Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மின்னஞ்சல் முன்னெச்சரிக்கைகள்

இன்று அனைத்து தகவல் பரிமாற்றத்திலும் இமெயில் எனப் படும் மின்னஞ்சல் இடம் கொ ண்டுள்ளது. ஒவ்வொரு நாளு ம் பலமுறை, நாம் பல்வேறு வகையான தகவல் பரி மாற்றத் திற்கு இதனைப் பயன்படுத்து கிறோம். ஆனால், இதனை அ மைப் பதிலும், அனுப்புவதிலும் பல தவறுகளை பலமுறை செய்கிறோம். எங்காவது சில வேளைகளில் தடுமாறி விடுகி றோம். நான் எவ்வகையான தவறுகளைச் செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்கலாமா!

1. முகவரிகளை அதன் அட்ரஸ் புக்கிலிருந்து கிளிக் செய்கை யில், அனுப்ப வேண்டியவரின் முகவரிக்குப் பதிலாக, வரி சையில் அடுத்தபடியாக இருப்பவரின் முகவரியைக் கிளிக் செய்து, சரியான நபரின் முகவ ரியைக் கிளிக் செய்துள்ளோ மா என்று பார்க்காமலேயே அ னுப்பி விடுகிறோம்.

2. அஞ்சல் செய்தியை அமைக் கையில் இடையே எழுந்து செ ல்ல வேண்டி வரும். பின்னர், எழுதி முடித்துவிட்டோம் என் று எண்ணி, அனுப்பி விடுவோ ம்.

3. பலர் எழுதியுள்ள அஞ்சல் களின் இடையே, நம் பதிலை ஒருவருக்கு மட்டும் அனுப்ப எண்ணி, கடிதத்தினை எழுதி, பின்னர், அதனை அனைவரு க்கும் அனுப்பி கெட்ட பெயர் வாங்கிக் கொள்வோம்.

4. அஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டிய பைல்களை இணைக்காமலேயே, அல்ல து இணைக்கப்படுகையில் இடையிலேயே Send பட்ட னை அழுத்தி, அரை குறை யாக அனுப்பி விடுவோம்.

5. ஒருவரின் அஞ்சலுக்குப் பதில் அனுப்புகையில், அவ ரின் மாற்றப்பட்ட அஞ்சல் முகவரிக்குப் பதிலாகப் பழைய அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுவோம். அவர் தனக்கு வர வில்லை என்று அடுத்து அஞ் சல் அனுப்பிய பின்னரும், சரி யாகச் சோதனை செய்து பார்க்கா மல், “”நான் அனுப்பினேன்” என அடித்துச் சொல்வோம்.

6. பல வேளைகளில் அஞ்சல் முகவரிகளைத் தொலைபேசி வ ழியாகப் பெறுவோம். அப்போது தவறாகக் குறித்துக் கொண்டு, அஞ்சல் அனுப்புவோம். அது திரு ம்பி வருகையில், முகவரியைச் சொன்னவரைக் குறை சொல் வோம்.

7. மிகவும் பெரிய பைலை இணைத்து அனுப்பி, அதனைப் பெறுபவரின் பொறுமையைச் சோதிப்போம்.

8. சப்ஜெக்ட் கட்டத்தில், அஞ்சலின் பொருளை எழுதாமல், என்னைக் கண்டுபிடி என்கிற மா திரி வாசகம் எழுது வோம்.

9. பல வேளைகளில் நமக்குக் கிடைத்த இ ணைய லிங்க்கு களை மற்றவருக்கு அனுப்பி, இதை எல்லாம் கிளிக் செய்து, இணைய தளங்களைப் பார் என்று செய்தியும் அனுப்புவோம். அதனை காப்பி செய்து பேஸ்ட் செய்கையில், டைப் செய்து அனுப்புகையில், ஏதே னும் தவறு இருக்கிறதா எனச் சோதி ப்பதில்லை. இறுதியில் அஞ்சல் மூலம் அவற்றைப் பெற்ற வருக்குச் சோதனையாக இவை அமை யும்.

இது போன்ற பல தவறுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவற்றில் பல பெரிய தவறுகளை எப்படி முன்னெச் சரிக்கையாக தடுக்கலாம் என்று இங்கு காணலாம்.

1. எப்போதும் அஞ்சலைப் பெறுபவர் அல்லது பெறுபவர் களின் முகவரிகளை, அஞ்சல் செய்தியை டைப் செய்து அடித்து முடித்த பின்னர், இணைப்புகளை இணைத்த பின்னர், இறுதியாக அமைக்கவும். இது நாம் அஞ்சலை முழுமையாக முடித்துவிட்டோம் என்பதனை உறு தி செய்கிறது. அவசரப் பட்டு அனுப்புவதனைத் தடுக்கிறது. முகவரி இல்லாமலேயே அனுப்ப முயற்சித்தால், இமெயில் புரோகிராம் நம்மை எச்சரிக்கும். அப்படியே அனு ப்பி விட்டாலும், அது யாருக்கும் போ ய்ச்சேராது. இதே போல அஞ்ச லுக்குப் பதில் அஞ்சல் அனுப்புகையில், ரிப் ளை பட்டன் அழுத்தியவுடன், இமெ யில் புரோகிராம் அஞ்சலை அனுப்பிய வரின் முகவரியை அமைத்துக் கொள் ளும் அல்லவா! உடனே அதனை காப்பிசெய்து, கட்செய்து, அஞ்சல் செய்தி யின் முதல் வரியாக வைத்துக் கொள்ளவும். அஞ்சலை டைப் செய்து முடித்தவுடன், முதல் வரியில் உள் ள முகவரியை மீண்டும் கட்செய்து, பெறுபவரின் முக வரிக் கான கட்டத்தில் பேஸ்ட் செய் திடவும்.

2. பைல் ஒன்றை இணைக்க விரும்பி னால், அஞ்சல் செய்தியினை எழுதும் முன் இணைக்கவும். இது அந்த பை லை இணைக்க முடியுமா என்பதை உங்களுக்குத் தெரிவி க்கும். இணைக்க மறப்பதைத் தடுக்கும்.

3. உங்களிடமிருந்து பதில் அஞ்சல் வரவில்லை என்று பதில் கடிதம் அனுப்புபவருக்கு, நீங்கள் பயன்படுத்திய அவரின் முகவரியை செய்தியாக அவரு க்கு அனுப்பவும். அவர் வேறு முகவரிகள் பயன்படுத்துகிறா ரா என்பதனைக் கவனிக்கவும்.

4. ஒருவருக்கு பதில் அஞ்சல் அனுப்புகையில், அவர் எந்த முகவரியைப் பயன்படுத்தி அஞ் சல் அனுப்பினாரோ, அத னையே பயன்படுத்தவும். வேறு பழைய முகவரிக்கு அனுப்பி னால், அவரின் ஸ்பேம் பில்டர் போன்ற வசதிகள், அத னைத் தடை செய்திட வாய்ப்பு உண்டு.

5. நீங்கள் புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றினைப் பயன்படு த்துகையில், அதனைப் பெறுபவருக்கு உறுதியாகத் தெரி விக்கவும்.

6. புதிய முகவரி ஒன்றை ஒருவரிடம் இருந்து அறி யும் போதும், பேச்சு வா யிலாக ஒருவரின் மின்ன ஞ்சல் முகவரியைப் பெ றும் போதும், அதற்கு சோதனை மடல் ஒன்று அனு ப்பி, அதனை உறுதி செய்து கொள்ளவும்.

7. நீங்களாக முகவரியினை டைப் செய்திடுவதைத் தவிர்க் கவும். அனுப்பு பவரிடமிருந்து அஞ்சல் வந்திருந்தால், அல்ல து அட்ரஸ் புக்கில் அவர் முகவரி இருப்பின், அப் படியே காப்பி செய்து பே ஸ்ட் செய்திடவும். கிளிக் செய்து அமைக்கும் வசதி இருப்பின் அதனைப் பயன் படுத்தவும்.

8. முகவரிகளை அமைக் கையில் தானாக அத னை அமைக்கும் வசதி கொண்ட இமெயில் புரோகிராம்களி டம் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும். சிலரின் இமெயில் முகவரி களின் முதல் ஐந்தெழுத்துக்கள் வரையில் ஒரே மாதிரியாக இருக்க சந்தர்ப்பம் உண்டு. Anandan, Ananya, Anandu, Ananthi … என்ற பெயர்கள் உள்ள முக வரியை டைப் செய்கையில், உங்கள் இமெயில் புரோ கிராம் எதனை வேண்டுமா னாலும் அமைக்கலாம். என வே எது அமைக்கப்படுகிறது; அதுதான் நீங்கள் அனுப்ப விரும்பும் நபரின் முகவரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து உறுதிப்படு த்திக் கொள்ளவும். இதே போல இணைய தள லிங்க் குகளை அப்படியே மற்றவருக்கு அனுப்ப வேண்டாம். அதில் நீங்கள் கிளிக் செய்து, தளங்கள் தடங்கலின்றிக் கிடைக்கின் றனவா என்று சோதனை செய்த பின்னர், சரியாக இரு ந் தாலே அனுப் பவும். சில வே ளைகளில், மோ சமான தளங்கள் இந்த முகவரிக ளில் இருக்கலா ம். கவனிக்கா வி ட் டால், நமக்குக் கெட்ட பெயர் கிடைக்கும்.

9. சப்ஜெக்ட் கட்டத்தில், சுருக்கமாக செய்தியின் சாராம் சத்தை தெரிவிக்கவும். சிலர் செய்திக்கு மாறாக சப்ஜெக்ட் லைன் அமைப்பார்கள். அதனை மட்டும் படித்து மாறாக செய்தியை எண்ணிக் கொ ள்ளலாம்.

10. பெரிய பைல்களை இணைத்து அனுப் பாமல், அவற்றை அனுப்ப வேறு இணைய தளங்கள் தரும் வசதியைப் பயன் படுத் தவும். அஞ்சலில் அதற்கான காரணத்தை யும், லிங்க் கையும் தரவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: