Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை

வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்திய வாதி அன்னா ஹசாரே வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகர ங்களில் அவருக்கு ஆ தரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரேவும் அவரது ஆதரவாளர் களும் உண்ணாவிரதப்போராட்டத்தை அறிவித்தனர். இதை யடுத்து நேற்று காலை டில் லியில் அன்னா ஹசாரே கை து செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவா ளர்களான அரவிந்த் கெஜ்ரி வால், சாந்தி பூஷன், கிரண் பேடி ஆகியோரும் கைது செய் யப்பட்டனர். சாந்தி பூஷன் மற் றும் கிரண்பேடி ஆகியோர் நேற்று மாலை விடு தலை செய்யப்பட்டனர். கைது செய் யப்பட்ட அன்னா ஹசாரே வட க்கு டில்லியில் உள்ள ஆபிச ர்ஸ் மெஸ்சில் தங்க வைக்கப் பட்டார். அங்கு சென்ற நீதிபதி கள், ஹசாரேவிடம் சில உறுதிமொழிகள் கோர, அதை ஹசாரே மறுத்ததையடுத்து, அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். அவருடன் கெஜ்ரிவா லும் சிறையில் அடைக் கப்பட்டார்.

இந்நிலையில், ஹசாரே கைது செய் யப்பட்டதைக்கண்டித்து நாடு முழுவ தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு நகரங்களில் ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பெ ண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல் வேறு நகரங்களில் வக்கீல்கள் பணியை புறக்கணித்து ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டனர். டில்லியில் இன்று மதியம் ஹசா ரேவுக்கு ஆதரவாக ஆட் டோ டிரைவர்கள் உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதே போல், டில்லி யில் சுப்ரீம் கோர்ட் வளாகத்திலிருந்து இந்தியா கேட் வரை வக்கீ ல்கள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மும் பையின் அந்தேரி பகுதியில் இன்று மாலை ஹசாரேவுக்கு ஆதரவாக தீப ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

காங்., உயர்நிலைக்குழு: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழு வதும் எழுந்துள்ள அலை யைப்பார்த்து மிரண்டு போயுள்ள காங்., இன்று காலை உயர்நிலைக்குழு கூட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட் டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல், சிதம்பரம், பிர ணாப், அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட த்தில், அன்னா ஹசாரே கைது தொடர்பாக பிரதமர் விளக்க மளிப்பது என்று முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து, முத லில் லோக் சபா விலும் பின்னர் ராஜ் யசபாவிலும் பிரதமர் விளக்கம ளித்தார்.

பிரதமர் விளக்கம்: லோக்பால் மசோதா தாக்கல் செய்யப் பட்ட தையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஜன்லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை ஹசாரே நிர்பந்தப்படுத்துவதாக பிரதமர் மன் மேகான் சிங் தெரிவித்தார். ஹசாரே கைது தொடர்பாக லோக் சபாவில் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், அன்னா ஹசாரே கைது தொடர்பாக நேற்று நட ந்த சம்பவங்கள் மிகவும் வருத்த மளிக்கின்றன என்று தெரிவித்தார். அன்னா ஹசாரேவும் அவரது இளம் ஆதர வாளர்களும் ஜன் லோக் பால் மசோதா பார்லிமெ ன்டில் நிறைவேற வேண் டும் என விரும்புகின்ற னர். லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல், தன்னு டைய ஜன் லோக் பால் மசோதா வை நிறைவேற்ற வேண் டும் என ஹசாரே நிர்பந்தப் படுத் துகிறார் என்றும் தெரி வித்தார். கடந்த 15ம் தேதி, போலீசார் விதித்த 6 நிபந் தனைகளை ஹசாரே ஏற்க வில்லை. இதையடுத்து அவரை கைது செய்வதைத் தவிர டில்லி போலீசாருக்கு வேறு வழி யில்லாமல் போய் விட்டது என்றும் தெரிவித்தார்.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: