டது. இதனால் சிறுநீர் வர த்தடை ஏற்பட்டது. சிறுநீரும் கடுத்து, தீயாக எரிந்து வரும்.

3. பிறப்புறுப்பு மரு

இந்த நோயைக் கொடுக்கும் நுண் கிரு மியின் பெயர் “ஹ்யூமன் பாப் பில்லோ மா வைரஸ்” என்பதாகும். இந்த “விஷ மருக்கள்” நோயும், பம்பாய் அழகி மூலமாகத்தான் கோபால் பெற்று இருக் கிறான். இந்த மருக்கள் அவனது பிறப் புறுப்பில் ஆண் குறியின் மலரின் அடிப் பாகத்தில் இழுமடிக்கு இடது புறத்தில் சிறு சிறு தடித்த பருப்புகள் போல் வள ர்ந்து இருந்தன.

4. அக்கிப்புண்கள்

இந்த விஷ அக்கிப் புண்கள் ஹ்யூமன் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் என்ற நுண்கிருமியால் வருவதாகும். இந்த விஷக்கிருமிப் புண்களும், அவனது மல ரின் அடிப்பாகத்தில் உயர்தளத்தின் வல து புறத்தில் கொத்துக் கொத்தாக கும்ப லாக சிவந்த நிறத்துடன், அடித்தளம் இல்லாத புண்களாகத் தோன்றி சிரித்த ன. இந்த மூன்று வியாதி களும் அவன து பிறப்புறுப்பில் தோன்றி தொல்லை கொடுத்தன. அரை இடுக்குக ளில் வலிக்காத, உறுதியான நகர்த்தக் கூடிய இரண்டு நெறிக் கட்டி கள், அரைப்பகுதி நிணக்கணுக்கள் வலது புறமும் இடது புற மும் இருந்தன.

அத்துடன் விரைப்பையில் இடது புறத் தோலில் உறுதியான, சிறு தடித்த கட்டி அளவு தோன்றி இருந்தது. அதை ஊசி மூலம் துவாரம் செய்த போது அந்த சிறு கட்டியில் இருந்து வெண்ணெய் மாதிரி யான திரவம் வடிந்தது. அதைச் சோதி த்துப் பார்த்தபோது அது செபேசிய்ஸ் சிஸ்ட் எனப்தும் அதில் உள்ள நுண் கிருமிகள் ஸ்டியட் டோசைட் டோமா சிம்ப்ளெக்ஸ் என்பதும் தெரிந்தது.

பரிசோதனைகள்:

1. கிராம் ஸ்டெயினிங் பரிசோதனை செய்தல். வெட்டை நோய்க் கிருமிகள் கண்டறிய.

2. ஆண்டிஜன் டிடெக்ஷன் சோதனை. கிளாமிடியா கிருமிகள் கண்டறிய.

3. சானக் ஸ்மியர் அக்கிப் புண் களின் திரவத்தில் தயாரித்து ஸ்டெயின் கலந்து பரிசோத னை. பல உட்கருக்கள் கொண் ட பெரிய செல்கள் இருப்பது அறிய.

4. ஐஜீஜி. ( IgG). ஐஜீஎம் பரி சோதனை. ஹெர்பிஸ் கிருமி களுக்கு எதிரான ஆன்டிபா டீஸ் இருப்பதை அறிய.

5. வி.டி.ஆர்.எல். (VDRL) பரிசோதனை. சிபிலிஸ் கிருமிகள் இருப் பது உறுதிப் பட அறிய

6. டி.பி.எச்.ஏ. (TPHA) சோதனை. சிபிலிஸ் கிருமிகள் இருப்பது

TPHA Test

உறுதிப்பட அறிய

7. எலிசா சோதனை. எச்.ஐ. வி எய்ட்ஸ் நோய் அறிய.

இப்படி மேலே குறிப்பிட்ட பரிசோதனைகள் அனை த்தும் செய்து கீழே கண்ட நோய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

1. கோனக்காக்கல் கிருமிகள் மூலம்.

a) வெட்டை நோய் ( நீர்க்கடுப்பு)

b) டைசன் சுரப்பு சீழ் கட்டி

c) நீர்த்திரை அடைப்பு

2. ஹெர்பிஸ் கிருமிகள் மூலம். அக்கி ப்புண்கள்

3. ஹ்யூமன் பாப்பில்லோமா கிருமிகள் மூலம் விஷ மருக்கள்

வைத்திய முறைகள்:

இந்த மூன்று வியாதிகளும், கோவிந்தம்மாள் மூலம் கோபால் பம் பாயில் இருந்து வாங்கி வந்தவைகள் என்பது உறுதிபடத் தெரி ந்தது.

1. டைசன் சுரப்பி கட்டிக்கும், நீர்க் கடுப்புக்கும்- மிக உயர்ந்த ஆண்டி பயாடிக் உதாரணம்: அசித்ரோமை சின் தினம் என ஒருவாரம் கொடு க்கப்பட்டது. குணம் தெரிந்தது.

2. அக்கிப்புண்களுக்கு…: ஆன்ட்டீ வை ரஸ் மருந்துகள் கொடுக்கப் பட் டது. உதாரணம்: ஏசைக்லோவிரி தினம் 3 தடவை, 5 நாட்கள். குணம் தெரிந்தது.

விஷ மருக்கள்: 25% போடோபைலின் பிசின் திரவம் விஷ மரு க்கள் மீது வாரம் ஒரு முறை என மூன்று முறை தடவிப் பூசப் பட்டது. குணம் ஆகிவிட்டது. சிறுநீர்த்தாரை அடைப்புக்கு “யூரா லாஜி” பிரிவுக்கு அனுப்பப்பட்டு “எக்ஸ்ரே” யூரித்ரோகிராம் எடுக்கப் பட்டு அடைப்பின் சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டு சி றப்பு மருத்துவரால் குணம் ஆக்கப்பட்டது. அடைப்பு நீங் கி, சிறுநீர் நன்கு வெளிப்படத் தொடங்கியது. இப்படியாக ஒருவனுக்கு ஒரு விலை மாதர் உடல் உறவால், மூன் று வெவ்வேறு பால்வினை நோய்கள் அவளது பிறப் புறுப் பிலிருந்து, இவனது பிறப்புறுப்பு களுக்கு குடியேறி தொல்லை கொடுத்ததை கண்டு அறிந்து, சிகிச் சை அறிந்து குணம் ஆக்கப் பட்டது.

இப்படி பலவித பால்வினை நோய்கள் மூலம் எச்.ஐ.வி. கிருமியும் உள்ளே நுழைந்து எய்ட்ஸ் நோயை கொடுத்து மனிதனின் உயிரை குடித்து விடுகின்றது.

“மனித வாழ்க்கை” இனிமையானது. உயிர் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக சிறந்து விளங்கும்.

ஞானமுத்து கண்டெடுத்தது

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: