Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம். ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித் தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகி யோர் ஒரே வகுப்பில் படி த்தார்கள்.

அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந் தார், டெல்லியில் முத லில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இரு ந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன த்தில் இணைந்தார். அங்கு ரேடா ர்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலா ளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொ ண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்ன ணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட் ரானிக்கில் முக்கிய உறு ப்பினராக இருந்தார் சுஜாதா.

இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அர சின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலதுறைகளில் சாதனை படைத்த எழுத்தாளார் சுஜா தா உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இன்றும் உலக தமிழர்கள் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம்பெற்றுள்ளது.

Tamil Novels Written by Writer Sujatha 
No. Book Title Author
  Download                 
1 Amma mandapam Sujatha
Free Tamil eBooks
2 Arangetram Sujatha
Free Tamil eBooks
3 Arisi Sujatha
Free Tamil eBooks
4 Curfew Sujatha
Free Tamil eBooks
5 Eldorado Sujatha
Free Tamil eBooks
6 Eppadiyum vazhalam Sujatha
Free Tamil eBooks
7 Film utsav Sujatha
Free Tamil eBooks
8 Ilaneer Sujatha
Free Tamil eBooks
9 Jannal Sujatha
Free Tamil eBooks
10 Kaalgal Sujatha
Free Tamil eBooks
11 Kaaranam Sujatha
Free Tamil eBooks
12 Nagaram Sujatha
Free Tamil eBooks
13 En Iniya Endhira Sujatha
Free Tamil eBooks
14 Merina Sujatha
Free Tamil eBooks
15 Sujatha Sirukadhaigal Sujatha
Free Tamil eBooks
16 Katradhum Petradhum (Vikatan) Sujatha
Free Tamil eBooks
17 Kadavul Irukkirara Sujatha
Free Tamil eBooks
சுஜாதா பல நூற்றுகணக்கான நாவல்களும் சிறுகதைகளும் நாட ங்களும் இயற்றி இருக்கிறார். அதில் சில புத்தகங்களை மட்டுமே என்னால் இணையத்தில் தேடி எடுக்க முடிந்தது அதை தான் உங்க ளோடு பகிர்து கொள்கிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தக ங்களின் லிங்க் தெரிந்தால் கீழே கமென்ட் பகுதியில் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி : விக்கிபீடியா

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: