Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிடி, டிவிடிக்கள் காணமால் போகும்

கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறை யும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவை யும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல் லை.

ஒரு காலத்தில், 1985க்கு முன் னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டி கல் ரெகார்ட் அளவிலான டிஸ் க்குகள் பயன்பாட்டில் இருந்த ன. துளை யிடப்பட்டு பயன் படுத்தப்பட்டு வந்த கார்டுகளு க்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ் க்குகள் வெளியேற்றின. இதன் கொள் ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன. பின்னர் அதிக அள வில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் பின் டிவிடி வந்த பின் னர், பிளாப்பி டிஸ்க்குகள் மறைந்து, அதற்கான ட்ரை வினை கம்ப்யூட்டரில் காண்பது அரிதாக உள்ளது.

இப்போது பிளாஷ் ட்ரைவ், எக்ஸ் டர்னல் ட்ரைவ் வந்த பின்னர், டிவிடி ட்ரைவ் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளி க்கும் வகையில், தற்போது வந்து கொண்டிருக்கும் மேக் கம்ப்யூட்டர்க ளில் டிவிடி ட்ரைவ் பொருத்தப்படு வதில்லை. பெர்சனல் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும், டிவிடி ட்ரைவ் ஒரு விருப்பத் தேர்வாக அமைக்கப் பட்டு, தனியே வாங்கிப் பயன்படுத் தும் வகை யில் உள்ளன. விரைவில் டிவிடிக்களும் சிடிக்களும் காணாமல் போய்விடும் என்றே அனை வரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்கள் ஆறி னை இங்கு பார்க்கலாம்.

1. சத்தம்: சிடி மற்றும் டிவிடி ட்ரைவ்கள் இயக்கத்தின் போது, உள் ளே சுழலும் மற்றும் நகரும் பாக ங்கள் இயங்குவதால், தேவைய ற்ற சத்தம் ஏற்படுகிறது. எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற சாதனங்க ளில் இந்த சத்தம் சற்று அதிக மாகவே உள்ளது.

2. பராமரிப்பு: அதிக வேகத்தில் சிடிக்களைச் சுழற்றி, லேசர் கதி ர்கள், அவற்றைப் படிக்கை யில், தூசு சேர்ந்து அவையும் சுழற் சியில் பங்கேற்கின்றன. இவை சேராமல் இருக்க இதனை நாம் பரா மரிக்க வேண்டியுள்ளது. மேலும், விரைவில் தங்கள் பயன் நாட் களை இழந்திடும் கம்ப்யூட்டரின் துணை சாதனமாக, சிடி ட்ரைவ் உள்ளது.

3. இயக்க சக்தி: மிக அதிக வேகத்தில் டிவிடிக்களை சுழற்ற வேண் டிய நிலையில், அதற்கான மின் சக்தியும் சற்று அதிகமாகவே செலவாகிறது. இதனால் லேப் டாப் போன்ற கம்ப்யூட்டர்களில் பிரச்னை ஏற்படுகிறது.

4. வேகம்: சிடி அல்லது டிவிடி யிலிருந்து டேட்டா படிக்கப்படு கையில், அதிக வேகத்தில் அவை சுழல்கின்றன. இதே நி லை ஹார்ட் டிஸ்க் அல்லது சா லிட் ஸ்டேட் டிஸ்க்கில் ஏற்பட்டாலும், சுழல் வேகம் குறைவாகவே உள்ளது. அதிக வேகத்தில் டிவிடி சுழன்றா லும், தகவல் அனுப்பிப் பெறும் விஷயத்தில், ஹார்ட் டிஸ்க் மற்றும் பிறவற்றிலிருந்து தகவல் களைப் பெறுவ தே அதிக வேகத்தில் நடை பெறுகிறது.

5.மீடியா: இந்த ஒரு விஷயத்தில் தான், பல ரும் சிடி, டிவிடிக்கள் கா ணாமல் போவதைப் பற் றிக் கவலைப்படப் போ வதில்லை. முதலாவதாக, டிஸ்க்குகள் அதிக இடத்தை எடு த்துக் கொள்கின் றன. பல மாதங்கள் கழித்து, நாம் சாப்ட்வேர் புரோ கிராம் ஒன்றினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அந்த குறிப்பிட்ட சாப்ட்வேர் உள் ள சிடி அல்லது டிவிடி எங்கே உள்ள து என்று பல சிடிகளுக்கிடையே தேட வேண்டியுள்ளது. பயன்படு த்தாமல் பல காலம் இருந்தா லும், அதில் ஸ்கிராட்ச் எதுவும் இல்லாமல், ஈரப் பதத்தி னால், மேலாகப் பங்கஸ் பூச்சு எதுவும் இல்லாமல் இருக்க வே ண்டும். ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்னைகளுக்காக ஹார்ட் டிஸ் க்கினை ஒப்பிட்டுப் பார் த்தால், விலை குறைவு, அளவிற்கு எல் லை இல்லை மற்றும் தேடிப் பார்த்து அறிவது மிக எளிது.

6. வசதி: இணையம் இப்போது நமக்கு எல்லாவிதத்திலும் உதவு கிறது. பைல்களை ஸ்டோர் செய்து எப்போது வேண்டு மானாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். பல வேளைகளில் கட்டணம் எதுவுமின்றி இந்த சேவை கிடைக்கிறது.

மேற்கண்ட காரணங்களினால், நிச்சயம் சிடி, டிவிடிக்களின் பயன் பாடு விரைவில் இல்லாமல் போகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply