Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பழைய பாடத்திட்டப் புத்தகங்களையே பின்பற்ற முடிவு

சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, இந்தாண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு தயாரானபோதும், ஆங்கில வழி புத்தகங்களின் விநியோகம் இல்லாததால், சென்னையிலுள்ள பல மெட்ரிக் பள்ளி கள், பழைய பாடத்திட்டப் புத்த கங்களையே பின்பற்ற முடிவு செய் துள்ளன.

மேலும், அரசு அங்கீகாரம் பெற் ற புத்தகங்களை பயன்படுத்தா மல் இருப்பது, நீதிமன்ற தீர்ப்பி ன்படி குற்றமாகாது என்பதாலும் இந்த முடிவை மெட்ரிக் பள்ளிகள் தைரியமாக எடுத்துள்ளன.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் தரப்பில் கூறப்படுவதாவது, “நாங் கள் பின்பற்றிய பழைய பாடத்திட்டங்களே, சமச்சீர் பாடப் புத்தக ங்களைவிட தரமானதாக உள்ளன. எனவே, விடுபட்ட பகுதிகளை மட்டும் சேர்த்துக்கொண்டு பாடத்திட்டம் பின்பற்றப்படும். ஏனெ னில், ஆங்கில வழி கல்விக்கான அரசு பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் முக்கிய காரணம்.

மேலும், பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியம் என் பது, 2009 – குழந்தைகளுக் கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் குறி ப்பிடப்பட்ட அமைப்பு அல்ல. எனவே பழைய பாடத் திட்ட ங்களைப் பின்பற்றுவதில் பிரச்சினையில்லை” என்கின்றனர்.

பள்ளிகளின் தனி அடையாளங்கள் நீங்குமா?

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் மாநிலக் கல் வி வாரியம் என்ற 4  பிரிவு கல்வி வாரியங்களும், சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப் படும் என்ற திட்டம் இருந்தாலும், தங்களின் தனி அடையாளங்களை துறக்க, தனியார் பள்ளிகள் மறு த்து வருகின்றன.

“ஒரே கல்வித்திட்டம் மற்றும் ஒரே தேர்வுமுறை என்பதுதான் சமச்சீர் கல்வித்திட்டமே ஒழிய, ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் தனி யார் பள்ளிகள் என்ற எங்களின் அடையாளங்களை இழக்க மாட் டோம். அத்தகைய ஒரு  பரிந்துரையை கடுமையாக எதிர்ப்போம்” என்று அப் பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply