Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்மீகமும் மருத்துவமும் – சீர்காழி சிவசிதம்பரம்

இது கலியுகம். இங்கு இறைவனை அடைவதற்கு ஜபம், வழி பாடுதான் எளிய வழி. எவன் ஒருவன் கடவுளின் நாமத்தை இடைவிடாமல், பக்தி சிரத்தை யுடன் சொல்லிக் கொ ண்டிருக்கிறானோ, அவனுடைய பாவ ங்கள் அனைத்தும் தீயிலிட்ட மெழு காய் கரைந்துவிடும். ஆன்மிகத்தின் அடிப்ப டையே ஆன்ம நேயம்தான். மனித நேயமும், ஆன்ம நேயமும் உடல்நலத்தைப் பேணுகின்ற மாபெ ரும் சக்தி! அந்த சக்தியை அடிப் படை யாக வைத்தே ஆன்மிகம் என்கிற ஒரு கருத்தே உருவானது” என்கிறார் டாக் டர் சீர்காழி சிவ சிதம்பரம். இது குறித் தெல்லாம் மேலும் விரிவாகச் சொல் கிறார் அவர்.

”தனிப்பட்ட ஒரு மனிதன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக் கையைக் காட்டிலும், மனதுக்குத் தெம்பையும், தைரியத் தையும் வளர்த்துக் கொள்வதற் காக இறை உருவங்களைத் தோற் றுவித்தான். அந்தத் திருவுருவங் களின்மீது நம்பிக்கையை வைத் தால், அது அவனுடைய செயல் திற னை வளர்க்கும். அந்த நம்பிக்கை யை வலுப்படுத்த… கடவுளுக்கு உறவுமுறை தந்து, சிவனின் மனைவி பார்வதி, விநாயகர், முரு கன் என இரண்டு பிள்ளைகள்… என்ற குடும்ப அமைப்பை ஏற்படுத் தினான். முருகனுக்குப் பன்னிர ண்டு கரங்கள் பன்னிரண்டு சக்தி களையும், ஆறு முகங்கள் ஆறு தன் மை களையும் குறிப்பிடுகின்றன என்பார்கள்.

இப்படி, மனிதன் நம்பிக்கையை மனதில் நிலைநிறுத்தி, செயல்படவேண்டும் என்பதற்காக வே ‘ஆன்மிகம்’ என்ற ஒன்று உரு வானது. மத நல்லிணக்கத்தோடு, ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு , ஆன்மிக நேயத்துடன் மனித நேய மும் இணைந்து செயல்படும்போது, மனதில் அமைதி பிற ந்து உற்சாகம் நிரம்புகிறது.

அது இல்லாமல் போகும் கால கட்டத்தில் உற்சாகம் குறை ந்து மனக்கொந்தளிப்பு, மன இறுக்கம், மன அழுத்தம் போன் றவை ஏற்படுகின்றன.

ஆன்மநேயம் உள்ளவனுக்கு எதிர்பார்ப்புகள் மிகவும் குறை வாக இருக்கும். இறைவன் திருவடி ஒன்றே போதும் என்பவ ருக்கு துன்பங்கள் வருவதற்கான வாய்ப்பே இல்லை. இதுவே ஒரு மனிதனுக்கு மன ரீதி யான மகிழ்ச்சி தருகிற து.  நோய் நொடிகளால் நம க்கு வரும் துன்பங்களையு ம் ஆன்மிக வழிகள் அண்ட விடாமல் செய்து விடும்.

கால்களை மடக்கி தரை யில் அமர்ந்து, தலைகுனி ந்து நமஸ்கரிப்பது, சாஷ்டா ங்கமாக விழுந்து எழுவது போன்ற செய் கைகளால் உடலுக்குப் பயிற்சி கிடைப்பது மட்டு மல்ல… உடல், மனம், மூளைக்கான செயல்பாட்டை அதிக ரித்து, யோக நிலை யை ஏற்படுத்துகிற து. உட்கார்ந்து எழும் போது, இடுப்பு எலும்பு மூட்டுத் தசைகள், கால் பாதத் தசை கள் விரி வடைகின்றன. நாத்திகவாதியாக இரு ப்பினும்  மருத்துவ சிந்தனையோடு பார்த்தால், இத ன் உண்மை புரியும்.

பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுவதும், நம் உடல் ஆரோக்கியத்துக்கான வழிமுறைகள்தான். நம் காதின் வடி வம் ‘ஓ’ என்பது போல் இருக்கிறது. ‘ஓ’ என்ற வடிவில் உள்ள காதுகளைக் கை களால் பிடிக்கும்போது ‘ம்’ புள்ளியாகி றது. இது அக்குபஞ்சர் என்கிற வை த்திய முறையிலும்; காது நரம் புகளை இழுத்துத் தோப்புக்கரணம் போடுவது, அக்குபிரஷர் சிகிச்சை முறையால் கிடைக்கும் பலனையும் தருகிறது.

அலோபதி வைத்திய முறையில்… உடலின் இடது பக்க செய ல்பாடுகள் வலது பக்க மூளையிலும், வலது பக்க செயல் பாடுகள் இடது பக்க மூளையிலும் இருக்கும் என்பார்கள். வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து தோப்புக்கரணம் போடும் போது, மூளையின் செயல் பாடுகள் புத்துணர்வு பெறுகி ன்றன.

கற்பூர தீபத்தை ஒற்றிக் கொள்ளும் போது…. சுவாசம் சீராகும். சாம்பி ராணி நுகரும்போது, சைனஸ் குண மாகும். அதி காலை நீராடி இறை வழி பாடு செய்வது என்பது அடிப் படை யான சுத்தத்தை நமக்கு உணர்த்தும்.

உடற்பயிற்சிகள் மற்றும் தியான பயிற்சிகள் மூளைக்குப் புத் துணர்ச்சி தரக்கூடியவை. கால் வலியால் அவதிப்பட்டுக் கொ ண்டிருக்கும் ஒருவனை, நல்ல இசை நிகழ்ச்சியை கேட்க வை த்தால்போதும். நேரம் போவ தே தெரியாமல், நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் கால் வலி இருந்த தையே உணர்வான்!

சில சங்கீத வித்வான்கள் மேடையில் ஏறும் வரை, ‘எனக்கு நல்ல ஜுரம். இன்னிக்கு பாடலை.. ப்ளீஸ்’ என்பார்கள் .  மேடையில் ஏறிவிட்டால், 3 மணி நேரம் மூச்சு விடாமல் பாடி விடுவார் கள். இறைவனை ஆடிப்பாடி தொழும் போது, மன இறுக்கத்திலிருந்து   விடு பட்டு, அமைதி பெறலாம்.

இப்படி, சங்கீதம், பஜனைகள், கூட்டு வழிபாட்டு முறைகள் மூளையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி, மன தில் உற் சாகத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். சமுதாய அளவிலான ஒரு பற்றுதலையும் ஏற்படுத் து ம்.  இதுதான் இன்று, ‘மியூசிக் தெரபி’ என்ற மருத்துவ சிகிச்சை மு றையாக உருவாகியி ருக்கிறது.

நல்ல உள்ளத்துடன், தூய்மையான சிந்தை யுடன் தானும் வாழ்ந்து, பிறரும் வாழ வேண் டும் என்ற ஆன்மநேயம் மற் றும் மனித நேயத்துடன்… இறைவன் நமக்குத் தந்த வரமா கவே இந்தப் பிறவி இருக்கவேண்டும்.

நம்மையும் அறியாமல் ஏதோ சில விஷயங்கள், நம்பிக் கைக்குரியவர்களுக்கு ம் பாதிப்பை ஏற்படுத் திவிடலாம். உறவுகள், சொந்தபந்தங்களுக்கு ள் சிக்கல்கள், குழப்ப மான நிலை நிலவு கிற  காலகட்டத்தில், ‘யாரையுமே நம்ப முடிய லையே…’ என்று புலம்புவதைக் காட்டிலும், மனம் சஞ்சலப் படும்போ தெல்லாம், இறைவனின் மீது நம்பிக்கை வைப்பதும், ‘ஆண் டவன்னு ஒருத்தன் இருக்கான்’ என்கிற அசராத நம்பிக் கையுடன் அவன்மேல் பார த்தைப் போட்டு விடுவது மே சிற ந்தது.

துரோக மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும் இறை நம்பிக் கையை வளர்ப்பது சிறப்பு. நமது செயல்கள் சரியாக இருந்தாலும், எதிர் தரப்பி னர் அதை தவறென நினைக்கும்பட்சத்தில், இறை நம்பிக் கை மட்டுமே, அவர்களை எதிர்கொள்ளும் சக்தியை நம க்குக் கொடுக்கும்.

சரணாகதியும், பிரார்த் தனையும் நம்பிக்கை யை அள்ளித் தரும். மன் னிக்கும் மனோபாவத் தை வளர்க்கும். இறைத் தன்மைக்கு நம்மை அழைத்துச் செல்லும். விட்டுக் கொடுக்கும் பக்கு வத்தை வழங்கும்.  

ஆகவே, நல்லதைச் செய்யுங்கள். இறைவனையே நம்புங் கள். அந்த நம்பிக்கையே, வலிகளைப் போக்கும். மனக்காய ங்களை ஆற்றும்!” சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார். சிவ சிதம் பரம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: