Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பயறுவகைப் பயிர் சாகுபடிக்கு…

பயறுவகைப் பயிர் சாகுபடிக்கு பாஸ்போ பாக்டீரியா

நிலத்தில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைப்பதன் மூலம் தாவரங்களுக்கு எளி தில் கிடைக்கக்கூடிய மணிச் சத்தாகவும் மாற்றப் படுகி றது. பேசில்லஸ் மெகாதீசி யம், பேசில்லஸ் பாலிமிக் ஸா, சூடோமோனாஸ், ஸ்ட் ரையேட்டா, மைக்ரோகாக் கஸ் ஸ்ட்ரெப்டோமைசின் என்னும் பாக்டீரியாக்கள் மண் ணிலுள்ள முக்கியமான பாஸ் போ பாக்டீரியாக்க ளாகும். இருப்பினும் பொதுவாக மெகாதீசியம் வெரைட்டி பாஸ் பாட் டிக்கம் என்னும் பாக்டீரியாதான் நாம் பயன்படுத்துகிறோம்.

பயறுவகைப் பயிர்களின் தழைச்சத்து தேவையை பூர்த்தி செய் வதில் அவற்றின் வேர்முடிச்சுகளில் உள்ள “ரைசோபியம்’ என்னும் நுண் ணுயிர் பெரும் பங்கு வகிக்கின்றது. அதுபோல் அவற்றின் மணிச் சத்து தேவையைப் பூர்த்தி செய்ய நாம் ரசாயன உரங்களை இடுவது மட்டு மல்லாமல் அப்படி இடப்பட்ட மணி ச்சத்து மண்ணில் கரையாத நிலை யில் நிலைபெற்று வீணாவதைத் தடுக்க பாஸ்போ பாக்டீரியாவை நுண்ணுயிர் உரமாக இடுவது சால ச்சிறந்தது.

ஒரு எக்டருக்குத் தேவையான 3 பைகள் ரைசோபியத்தை (600 கிராம்) 3 பைகள் பாஸ்போ பாக்டீரியாவுடன் 600 மில்லி அரிசிக் கஞ்சியுடன் கலந்து ஒரு கூழ் போன்ற கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலை நன்கு சுத்தப்படுத்தப் பட்ட விதை யுடன் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கிளற வேண்டும். இதனால் ஒவ்வொரு விதை யுடன் கருப்பு பூச்சு போன்ற அடைப்பு தெரி யும். பொதுவாக வாடல், வேரழுகல் நோ யைக் கட்டுப் படுத்துவதற்காக டிரைக் கோ டெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். சூடோமோனாஸ் புளூரசன்ஸ் உடன் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதையை நேர்த்தி செய் யலாம். இவ்வாறு டிரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாஸ் ஆகியவற்றுடன் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவைச் சேர்த்து விதைநேர்த்தி செய்யலாம். ஆனால் ரசாயன பூஞ்சாண கொல் லிகளான திரம் அல்லது கார்பன்டசிம் பயன்படுத் தும் பொழுது அவற்றுடன் விதை நேர்த்தி செய்த 24 மணி நேரம் கழித்து பின் உயிர் உரத்துடன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் விதைக ளை சாக்கின்மீது நன்கு பரப்பி, நிழலில் சுமார் 30 நிமிடங்கள் உலர்த்த வேண் டும். இவ்வாறு உலர்த்தப்பட்ட விதைகளை உட னடியாக விதைப்பு செய்துவிடலாம்.

பயன்கள்: இது அங்கக அமிலங்களைக் கரைத்தும் நொதிகளைச் சுரந்தும் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்து பயி ர்கள் எடுத்துக்கொள்ளும் நிலை க்கு மாற்றிக் கொடுக்கிறது. மண்ணில் மணிச்சத்து நிலை பெறுவதைத் தடுக்கிறது. மண் ணில் இடப்படும் மணிச்சத்தின் உரப்பயன் பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது. நீரில் கரையாத மணிச்சத்து உரத்தை பயிர்க ளுக்கு எளிதில் கிடைக்கு மாறு மாற்றித்தருகிறது. கதிர்களில் மணிகள் செழித்துவளர உதவு கிறது. அதனால் 10 முதல் 20 சதம் கூடுதல் விளைச்சல் கிடைக் கிறது. பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து உர அளவில் 15 முதல் 20 சதம் வரை குறைக்கலாம்.

(தகவல்: கி.க.அனிதா, பெ.பாண்டியராஜன், வே.ஜெயபால், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி-620 009. 99446 22422)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்)

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: