Wednesday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (15/08)

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு வயது 22. சென்னையில், ஒரு கல்லூரியில், இரண் டாம் ஆண்டு படித்து வருகிறேன். என் குடும்பத்தில் நாங் கள், நான்கு சகோத ரிகள். அப்பா-அம்மா இருவருமே அரசுப் பணியாளர்கள். அம்மா… நான் ஒரு வரை விரும்புகிறே ன்; அவரும் என்னை விரும்புகிறார். அவ ருக்கு, வயது 24; கல் லூரியில், பி.இ., இறுதியாண்டு படித் து வருகிறார். இந்த செய்தி என் குடும்ப த்தினருக்கு தெரி யும். என் குடும்பத்தி ற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும், மிகவும் நல் லவர் என்ப தாலும் என் வீட்டார் என்னை ஒன்றும் கேட்க வில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவரை காதலித்தற்கு ஒரே காரணம் – அவர் ஏற்கனவே ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டவர் என்பது மட்டுமே. இவர் காத லித்தப் பெண், இவரது குடும்பச் சூழ்நிலையை காரணமாக வைத்து, இவரை விட்டு விலகிவிட்டார். அதற்குப்பின்தான், சில மாதங்கள் கழித்து, என் காதலை தெரிவித்தேன்; அதை, அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், அந்தப் பெண் ணை அவர் மறக்க வில்லை; நினைத்துக் கொண்டுதான் இரு க்கிறார். ஏன் என்று கேட்டால், “மறக்க முடியவில் லை…’ என்கிறார். நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து, ஒன் றரை வருடங்கள் ஆகின்றன. இதுவரை, என்னிடம் சிரித்து பேசியதில்லை. தொலைபேசியில் கூட அதிகமாக என்னி டம் பேச மாட்டார். இதை, நான் அவரிடம் வெளிப் படையாய் கேட்டிருக்கிறேன். “அதெல்லாம் ஒன்றுமில்லை; நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன்…’ என்கிறார். எப்போ தாவது என்னை பார்க்க வருவார். அதுவும், சிறிது நேரம் இருந்து விட்டு, சென்று விடுவார்.

இதன் காரணமாகவே அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டது; ஆனால், என்னை விட்டு பிரிந்து செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், “நான் உன்னை மறக்க மாட்டேன்; எத்தனை பிரச்னை நேர்ந்தாலும், என்னை விட்டு பிரியக் கூடாது…’ என்று பலமுறை கூறியிருக்கிறார். இருந் தாலும், என் காதலில் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. அந்தப் பெண்ணைப் போல, நானும் பிரி ந்து சென்று விடுவேனோ என்று நினைத்து, என்னிடம் இப்படி நடந்து கொள்கிறாரா என்று தெரியவில்லை. என் னால் அவரை விட்டு விலகவே முடியாது. நான் அவரை உயிருக்குயிராக விரும்புகிறேன். அந்தப் பெண்ணின் பிரிவா ல், சில தீயப் பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளார் என்று, சமீபத் தில் தெரிய வந்தது. அவர் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லை. சின்ன, சின்ன சந்தோஷத்திற்குக் கூட இடம் கொடுக்காமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் வாழ்க் கையில் அந்தப் பெண் இருக்கும்போது கிடைத்த சந்தோஷ ங்களை விட, அதிக சந்தோஷத்தை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பத்தை அவர் எனக்குத் தரவே இல்லை. “நான் நேரடியாக அந்தப் பெண் ணைப் பார்த்து, உங்களைப் பற்றி கூறுகிறேன்…’ என்றாலும் கூட, “அதெல்லாம் வேண்டாம்; அவள் திரும்பி வந்தாலும், நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…’ என்கிறார். பிறகு ஏன் அவர் இப்படியிருக்கிறார். அவரை புரிந்து கொள்ளவே முடிய வில்லை. அந்தப் பெண்ணால் ஏற்பட்ட பிரச்னையால், அவ ரது குடும்பத்திலும் அவருக்கு ஆதரவு இல்லை. எனக்கும், என் காதலர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சில ஆசைகள் உண்டு.

இதையெல்லாம், அவரிடம் நான் மனம் விட்டு பேசியதே யில்லை. அவரும் வருத்தப்பட்டு, என்னையும் வருத்தப்பட வைக்கிறார். “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று ஒருமுறை கேட்டதற்கு, “என்னால் இப்படித்தான் இருக்க முடியும்…’ என்று கோபப்பட்டார். அவர் போகும் பாதையை நினைத் தால், எனக்குத் தலையே சுற்றுகிறது. அவரை எப்படி மாற் றுவது. அவரையும் மீறி அந்தப் பெண்ணிடம் நான் சென்று பேசலாமா… அது சரியா? என்று சொல்லுங்கள் அம்மா. அவர் அப்போதுதான் சந்தோஷமாக இருப்பார் என்றால், நான் அதையும் செய்வேன். அவரை மாற்றி, நல்ல வழிக்கு கொண் டு வர நீங்கள் தான் எனக்கு வழி சொல்ல வேண்டும்.!

— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —
உனக்கு வயது 22. இளங்கலை, இரண்டாம் ஆண்டு படிக்கி றாய். பொறியியல் இறுதியாண்டு படிக்கும், 24 வயது மாண வனை, அவன் காதலில் தோற்றவன் என்பதற்காகவே காதலிக்கிறாய். உன் காதலை ஏற்றுக் கொண்டாலும், அவன் பழைய காதலி நினைவுகளுடன் போராடுகிறான். உன் காத லனின் உணர்வை, அவனது பழைய காதலிக்கு சொல்ல தூது போகலாமா என கேட்டிருக்கிறாய்.

1.காதலனின் குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான், அவனை காதலித்தவள் அவனை விட்டு போனாள் என எழுதியிருக்கி றாய். அந்தக் குடும்பச் சூழ்நிலை என்ன என்பதை, நீ, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. அக்குடும்பச் சூழ்நிலை பற்றி உனக்காவது தெரியுமா? அக்குடும்பச் சூழ்நிலை யை புறம் தள்ளி, அவனை காதலிப்பது, மணப்பது விவேகமான செயல் தானா?

2.பழைய காதலியின் பிரிவால் உன் காதலன், சில தீயப் பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளார் என எழுதியிருக்கிறாய். குடிக்கிறாரா… பான் பராக் போடுகிறாரா… கல்லூரி வகுப்பு களுக்கு செல்லாமல் கட் அடிக்கிறாரா? நான்கு வருட தேர் வுகளிலும், அரியர்ஸ் வைத்திருக்கிறாரா? விலைமகளிடம் செல்கிறாரா? பழைய காதலிக்கு சட்ட விரோதமான தொந் தரவுகள் கொடுக்கிறாரா? மனநிலை பிறழ்ந்தவர் போல் நட ந்து கொள்கிறாரா?

3.அந்தப் பெண்ணால் ஏற்பட்ட பிரச்னையால், அவரது குடும்பத்திலும் அவருக்கு ஆதரவு இல்லை என எழுதியிருக் கிறாய். அந்தப் பிரச்னைதான் என்ன என்பதை உன் கடித த்தில் குறிப்பிடவில்லை.

4.”அவர் போகும் பாதையை நினைத்தால், எனக்குத் தலை யே சுற்றுகிறது…’ என எழுதியிருக்கிறாய். அப்படியென்ன ஆபத்தான பாதையில் செல்கிறார் என்பதை உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. உன் காதலன் போகும் பாதை, பின்னா ளில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், சொல்லொண்ணா துக்கங்களை, வேதனைகளை பரிசளித்து விடப் போகிறது; ஜாக்கிரதை.

இலக்கண சுத்தமாய் கடிதம் எழுதியிருக்கிறாய். குண்டு, குண்டான எழுத்து. நீ இரக்க சுபாவம் மிக்கவள். பிறருக்கு உதவுவதற்காக ஆபத்துகளை விலை கொடுத்து வாங்கு பவள் நீ. ஆண்களின் தரத்தை தீர்மானிக்க உனக்கு தெரிய வில்லை. அழகான பெண் நீ, ஆபத்தான ஒருவனை, ஏன் துர த்தி, துரத்தி காதலிக்கிறாய். தமிழ் சினிமா பாதிப்பு உன்னி டம் தெரிகிறது. நிழலை பார்த்து நிஜத்தில் சூடு போட்டுக் கொள்ளாதே.

ஒன்றரை வருடமாக காதலிக்கிறாய். சரி… இந்தக் காதல், கல்யாணத்தில் முடியுமா, முடியாதா என்ற குழப்பத்தில் இருக்கும் போது, உன் காதலன் உன்னிடம் சிரித்து பேசி பழகு வதா முக்கியம் உனக்கு? எப்போதாவது வருபவர், தினமும் வந்து உன் படிப்பைக் கெடுக்க வேண்டுமா?

தான் உண்டு, தன் முன்கோபம் உண்டு என இருப்பவரிடம், நீ தான் முந்திரிக் கொட்டைதனமாய் காதலை தெரிவித்து இருக்கிறாய். சில மாதங்கள் கழித்து, அவர் உன் காதலை ஏற்றுக் கொண்டார். ஆனால், பழைய காதலியை அவர் மறக்கவில்லை என்றிருக்கிறாய். அவளை மறக்காத அவர், உன் காதலை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா அல்லது பழைய காதலியிடம் நீ தூது போனால், புதிதாக ஒன்றை பிடித்து விட்டேன் என காட்டுகிறாரா? உன் எதிர்காலத்தை பணயமாக வைத்து, பழைய காதலியின் காதலை மீட்க முயற்சிக்கிறார் உன் காதலன்.

நீ எதற்கு பழைய காதலியிடம் தூது போய், உன் தரத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும்?

இருவருக்குள்ளும் என்னென்ன நடந்தது என்பதை, இருவர் மட்டும் அறிவர்; இதில், மூன்றாவது ஆள் அனாவசியம்.
இனி, உனக்கான தீர்வை பார்ப்போம்.

ஒரு வருடம் அவகாசம் கொடுத்து, அவரிடமிருந்து விலகி நில். அதற்குள் அவர் தன் படிப்பை முடித்து, பழைய காதலி யின் நினைவை உதறி, தீயப் பழக்க வழக்கங்களையும், முன் கோபத்தையும் கைவிட்டு, நல்ல பணிக்கு போய், உன்னை மணமுடிக்க வருவாராயின் அவரை மணந்து கொள்.

இல்லையென்றால், அமைதி யாக அவரிடமிருந்து விலகிக் கொள்; படிப்பில் கவனம் செலுத்து. முதுகலை படி. அதன் பின் வேலைக்கும் போ. பெற்றோர் பார்க்கும் மாப் பிள்ளை யை மணந்து கொள்.

உன்னைப் பிரிந்த விசனத்தில், மூன்றாவது பெண்ணின் காதலுக்கு ஓ.கே., சொல்லி, அவளை, இரண்டு வருஷத்து க்கு புலம்ப வைத்துவிடப் போகிறார் உன் காதலன்.

என் அறிவுரை கசந்தால், உன் வாழ்க்கை தித்திக்கப் போகி றது என்று அர்த்தம் மகளே!

—என்றென்றும்
 தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
 (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: