Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நட்பு, உறவு பலப்பட . . .

அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சி பெ ருகும். ஒருவரை முக மல ர்ச்சியோடு உபசரி ப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப் பிடித்தல், தட்டிக் கொடுத் தல் மூலமும் அன்பை பகி ர்ந்துகொள்வது உண்டு.

பேச்சு, செயல், பார்வை ஆகி ய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக் குரியவர்களுக்கு சில பொருட் களை வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது. உண் மையான அன்போடு நாம் மற் றொருவருக்கு ஒரு பொரு ளை வாங்கிக் கொடுத்தால் அதுதான் அன்பளிப்பு ஆகும்.

மெய்யான அன்பைக் காட்டு வதற்கு நாளும் தேவையி ல்லை, சமயமும் தேவையி ல்லை. எப்போது வேண்டுமா னாலும் தெரியப்படுத்தலாம். ஒரு காதலன் தன் காதலிக்கு சிறு சிறு பரிசுகளை வழங்கு வதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. அதே போல கணவன் தன் மனைவிக்கு சில அன்புப் பரிசுகளை வாங் கிக் கொடு ப்பதற்கும் கால நேரம் பார்க்க வேண் டியதில்லை.

ஆனால் காதலன்-காதலி, கணவன்-மனைவி இவர் களைத் தவிர உறவினர் மற்றும் நண்பர்களை பொ றுத்தவரை அன்பளி ப்பு கொ டுப்பது அரிதான ஒன்றாக உள்ளது. பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள், விழா நாள் போன்ற விசே ஷமான காரணம் ஏதா வது இருந்தால் தான் அன்பளிப்புகளை வாங் கிக் கொடுப்பார்கள்.

இப்படி அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஒவ்வொ ரு மனிதனின் வாழ்க்கை யிலும் எத்தனையோ வாய்ப்புகளும், நாட்களு ம் வரத்தான் செய்கின்ற ன. அவ்வாறு வரும் ஒவ்வொரு விசேஷ நாட்களுக்கும் என் னென்ன பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்று இனி பார்க்கலாம்.

நாம் ஒருவர் மீது கொ ண்டுள்ள அன்பையும், மரி யாதையையும் காட் டுவதற்கு அடையாள மாக கொடுப்பதே அன்ப ளிப்பாகும். அப்படிப்பட்ட அன்பளிப்பு பொருட்கள் எவை? என்ற கேள்வி க்கு விடை அளிப்பது கடினமான விஷயம் தான். ஏனென்றால் இன்னென்ன பொருட்களைத்தான் அன்ப ளிப்பாக கொடுக்க வேண்டும் என்று யாராலும் வரையறு த்துக் கூறிவிட முடியாது. என வே, நாம் பொதுவாக அன்ப ளிப்புக்குரிய சில பொருட்களை பட்டியலிட்டுக் கூறலாமே தவி ர, இவை மட்டும் தான் அன்ப ளிப்புக்கு உரிய பொருட்கள் என் று கூற முடியாது.

ஒருவருக்கு அன்பளிப்பு செய் வதன் நோக்கம் என்ன? அவரை மகி ழ்விப்பதற்காகத்தான். என வே ஆ ணோ, பெண்ணோ, யா ராக இரு ந்தாலும் ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு என்ன மாதிரி பொருளில் விருப்பம் அதிகம் என்று தெரிந்து கொண்டு, அவருக்குப் பிடி த்தமான பொருளை வாங்கி அன்பளிப்புச் செய்தால் அது அவ ர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அன்பளிப்பு பொரு ட்களில் பரவலாக இட ம் பெறத்தக்கவை வரு மாறு:

பேனா செட்:

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் முதல், அலுவலகப் பணியாளர், தொழி லாளி, முதலாளி, தொழிலதிபர், வியாபாரி வரை எல்லா ருக்குமே இன்றியமையாத ஒன்று பேனா ஆகும். யாருக்கு அன்பளிப்பு செய் கிறோம் என்பதை எண்ணிப்பார்த்து, அவ ருக்கு எப்படிப்பட்ட பேனா வை பரிசளித்தால் அது பயனு ள்ளதாக இருக்கும் என் பதைக் கருத்தில் கொள்வது நல் லது.

கைக்கடிகாரம்:

படித்தவர் முதல் பாமரர் வ ரை, ஏழை முதல் பணக்கா ரர் வரை எல்லா வயதின ரும் விரும்பி ஏற்கும் ஒரு பொருள் கடிகாரம் ஆகும். கைக் கடிகாரத்தில் ஆண்களுக் கென்றும் பெண்களுக் கென்றும் தனி த்தனி டிசைன்களில் கடிகாரங்கள் உள்ளன. உள் நாட்டுக் கடிகாரங்களோடு ஆயிர க்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடிகார ங்கள், வைரக்கல் பதித்த கடிகாரங்கள் என்று வகை வகையான கடிகாரங்கள் உள்ளன. பேனாக்களைப் போலவே கடிகா ரங்களைப் பரிசளிக்கும் போ தும், யாருக்கு எது பயன் படும் என்பதையும், யாரு க்கு எது விருப்பம் என்பதை யும் கவனித்து, கருத்தில் கொண்டு பரிசளிக்க வேண் டும்.

சுவர்க் கடிகாரம்:

இந்தப் பட்டியலில் டைம் பீஸ் என்னும் கடிகாரமும், சுவர்க்கடிகாரமும் அடங் கும். புது மனை புகுவிழா போன்ற சம யங்களில் பரிசளிக்க ஏற்றவை சுவர்க் கடிகாரங்கள். தேர்வுக்குப் படிக்கும் மாணவ ர்கள், குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் போ ன்றவ ர்களுக்கு அலாரம் வை க்கும் அமைப்பைக் கொண்ட டைம் பீஸ்கள் பயனுள்ளதாக அமை யும். அவர்களுக்கு டைம் பீஸ் களை பரிசளித்தால் மகிழ்ச் சியை ஏற்படுத்தும். ஏற்க னவே இந்தப் பொருட்கள் இருப்பவர் களுக்கு இவற்றை வாங்கிப் பரிசளிப்பது தேவை யற்றது. எனவே கடி காரங்க ளைப் பரிச ளிப்பதற்கு முன் னர் இந்த விஷ யத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.

கூலிங் கிளாஸ்:

ன்பளிப்புக்கு ஏற்ற பொருட்களில் மூக்குக் கண்ணாடியும் ஒன்று. கண் குளுமைக்காகவும், தூசு, துரும்புகள் கண்ணில் படாமல் பாது காக்கவும், சூரிய வெப்பம் கண்களைத் தாக்காமல் காக்கவும் இவற்றை பெரும்பாலானவ ர்கள் அணிந்து கொள்கிறார்கள். கண் ணாடிகளை அன்பளிப்பாக அளிக்க விரும்புகிறவர்கள், அவற்றை யாரு க்கு அளிக்கிறார்களோ அவர் களுடைய முக அமைப்புக்கும், அளவுக் கும், ஏற்றதாகவும், கவர்ச்சிக ரமானதாகவும் பார்த்து வாங்கிப் பரிசளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

புத்தகங்கள்:

திருமணங்களின் போது ம், சாதனை நிகழ்த்தும் மாணவ மாண வியரைப் பாராட்டும் போதும் பரி சளிப்பதற்கு பெரிதும் உகந்த பொருள் நல்ல தரமான நூல்களாகும். மாணவ ர்களுக்கு வாழ்க் கை முன் னேற்றத்தை விளக்கும் நூல்களும், விஞ்ஞானம், வரலா று, விளையாட்டு மற்றும் சாதனை நூல்களும் பரிசளிக்கலாம். முதியவர்களுக்கு இதிகாசம், புராணம், இலக்கியம், வர லாற்று நூல்களையும், பெண் களுக்கு அழகுக் குறிப்புகள், சமையற்கலை, குழந்தை வளர்ப்பு போன்ற நூல்களையும் பரிசளிக்கலாம்.

ஆடை, அணிகள், சால்வைகள்:

அரசியல் தலைவர்களுக்கும், பேச்சாளர் களுக்கும் சால்வைகளும், நண்பர்களு க்கும், உறவினர்களுக்கும் ஆடைகளை யும் வாங்கி வந்து அன்பளிப்பு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக் கத்தை தொ டரலாம். குறிப்பாக சொல்ல வேண்டு மானால் குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமி களுக்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத் தால் அவர்கள் மட்டு மின்றி பெற்றோரும் அக மகிழ் வார்கள்.

பொம்மைகள்:

பொம்மைகளைப் போலக் குழந் தைகளை மகிழ்விக்கும் அன்ப ளிப்புகள் வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம். சிறுவர், சிறு மியர் மற்றும் குழந்தைகள் சம் பந்தப்பட்ட பிறந்த நாள் விழாக் களில் பொம்மைகளைப் பரிசளி ப்பது மிகவும் புத்திசாலித் தனம் ஆகும்.

வீட்டு உபயோகப் பொருட்கள்:

டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை களை திருமணம், புதுமனை புகுவிழா போன்ற வைகளுக்கு அன்பளிப்புச் செய்ய லாம்.

காமிராக்கள், கால்குலேட்டர்கள்:

சாதனைகள் புரியும் இளைஞர்களுக் கும், மாணவர்களுக்கும் பெற் றோரும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் காமிராக் களையும், கால்குலேட்டர் களையும் அன்பளிப்பு செய்யலாம்.

வாழ்த்து அட்டைகள்:

பண்டிகைகள், விழாக்கள் போன்றவை களுக்கு வாழ்த்து அட் டைகள் அனுப்ப லாம். வாழ்த்து அட்டைகளை நண்பர் கள், உறவி னர்கள், காதலர்கள் என அனை த்து தரப்பினரும் பயன் படுத்  தலாம்.

கலைப் பொருட்கள்:

காட்சிக்கு வைக்க வேண்டிய கலை நுணுக்கம் மிக்க பொரு ட்களை வசதியானவர்களுக்கு வழங்குவதே பொருத் தமானதாகும்.

செலவில்லாத அன்பளிப்பு:

அன்பளிப்புகள் எல்லாமே காசு கொடுத்து வா ங்குவது தான் என்று அர்த்தமில்லை. யாருக்கு எது பிடிக்குமோ, யாருக்கு எது தே வையோ, அதை அவர்களுக்கு அன்பளி ப்பாக வழங்கு வதுதான் வெற்றிகரமான அன்பளிப்பு கொள்கை ஆகும். புன்ன கையை கொடுங்கள், புன்னகை யோடு வாழுங்கள். இந்தக் கொள்கையை மறக்காமல் கடைப்பிடித்தால் நமக்குத் தெரிந் தவர்களிடமும், உறவினர் மற்றும் நண்பர்களிடமும் நல்லவர் என்ற பெயர் எடுப்பது மிக சுலபம். இந்த சுலபமான வழி இருக்கும் போது, அன் பளிப்பு கொடுக்க யோசிக்க வேண்டுமா என்ன?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: