Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனைவியை வெல்ல…

அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றை க்கு பல நிறுவனங்கள் பல் வேறு முயற்சிகளை மேற் கொள்கின்றன. எட்டு மணி நேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழு ந்தது முதல் இரவு படுக்கும் வரை இ ணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்ய வே ண்டும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்து ள்ளனர்.

அலுவலக டென்சன்

அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவ லகத் தோடு விட்டுவிடுங்க ள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைக ளை மட்டும் நினையுங் கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிர யோகித்து விடா தீர்கள்.

அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் மனைவியை பார்த்ததும் அவளை பாச த்தோடு கட்டித் தழு வுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.

சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யு ங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங் கள் மனைவி.

குழந்தையாக மாற்றுங்கள்

சாப்பிடும்போது ஒன்றாகவே சாப் பிடுங்கள். அப்போது மனைவிக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவ றே இல்லை. அவ்வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறி விடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச் செல் லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகி ழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங் கள். வெளியில் மனை வியுடன் செல்லும்போது அவளை நெருங் கியபடியே செல்லுங்கள். முடிந் தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர் பார்ப்பார்கள்.

காதலும் புரிதலும்

சிலநேரங்களில், அவ ளே எதிர்பார்க்காத வகை யில் பரிசுப் பொருட் களை வாங்கிக்கொடு த்து அசத்துங்கள். எதிர் காலம் பற்றி முடிவு எடு க்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷ யத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப் போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள். செக்ஸ் விஷயத்தில் மட் டுமல்ல, எல்லா விஷய த்திலுமே உங்கள் மனை வியிடம் அன்பை பரிமா றிக் கொள்ளுங்கள்.

மற்றவர் உங்களை புரி ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணு வதற்குப் பதிலாக முதலில் நீங் கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் புரிந்து கொள்ளு தல் இல்லாததால்தான் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. புரிதல் இல் லாதவர்கள் சேர்ந்து வாழ வே முடியாது.

துணைவர் மற்றும் மற்றவர்க ளின் உரிமைகள், ஆசைகள், தே வைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதி ப்பதுபோலவே கணவரும் மனை வியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. எந்த விஷ யத்திலும் ஈகோ பார்க் காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண் டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்கா கவே வாழ வந்த வளிடம், நீங்கள் எந்த விஷ யத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

சொர்க்கமாகும் இல்லம்

எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளி ப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத் தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட் டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதான மாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற் படுவதை உணரமுடியும்.

இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங் கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply