Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகம் முழுவதும் தோன்றும் அன்னா ஹசாரேக்கள் ‘ஜோக்’ பால் என ஐ.நா.,முன்பு இந்தியர்கள் கோஷம்

லோக்பால் மசோதாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் களம் இறங்கியிரு க்கும் தியாகி அன்னா ஹசாரேவுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தி யர்கள் மத்தியில் ஆத ரவு பெருகி வருகிறது. ஐ.நா., சபை வளாகம் முன்பு ஹசாரே தோற் றத்தில் காகித தொப்பி அணிந்தும் அவரைப் போல குர்தா அணிந் தும் இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும், உலகம் முழுவதும் ஒளிந்து கிடக்கும் கறுப்பு பணத்தை இந்திய திருநாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி கட ந்த ஏப்ரல் மாதம் சாகும் வரை உண்ணாவிரத போ ராட்டத்தை துவக்கி னார் ஹசாரே. இவரது போராட் டத்திற்கு இந்தியா முழுவ தும் ஆதரவு பெருகியது. இதனையடுத்து லோக்பால் வரைவு கமிட்டியில் ஹசாரே மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலரை சேர்க்க சம்மதம் தெரி வித்தது. இருப்பினும் இந்தக் குழுவினர் பரிந்துரைத்த கருத் துக்களை மத்திய அரசு புறக்கணித்து தன்னிச்சையாக இறுதி வடிவம் கொடுத்துள்ளது.

இதனால் அதிருப்தியுற்ற அன்னாஹசாரே மீண்டும் தனது போராட்டம் தொடரும் ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போகிறேன் என் று அறிவித்துள்ளார். இவரது போராட்டத் திற்கு போலீசார் உரி ய அனுமதி எதுவும் வழங்கவில்லை. இத னால் இவர் கைது செய்யப்படும் சூழலுக்கு செல்ல நேரிடும் . தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழும் என தெரிகிறது.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐக்கியநாடு சபை முன்பு இந்திய ஊழ<ல் ஒழிப்பு சமூக நல விரும்பிகள் சுமார் 50க் கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட் டத்தில் பங்கேற்றவர்கள் ஹசாரே போன்ற தோற்றத்துடன் ( குல்லா மற்றும் குர்தா வுடன்) பலர் வந்திருந் தனர். மூவண் ண தேசிய கொடியுடன் வந்த இவர் கள் கையில் பல்வேறு பதாகைகளும் கொண்டு வந்திருந்தனர். இதில் லோக்பால் ஜோக்பால், ஊழல்வாதிகளை ஜெயிலுக்கு அனு ப்பு, அதிகார த்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்து என உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நியூஜெர்சியை சேர்ந்த பார்த்த துரகா என்பவர் கூறுகையில்; நாங்கள் அன்னா ஹசாரேவு க்கு கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து போராட களம் இற ங்கியிருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் ஒருங்கி ணைந்த ஆதரவு ஹசாரேவு க்கு பெருகி வருகிறது. சிறந்த அரசியலமைப்பு அங்கம் உருவாக்கப்படும் போது சாமானிய மனிதனு ம் பலன் பெற முடியும். ஹசாரே கொள்கைகளை மத்திய அரசு ஏற்கும் வரை நாங்கள் தொட ர்ந்து போராடுவோம் என் றார்.

அமெரிக்க அதிகாரி கருத்தினால் சர்ச்சை: இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர் பாளர் விக்டோரியா என் பவர் அளித்துள்ள பேட் டியில் ; ஜனநாயக ரீதி யிலான போராட்டத்தை இந்திய அரசு நசுக்க கூ டாது என்றும், அஹிம் சை போராட்டத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் என் றும் கூறினார். இவரது கருத்து காங்கிரசுக்கு எரிச்சலை ஏற் படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டில் உள்ள விஷயம் குறி த்து அறிந்து கொள்ளாமல் அமெரிக்கா தெரிவித்துள்ள கரு த்து முறையானதல்ல என் றும் இது மிக்க கவனத்தில் எடு த்துக்கொள்ளப்படும் என்றும் காங்., செய்தி தொடர்பாளர் அபிஷேக்சிங்வி கூறியுள்ளார். பா.ஜ.,வும் கண்டனம் தெரி வித்துள்ளது.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply