Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலுணர்வை தூண்டும் ஜாதிக்காய்

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தி யாவில் இருந்து வந்துள் ளது. இது மன்னர்கள் கால த்தில் வயக்கராவாக பயன் படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒரு வித போதை யை ஏற்படுத்தி பாலுணர் வை தூண்டுகிறது. ஜாதிக் காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பி டலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவி கிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பை னென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப் ரோல். ஜாதிக்காய் வெண்ணெயி ல் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படு கிறது. ஜாதி பத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண் ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், மு கத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாள டைவில் மறையும்; முகம் பொ லிவடையும் என்று கூறு கிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயி னை அரைத்து தயா ரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப் படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்:

அம்மை நோயின் போது ஜாதி க்காய், சீரகம், சுக்கு போன்ற வற்றை போடி செய்து உண விற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம் மைக் கொப்புளங்கள் தணியும் என் று சித்த மருத்துவம் கூறுகி றது. ஜாதிக்காய் அதிகம் சாப் பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போ க்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக் காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வை த்துக் கொள்ளவும். 5 கிராம் சூரண த்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த் துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணு க்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தசைப்பிடிப்பை நீக்கும்:

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீர ணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போ க்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகிய வற்றிற்கு பயன் படுகி றது. காலரா நோ யின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலி யினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடி நீர் காலரா நோயாளிகளின் தண்­ணீர் தாகத்தினைச் சரிப்படு த்தும். ஜாதிக்காய் த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத் து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதி பத்ரி எனப்படு கிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதி பத்ரி வயிற்றுப் போ க்கு, உப்புசம், குடல்வலி, ஆகிய வற்றினை போக்க உதவு கிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார் கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரண த்திற்கு சிறந்த மருந்தாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: