Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதீத முக்கியத்துவம் பெறும் நினைவுத்திறன்

மனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இரு க்கிறது. பிறப்பிலி ருந்து, இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலு ம், நினைவுத் திறன் என் பது ஜீவாதாரமான அம்ச மாய் விளங்குகிறது.

நினைவுத்திறன் பல வகை ப்பட்டதாய் இருந் தாலும், மனித வாழ் வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத் திறன் தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவ சியமான ஒன்றாக இருந்தாலும், மாணவர் பருவத்தில், நினைவுத்திறன் அதீத முக்கியத்துவம் பெறு கிறது. 

அதிக நினைவுத்திறன் உள்ள மாணவர், சாதனை மாணவராக ஆகிறார். எனவே, சிறந்த நினை வுத்திறன் என்ப தை ஒரு பெரிய வரமாக வும், பொக்கிஷமாகவும் மாணவர் சமுதாயம் கருதுகி றது. இந்திய கல்வித்திட்டத்தில், ஒருவரின் படைப்புத்திறனை வி ட, அவர் புத்தகத்தில் படித்ததை எந்தளவிற்கு நினைவில் கொ ண்டுவந்து தேர்வில் எழுதுகிறார் என்பதில்தான், அந்த மாணவ ரின் திறமையும், அறிவும் நிர்ண யிக்கப்படுகிறது. அவரின் எதிர் காலம், அவர் 3 மணி நேரத் தில் எழுதும் தேர்வில் பெறு ம் மதிப்பெண்களை வைத்தே நிர்ணயிக்க ப்படுகிறது. என வே, இங்கு நினைவுத் திறன் தான் அனைத்தும், அந்த நினைவுத்திறனை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் முதற் கொண்டு, அனைத்து பருவத்தினருமே, பல விதமான முயற் சிகளை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஏனெனில், அபார நினைவுத்திறன் என்பது ஒரு மந்திர சக்தியைப் போன்றது. அந்த மந்திர சக்திக்காக பலரும் கஷ்டப்பட நினைப்பது ஒன் றும் அதிசயம் அல்லவே. நினைவாற் றல் என்ற அந்த மந்திர சக்தியை எவ் வாறெல்லாம் மேம்படுத்திக்கொண்டு, சாதனையாளராகத் திகழலாம் என்பத ற்கான, பலவித விரிவான ஆலோச னைகள் இங்கே வகைப்படுத்தி வழங் கப்பட்டுள்ளன.

முதல் நிலையில் பதிவுசெய்தல்

முதல் நிலையில் பதிவுசெய்யாத அல் லது சரியான வகையில் பதிவு செய்யா த சில விஷயங்களை, நினைவுத்திறனில் கொண்டுவர முடியாது. ஏராளமான மறதிப் பிரச்சினைகள் இந்தவகை யைச் சேர்ந்தவை. உங்களுக்கு, சில வரலாற்று நிகழ்வுகளின் ஆண்டுகளோ, சில வரலாற்றுப் பாத்திரங் களின் பெயர்க ளோ நினைவிற்கு வரா ம ல் போகலாம். சில நண்பர் களின்  முகங்களோ அல்ல து அவர்களின் பெயர்க ளோ நினைவில் வராமல் போகலாம். சில படங்களி ன் பெயர்களோ, நடிகர்க ளோ நினைவிற்கு வராமல் போகலாம். இப்பிரச்சினை க்கு முக்கிய காரணம், நீங்க ள் அவற்றை உங்கள் நினை வுத்திறனின் முதல் நிலையில் பதிவு செய்யாதது தான்.

எனவே தவறு நம் மீதுதான். ஒரு விஷயம் அந்தளவிற்கு முக்கியமற்றது என்று நாம் நினைப்பதால், அவற்றை நாம் முதல் நிலையில் பதிவு செய்வதில்லை. அப்படி பதிவு செய்யதா விஷய ங்களைத்தான் நம்மால் நினைவுற்கு கொண்டு வர முடிவதில்லை.

விஷயங்களைக் கோப் பாக்குதல் 

ஒரு சிறந்த அலுவலக செயல்பாட்டிற்கு, கோப்பாக்குதல் என்பது மிகவும் முக் கியமான ஒன்றாகும். ஒவ்வொரு விதமான கோப்பிற்கும் ஒரு தலைப்பு இருக்கும் மற்றும் ஒன்றுக் கொன்று தொ டர்புடைய தலைப்புகளை க் கொண்ட கோப்புகள், ஒ ரு பொதுப் பெயரில் வகை ப்படுத்தப் பட்டிருக்கும். சிறந்த முறையில் கோப் பிடப்பட்டிருந்தால்தான், தேவைப் படும்போது, எளி தாக எடுக்க வசதியாக இருக்கும். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவை வகைப் படுத்தப்பட்டிருக்கும். பழைய கோப்புகள் பதிவு செய்யப்பட்டு தனியிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றும் முக்கிய பணியிடத்திலிருந்து சற்று தொலைவிலும் இருக்கும்.

கணினியில் கூட, விஷயங் கள் கோப்புகளில்தான் சேமி க்கப்பட்டுள்ளன. மனித மூ ளையானது, பல விதங்களி ல் கணி னியைப் போன்றே செயல்படுகிறது. எனவே, சி ல விஷயங்களை முறையா க குறித்துக்கொண்டு அவற் றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் மூளைக்கு உத் தரவிட்டப் பிறகு, அவற்றை முறையாக கோப்பிடுவதற்கு நாம் மூளைக்கு உதவுவதும் முக்கியம். நினைவாற்றல் என்பதில், விஷயங்களை உட னே நினைவிற்கு கொண்டு வருதல் மிகவும் முக் கியம்.

ஒரு நபரை சந்திக்கையில், அவரது பெயரைச் சொல்லி அழைப்பதற்கு, அந்தப் பெயர் உட னடியாக நமக்கு நினைவில் வர வேண்டும். மேலும், நாம் பேசி க்கொண்டிருக்கும்போது, பேச் சை நிறுத்தாமலேயே அடுத்தடு த்த விஷயங்களை நினைவில் கொண்டுவந்து, தொடர்ச்சியாகப் பேச வேண் டும். பேச வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்து நினைவுப் படுத்துகையில், நினைவுக்கோப்புகளை களைத்து விடக் கூடாது. எனவே, உடனடி நினைவுப்படுத்தலுக்கு, முறை யான கோப்பாக்குதல் அவசியம்.

முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்தல்

ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது விழாவிலோ நமக்கு சில நபர்கள் அறிமுகப்படு த்தப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர்கள் ஒரு சம்பிர தாயத்திற்காக அறிமுகப் படுத்தப்பட்டவர்கள் அல் லது அவர்களை இனிமேல் தொடர்புகொள்ள மாட் டோம் என்ற நிலை இரு ந்தால் அவர் களின் பெயர் மற்றும் முகங்களை முக்கி யத்துவம் கொடுத்து, தனிப்படுத்தி நம் மூளையில் பதிவு செய்ய மாட்டோம். எனவே, அந்தப் பெயர்களும், முகங்க ளும் நமக்கு மறந்து விடும் அல்லது நினைவிற்கு கொண்டு வர முடியாதளவிற்கு எங் கேயோ சிக்கலான இடத் தில் பதிவாகிவிடும். என வே, அதுபோன்ற நபர்களை நாம் மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயன்றா லும் கோப்புகள் கலைக்கப் பட்டு, குழப்பப்பட்டு நமது முயற்சியில் நாம் தோல்வி யடைந்து விடுவோம்.

ஆழ்மனதின் செயல்பாடு

நமது ஆழ்ந்த பய உணர்வுகள், மனக் கவலைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவை உட்பொதிந்த நிலையில், நமது ஆழ் மனதில் இருக்கின்றன. இவை, முக்கிய மான நேரங்களில் நமது வாழ்க்கையில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகி ன்றன. இந்த உணர்வுகள், சாதாரண உண ர் நிலையில் இருந்து, ஆழ் மனதிற்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆழ் மனதி ற்குள் இருக்கும் விஷயங்கள், நமது அன் றாட வாழ்க்கை அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

அந்தளவு தேவையில்லாத விஷயங்களை, உணர் நிலையா னது, ஆழ்மனதிற்குள் மாற்று கிறது. எனவே, மேலோட் டமான அறிவு நிலையானது, தேவையற்ற விஷயங்களால் நிரம்பிக் காணப்படுவதில் லை. அதேசமயம், தேவையா ன நேரத்தில் தகவலும் கிடை க்கிறது. இதன்மூலம், நமது மனம் எதையும் மறப்பதில் லை என்பது தெரிய வருகி றது. கணினி செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், நாம் ஒரு கோப்பை நீக்கினாலோ அல்லது அழித்தாலோ, அது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நீங்குகிறதேயொழிய, முற்றிலு ம் அழிந்து விடுவதில்லை. அது ஒரு தனியிடத்தில் வைக் கப்பட்டு, தேவையானபோ து எடுத்துக் கொள்ளப் படுகி றது.

ஆழ்மனம் என்பது நமது நேரடிக் கட்டுப்பாட்டில் இரு ப்ப தில்லை. சாதாரண அறி வுநிலையைக் காட்டிலும், ஆழ்மனம் என்பது அதிகள வில் விஷயங்களை தன்னுள் வைத்துள்ளது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொண்டு வர இயலாதபோது, அவற்றை நினை வுப்படுத்த ஆழ்மன தின் உதவியை நாடு கிறோம். மேலும், நி னைவுப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷ யம், ஆழ்மனதில் தான் இருக்க வேண் டும் என்பதில்லை, அ து சாதாரண அறிவு நிலையிலும் இருக்கலாம். ஆழ்மனம் என்பது விஷயங்களை தேடுகிறது. பெரும்பாலும், நல்ல இரவு உறக்கத்திற்குப் பிற கு, நாம் தேடி ய விஷய ங்கள் நினைவுக்கு வரு கிறது.

சூழலும், பின்னணியும் முக்கியம்

நாம் ஒரு விஷயத்தை எப்போதும் தனியாக பார் ப்பதில்லை. அதனுடைய பின்னணி மற்றும் சூழல் ஆகியவற்றுடன் இணைந்தேப் பார்க்கிறோம். உதாரணமாக ஒரு மரத்தை நாம் பார்க்கையில், அதனுடன் இணைந்த பிற அம்சங்க ளையும் இணைத்தேப் பார்க்கிறோம். நாம் ஒரு வார்த்தையை மட்டும் தனித் துப் படிப்பதில்லை. அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொ டுக்கக்கூடிய சூழல் மற்றும் பின்னணி யையும் சேர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கை யில் ஒரு விஷயத்தை நினை வில் வைத்துக்கொள்ள, தே வையான சூழலையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், சூழலும், பின்ன ணியும்தான், நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றி பலவிதமான விஷயங்களை நினைவில் வைக்க உதவுகி றது. ஒரு கதையை நாம் நினைவில் நிறுத்துகிறோம் என்றா ல், தேவையான சூழல் மற்றும் பின்னணி அதில் இரு க்கிறது. தனித்த ஒரு விஷ யம் எப்போதுமே நினைவில் நிற் காது.

தொடர்புடையதாக மாற்றுங் கள்

மூளையானது, நாம் பார்க்கு ம் விஷயங்கள் அனைத்தை யும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் அதை நினைவில் வைத்துக்கொள்வதற்கு பொருத்தமானதாக மாற்றுகிறது. நாம் ஒரு விஷயத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்க்கி றோம். ஆனால், அறி வு அதை முப்பரிமாண த்தில் பார் க்கிறது.

ஒரு கவிதையை நமது மொழியில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நம்மால் முடி கிறது. ஆனால் நாம் அறியாத மொழியில் ஒரு வரியைக்கூட நினைவில்  நிறுத்த முடிவதில்லை. தன க்கு தெரிந்த மொழிக்கே மூளை முக்கியத்துவம் கொடுக்கி றது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்து கையில், மூளை ஏற்றுக்கொள்ளும் வித த்தில் அதை மாற்ற வேண்டும். அந்த வகையில் சில பொருத்தமான முறை கள் இங்கே கொடுக்கப்பட்டுள் ளன. அவை, உருவமைப்பு, இணைப்பு, ஆர்வம், புலன்க ளால் அறியக் கூடிய அம்சம், உணர்வுப் பூர்வ நிலை மற் றும் காட்சிநிலை.

முழுமையான சேமிப்பு

ஒரு விஷயத்தை நமது மூ ளையானது, ஒரு தகவலை முழு மையாக சேமித்து வை த்துக்கொள்கிறது. எனவே ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதை எளிதாக நினைவுப்படுத்த முடி யும் மற்றும் அவற்றை நம து மனக்கண்ணில் முழுமை யாகப் பார்க்க முடியும்.

உதாரணமாக, ஒரு கதை யை கேள்வி-பதில் பாணி யில் படித்தால் அதைப் புரி ந்துகொள்ள நமக்கு சிரம மாக இருக்கும். பதிலாக, மு ழு கதையை சாதாரண வடி வில் முழுமையாகப் படித் துவிட்டு, அந்த கேள்வி- பதில் பகுதியை பார்க்கை யில் நமக்கு அனைத்தும் புரியும். எனவேதான், ஒரு விஷய த்தை பகுதி பகுதியாகப் பார்க்காமல், அவற்றை முழுமை யான அம்சத்தில் பார்த்தால், அதன் எந்த அம்சத்தையும் நம்மால் எளிதில் நினைவில் கொண் டுவர முடியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply