Wednesday, March 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம்.
டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர்.
பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று அன்னாஹசாரே அறிவித் தார்.
மார்ச் 3 : ஆலோசனை நடத்த வருமாறு அன்னா ஹசா ரேவிற்கு பிரதமர் மன் மோ கன்சிங் கடிதம் அனுப்பினார்.
மார்ச் 7 : கிரண்பேடி, ஸ்வாமி அக்னிவேஷ், பிரஷாந்த் பூஷ ன் மற்றும் சாந்தி பூஷன் ஆகி யோருடன் சென்று பிரதமரை சந்தித்தார் அன்னா ஹசாரே.
மார்ச் 8 : லோக்பால் மசோதாவை ஆய்வு செய்ய துணை கமிட்டி ஒன்றை பிரதமர் ஏற்படுத்தினார். மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, எம். வீரப்ப மொய்லி, கபில் சிபல், சரத் பவார் உள் ளிட்டோர் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்ட னர்.
மார்ச் 28: துணைக் கமி ட்டி உறுப்பினர்களை சந்தித்து நடத்திய ஆ லோசனை பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு திருப்தி அளி க்கவில்லை. எனவே திட்டமிட்டப்படி ஏப்ரல் 5-ந்தேதி உண் ணாவிரதம் இருக்க போவதாக அன்னா ஹசாரே அறிவித் தார்.
ஏப்ரல் 5: ஹசாரே தனது ஆதரவாளர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு பாரதீய ஜனதா ஆதரவு தெரிவித்தது. அதே சமயம் முதிர்ச்சியற்ற நடவடிக்கை என்று காங்கிரஸ் விமர்சித்தது.
ஏப்ரல் 10 : லோக்பால் மசோதா வரைவு கூட்டுக்குழுவை அமைக்க அரசு முன் வந்ததை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை ஹசாரே முடித்துக் கொண்டார்.
ஜூன் 21 : கூட்டு வரைவுக் குழு, 8 முறை கூடி விவாதித்தது. லோக் மசோதா அதிகார வரம்புக்குள் பிரதமர் மற்றும் நீதி பதிகளை கொண்டு வர வேண்டும் என்று சமூக பிரதிநிதிகள் கூறிய யோசனையை அரசு தரப்பு பிரதிநிதிகள் ஏற்காததால் தோல்வியுடன் முடிவடைந்தது.
ஜூன் 4 : சமூக ஆர்வலர்களால் தயாரிக்கப்பட்டுள்ள ஜன லோக்பால் மசோதாவை பின்பற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 16-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக ஹசா ரே அறிவித்தார்.
ஜூன் 30 : பிரதமர் மற்றும் நீதிபதிகளை உள்ளடக்காத லோக்பால் வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்தது.
ஜூலை 2 : அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்தது. அப்போது தங்களது கருத்துக்களை பாராளு மன்ற த்தில் தெரிவிப்பதாக கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
ஜூலை 28 : லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
ஆகஸ்ட் 4 : லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் அறி முகப்படுத்தப்பட்டு நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப ப்பட்டது.
ஆகஸ்ட் 11 : அரசின் லோக்பால் மசோதாவை நிராகரிக்கு மாறு நிலைக்குழுவுக்கு அன்னா ஹசாரே குழுவினர் வலியு றுத்தினர்.
ஆகஸ்ட் 15 : உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்ட அன் னா ஹசாரேவுக்கு டெல்லி போலீசார் 22 நிபந்தனைகளை விதித்தனர். இவற்றில் சிலவற்றை ஏற்க ஹசாரே மறுத்து விட்டதால், உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி அளி க்க டெல்லி போலீசார் மறுத்து விட்டனர்.
அன்னா ஹசாரேவிற்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொட ர்பாளர் மனீஷ்திவாரி ஊழல் குற்றச்சாட்டு கூறினார். இந்த புகாரை அன்னா ஹசாரே மறுத்தார்.
ஆகஸ்ட் 16 : தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க சென்ற ஹசாரேவை வழியிலேயே போலீசார் மடக்கி கைது செய் தனர். ஹசாரேவிற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட் டம் நடத்திய லட்சக்கணக்கான ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
news in malaimalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: