Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போக்குவரத்து பிரச்னை குறித்த, “டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்

பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, “டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,’ திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறி முகப்படுத்தியுள்ளனர். பொது மக்கள் இந்த வச தியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இரு ந்து,” JOIN CTP’ என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், “அல ர்ட்’ தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக் யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான தகவல் வந்து சேரும். தொடர்ந்து, டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,கள் வரத் துவங்கும்.

இந்த திட்டத்தில் இருந்து விலக வேண்டும் என நினைத் தால்,” LEAVE CTP” என அதே எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். இந்த சேவை, “ஈNஈ’ சேவையுடன் கூடிய மொபைல் எண்ணிற்கு கிடைக்காது. இந்த சேவை யை “www.smsgupshub.com/groups/ctp” என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சேவை குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது: இந்த சேவை இன்று (நேற்று) மு தல் அறிமுகமாகிறது. இதில், முதல் தடவை எஸ்.எம்.எஸ்., அனுப்பு வதற்கான கட்டணம், மொபைல் பிளானில் உள்ளபடி செலுத்த வே ண்டும். தொடர்ந்து பெற ப்படும் தகவல்களுக்கு கட்டணம் ஏதும் இல் லை. இதில், போக்குவர த்து நெரிசல், விபத்து, ஆர்ப் பாட்டம், மறியல் நடக்கும் இட ங்கள், வாகன போக்குவரத்து மெதுவாக செல்லும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

தினசரி காலை, மாலை வேளைகள் தவிர, சென்னையில் போக்குவரத்து பிரச்னை தொடர்பான எட்டு முதல் 20 எஸ். எம்.எஸ்., வரை அனுப் பப்படும். பொதுமக்கள் வழக்கம் போ ல், தங்களுக்கு ஏற்படும் போக்குவரத்து தொடர்பான விஷ யங்களை போக்குவரத்து கட்டுப்பாட்டறைக்கு தகவலாக அனுப்பலாம். இ- சலான் திட்டத்தில் ஏற்கனவே, தினசரி 3,500 வழக்குகள் சராசரியாக பதியப்படுவதாக கூறியிருந் தேன். தற்போது அது 3,800 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (நே ற்று முன்தினம்) மட்டும் 4,200 வழக்குகள் பதியப்பட்டு, 3 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன நம்பர் பிளேட் விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 45 ஆயிரம் வழக்குகள் பதியப்ப ட்டுள்ளன. இதில், ஜூலை மாதத்தில் மட்டும் 16 ஆயி ரம் வழக்குகள். மோட்டார் வாகன சட் டத்தில், இதற்கு தனியாக அபராத கட்டணம் தெரிவிக்கப் படவில்லை. சட்டப்பிரிவு 177ன்படி 50 ரூ பாய் அபராதமாக விதிக்கி றோம்.

சென்னையில் ஏற்கனவே 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. இது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய விஷயம். மேலும், 37 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பைக் ரேஸ் நடத்திய இரண்டு குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளன. பைக் ரேஸ் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு சஞ்சய் அரோரா கூறினார். உடன், தென் சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் சுதாகர், போக்கு வரத்து திட்டமிடல் கூடுதல் துணை கமிஷனர் சிவானந்தம் ஆகி யோர் இருந்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply