Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று ஆவணி அவிட்டம்: பூணூல் அணியும் சடங்கினை . . .

நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது தான் ஞானக்கண். அக்கண்ணைப் பெறுவ தற்கான சடங்குதான்உபநயனம். உபநயனம் என்றால் துணை க்கண் என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறி வை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறிப்பிடு கிறார். கடவுளைப் பற்றி அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவ துண்டு. மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடு த்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ் யபரின் பிள்ளையாகஅவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பக வானே பூணூல் அணிந்து கொண்டதன் மூ லம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூலையக் ஞோபவீதம் என்று அழைப்பர். இதற்கு மிகவும் புனிதமானது என்று பொருள். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப் பவர் களும் ஆச்சார அனுஷ் டான ங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத் துவத்தை உணர்வது அவசியம்.

விரத முறை: கணபதி பூஜையுடன் இவ்விரதத்தை துவங்கி, புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம், இருப்பிடங்களைத் சுத்தமா க்கிக் கொள்ள வேண்டும். இவ்வே ளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பர ப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத் து, அதில் சப்த ரிஷிகளை ஆவா ஹனம் செய்து, தீபாராதனை செய்து, நைவேத் தியம் படைக்க வேண்டும். பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண் டும். அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்து மாவு, நெய், நெல்பொரி ஆகியவ ற்றை மந்திரம் சொல்லி அக்னி யில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.இவ்வேளையில் பஞ்ச பூதங் களையும் வழிபட லாம்.

திருமணம் ஆகாத ஆண் கள் பூணூலை குருவிற் கும், வயதில் மூத்தோருக் கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தே வர்களுக்கும், பின்னர் ரி ஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இவர்களி ல் தந்தை யை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக் கும் தர்ப் பணம் செய்தபிறகு தங்களுடைய பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக் கைகளை அளி த்து அவர்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும்.

பலன்: இவ்விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டவர் களை செய்பவரை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரி களின் தொல்லை குறையும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: