Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்கள்

வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் புதுமணப் பெண்களை தாக்கும் மனநோய் களில் முக்கியமானது நிரோடிக் டிஸ்ஆர்டர் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அச்ச பாதி ப்புகள். இந்த நோய் உள்ள பெ ண்கள் பார்ப் பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலை க்கு ஏற்ப நட ந்து கொள்வார்கள். ஆனால் மன துக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

நிரோடிக் நோய் தாக்கியவர்கள் தினசரி வாழ்க்கையில் எதற் கெடு த்தாலும் அச்சப்படுவார்கள். குறிப்பாக விபத்து நடந்த இடத்தை பார் க்கவோ அல்லது விபத்தில் சிக்கியவர்களின் உடலைப் பார்த்தோ மிக வும் பயப்படுவார்கள். ரத்தத்தை கண்டால் அவர்களுக்கு வாந்தி, மயக் கம் ஏற்படும். இதனால் உடல் ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை எதிர் கொள் வார்கள். அவர்களின் உடலில் விய ர்வை, நடுக்கம், விரைவான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். சிறு குடல் பாதிக்கப்படும். கொந்தளிப்பா ன உணர்வால் மூர்ச்சை உண்டாகும். இப்படி பயப்படும் பெண்கள் முதலில் வாழும் முறையை மாற்ற வேண்டும்.

வாழும் முறையில் மாற்றம்

பள்ளிக்கு செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை பயப்படுவது, கண வரை நினைத்து கவலைப்படு வது ஆகியவை தேவையில்லாத பயம் என்பதை இந்த நோய் தாக்கியவ ர்கள் உணர வேண்டும். தனிமை யில் இருந்தால் பயமாக இருந் தால் அதை தவிர்ப்பது நல்லது. அச்சம் தரும் சந்தர் ப்பங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நிரோடிக் நோய் தாக்கியவர்களு க்கு பாதுகாப்பான சூழலை உருவா க்க வேண்டும். பயப்பட வைக்கும் சூழ் நிலையை எதிர்த்து போராடும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று அவர்கள் மனதில் பதியும் வகையில் அடிக்கடி சொ ல்லிக் கொண்டே இருக்க வேண் டும். அச்சத்தால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது என்று தெரிந் தால் உடனே மருத் துவரிடம் செல்லவும்.

மனப்பான்மையை மாற்றுங்கள்

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப் பான்மையை உருவாக்க வேண்டும். எதையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்க கற் றுக் கொள்ள வேண்டும். தினமும் யோ கா, தியானம், இசை ஆகியவற்றில் கவ னம் செலுத் துவது நல்லது. மனதில் அச்சம் தோன்றும் போது ஏதாவது பாடலை பாடலாம். எப்போதும் நமக்குப் பிடித்த பாடலை முணு முணுத்துக் கொண்டிருந்தால் அச்சம் தரும் சிந்தனை குறையும். இவை அனைத்தையும் விட, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் மனதில் அச்சம் குறையும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply