Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – வசீகர கண்களுக்கு…

கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாம்.

அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படா மல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவ னிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சிலந்தி வலைகளும், கோழிக் கால்களும் தோன்றத் தொடங் கும். இவ்வாறு தோன்றும் கோடு களும் கருவளையங்களும் கண் களை ஒளிகுன்றச் செய்து காலத் திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், களைப்பையு ம் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படு த்தி விடுகின்றன. சத்துமிக்க, ஆரோக் கியமான உணவு, போதிய உடற் பயிற்சி, மிதமான நிம்ம தியான உற க்கம் இவைக ளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண் பாதி ப்புகளை ஓரளவு தவிர் க்கலாம்.

இதோடு மட்டுமின்றி, வாரம் ஒரு முறை கண்களுக்கான மாஸ்க்கி னைக் கொண்டு சுமார் 15 நிமிடங் கள் கண்களில் வைத்துப் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிவரப் புத்துண ர்வைப் பெற்றிடலாம். கண்களை மூடி மூச்சை நன்றாக ஐந்தாறு மு றை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத் தில் ஏற்பட்டிருக்கும் இறுக் கம் தளர்வுறும் வரை யில் மறுபடி மறுபடி மூச்சை நன் றாக உள்ளிழுத்து வெளி விட வேண்டும். நெற்றி, கன் னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக் கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறை யையும், பாதுகா ப்பினையும் தர வேண்டும்.

கருவளையங்களை தவிர்க் கும் வழி:

கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் – A (Retin – A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண் டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதி களுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது.

தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண் களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிக மானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட் சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது. கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகா க்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வே ண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.

கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment):

சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொ லா ஜென்னிற்கு உண்டு. இய ற்கையில் கிடைக்கக் கூடிய இப்புர தமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலா ஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதி களில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வை த்து நிரப்பப்படுகிறது.

இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடி க்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பல னைத் தருகிறது.

வேதிச் சிகிச்சை:

வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெ ல்லிய கோடுகள் ஏற்படுகி ன்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற் புறங்களில் ரெட்டி னாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றி லும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகி ன்றன. அப்பகுதியை நன்று ஆறிய வுடன் பார் த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக் கும்.

வெயிலிலிருந்து பாதுகாப்பு:

சூரிய ஒளியில் உள்ள அல் ட்ரா வயலெட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறி ப்பாக கண் களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்கு தலுக்கு ஆட்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம், சூரிய ஒளி யினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில்

Skin Cancer

தோல் புற்றி னைக் (Skin Cancer)கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண் களின் கீழே யுள்ள தசைகளில் இறுக்கத் தையும் கருமை யையும் பட ரச் செய்கிறது.

இம்மாதிரியான பின் விளை வுகளையும், காட்ராக்ட், கரு வளையம் போன்ற சீர் கேடுக ளையும் தவிர்த்து விட, நல்ல தரமான குளுமைக்கண்ணாடி (Cooling Glasses)களை அணிந்து கொள்ளலாம். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகா க்கக் கூடிய வகையில் குடை மற் றும் கிரிக்கெட் குல்லா போன்றவ ற்றையும் பயன்படுத்தலாம்.

தொங்கு சதைக்கு அறுவை சிகி ச்சை:

கண்களுக்குக் கீழே உள்ள பகுதி மிக மிருதுவாகவும் லேசா கவும் இருப்பதால் வெகுவிரைவில் அழ ற்சிக்கு ஆட்பட்டு விடுகின்றது. சத்தற்ற உணவும், வேலைப்பளு மற்றும் மன இறுக்கம் போன் றவை இவ்வழற்சியை மேலும் தீவிர மாக்குகிறது. சில பெண்களுக்கு மரபியல் தன்மை காரண மாகவும் இந்நிலை ஏற்படச் சாத்தியமுள்ளது. வய தாகும் பொழுது, இத்தகைய தொங்கு தசைகள் முகத்தில் பெருங் குறையை உண்டாக்கி, தோற்ற த்தையே சிதைத்து விடுகி ன்றன.

இவ்வாறாக ஏற்படும் கொழுப்பு சதை யை பிளிபிரோம் பிளாஸ்டி (Blepheroplasty) எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்து சீர் செய்து விடலாம். ப்ரோ லிப்ட் (Brow Lift) என்னும் முறைப்படி ஒழுங் கற்று இரு க்கும் புருவங்களை அழகாகத் தீட்டி கண்களை இளமை யோடும் புதுப் பொலிவுடனும் இருக்கச் செய்யலாம். பிளா ஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய் து வரும் மருத்து வர்களின் உதவியால் இக் குறை பாட்டை அகற்றிடலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: