Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என் அழகுக்கு காரணம் . . . : – தேவயானி

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக… ஒரு குழந்தை!

கொஞ்சல் பேச்சும், பால்யம் மாறாத சிரி ப்பும் தேவயானியை இன்னமும் குழந்தை யாகவே நினைக்கத் தூண்டுகிறது. ‘மலர்க் கொடி’யாக மலர்ந்து சிரிக்கும் தேவ யானி, ”ஒரு நிமிஷம்கூட ஓய்வு இல்லா மல் என் ஜிம்மில் நான் பரபரப்பா இருப் பேன். அதான் என் ஃபிட்னெஸுக்குக் கார ணம்!” என்கிறார். ஜிம் என அவர் கை காட்டும் இடத்தில் அவருடைய இரண்டு குழந்தைகளும் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். ”இவங்களைப் பராமரிக் கிறது 10 ஜிம்மில் பயிற்சி எடுக்கிறதுக்குச் சமம். பராமரிப்பு, விளையாட்டுனு குழந்தைகளுடன்தான் என் ஒவ்வொரு நாளும் கழியும். சீரியல், ஷூட்டிங்னு என்னதான் பரபரப்பா இயங்கினாலும், குழந்தைங்களை மிஸ் பண்ணவே மாட்டேன். அவ ங்களோட பேசுறது, சிரிக்கிறது, விளையாடுறது, சோறு ஊட்டுற துன்னு ஒவ்வொரு நிமிஷத்தை யும் ரசிச்சுச் செலவிடுவேன். குழ ந்தைங்களோட பேச்சுக்குத் தலை யாட்டுறதே எனக்குப் பெரிய பயிற் சிதான். அதோட, வீட்டு வேலைக ளையும் நானே இழுத்துப் போட்டு செய்வேன். பாத்திரம் தேய்க்கிறது தொடங்கி, சமையல் வரைக்கும் எந்த வேலையையும் விட்டு வைக் கிறது இல்லை. ஒரு நாளைக்குக் குறைஞ்சது 30 தடவை யாவது மாடிப்படி ஏறி இறங்குவேன். இதைவிடப் பெரிய பயிற்சி ஏதாவது இருக்கா சொல்லுங்க!” – பளீர் சிரிப்பில் பயிற்சி களைப் பட்டியல் போடுகிறார் தேவயானி.

”உடல் பருமனுக்கு முக்கியக் காரணம், கட்டுப்பாடு இல்லாத உணவும், சோம்பே றித்தனமும்தான். மிதமாகவும் சுவையா வும் சாப்பிடுவதுதான் என் பழக்கம். நொ றுக்குத்தீனிகளை அறவே தவிர்த்துட் டேன். நம்ம உடல் எந்த அளவுக்கு உழை க்குதுன்னு நமக்கு நல்லாவே தெரியும். அதுக்குத் தகு ந்த மாதிரி சாப்பிடணும். அவசரகதியில் அள்ளிப் போட்டு சாப்பி டும்போதுதான், ஜீரணப்பிரச்னைகள் உண் டாகும். அதனால், சாப்பாட்டை ரசிச்சுச் சாப்பிடணும். அதன் சுவையில் நாம லயிக்கணும். பகல் நேர த்தூக்கம் பலரால் கைவிட முடியாத பழக்கம். ஆனா, எவ்வளவு அசதியா இருந்தாலும், நான் பகலில் தூங்கவே மாட்டேன். ஏதாவது ஒரு வேலை பண் ணிட்டே இருப்பேன். அதே நேரம், ஒரு நா ளைக்கு ஏழு மணி நேரத் தூக்கம் என் பதில் உறுதியா இரு ப்பேன். கட்டிலில் படுக்கிற பழக்கமே கிடையாது. தரையில் உடம்பு முழுக்க அழுந்திப் படுத்தால், உடல் வலி வருகிற வாய்ப்பு குறைவு!”- ஆரோக்கிய மந்திரம் சொல்லும் தேவ யானி, வாக்கிங் பயிற்சியை ரொம்பவே வலியுறுத்துகிறார்.

”ஆரோக்கியமா இருக்கணும்னு பலவிதப் பயிற்சிகளைப் பண்ணி, உடலை வருத்திக்க வேண்டியது இல்லை. மித மான உணவுப் பழக்கம் முக்கியம். காலையில் கால் மணி நேரம் ட்ரெட் மில் பயிற்சி செய்வேன். எங்க ஏரியாவை ச் சுத்தியே வாக்கிங் போ வேன். கோயிலுக்குப் போற ப்ப, பிராகாரத்தைப் பல தட வை சுத்தி வருவேன். குழந் தைகளை நானே ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போவேன். நட க்கிறப்ப தான், நம்ம உடம்பு எல்லா விதத்திலும் சுறுசுறு ப்பாகுது. மனசும் ரிலாக்ஸ் ஆகுது!

வீட்டு வேலைகளைவிட உடம்புக்கு சுறுசுறுப்பு கொடுக்கிற பயிற்சிகள் ஜிம்மில்கூட இருக்காது. ஆனால், இன் னிக்கு எத்தனை பேர் வீட்டு வேலைகளை விருப்பப்ப ட்டு செய்யறாங்க. டி.வி. சேனல் மாற்றக்கூட ரி மோட் வந்துடுச்சு. விரல் கூ ட நோகாத அளவுக்கு ஒரே இடத்தில் அசையாமல் உட் கார்ந்தே எல்லா வேலைக ளையும் முடிச்சிடுறோம். அப்புறம், ஜிம்முக்கு ஓடு றோம். வாழ்க்கையோட பின்னிப் பிணைந்திருந்த பயிற்சி களைப் பிரிச்சுட்டு, வாழ்க்கை வேற, பயிற்சி வேறன்னு மாத் திக்கிட்டோம். நான், ‘வாழ்க்கையே பயிற்சிதான்’னு நம்பு றேன். வீட்ல வேலைக்கு ஆள் இருந்தாலும், 70 சதவிகித வேலைகளை நான்தான் செய் வேன். அதுவும் ரசித்து ரசித் துப் பண்ணுவேன். நாம சொன்னா, நம்ம உடம்பு நிச்சயம் கேட்கும். என் தம்பி நகுல் சினிமாவில் ஹீ ரோவா ஜெயிச்சே ஆகணும்கிற வெறியோடு ஒரே வரு ஷத்தில் 35 கிலோ வெயிட் குறைச்சான். நம்ம இலக்குக்குத் தக்கபடி பயிற்சி களைச் செய்ய நாம தயங்கவே கூடாது!”

”முகத்தில் இன்னும் பால்யம் குறையாம எப்படிப் பராமரி க்கிறீங்க?”

”கலகலப்பு குறையாத சிரிப்புதான் என் முகப் பொலிவுக்குக் காரணம். எப்பவும் புன்னகைத்துக்கொண்டே இருக்க, கவலைகளை மனசுல தேக் கிக்கவே மாட்டேன். எந்தப் பிரச்னை க்கும் அஞ்சு நிமிஷம்தான் முக்கி யத்துவம் கொடுப்பேன். அந்த நேரத் துக்குள் அதுக்குத் தீர்வை யோசிச்சுட்டு, அடுத்த நிமிஷம் சட்டுனு இயல்புக்குத் திரும்பிடுவேன். பேபி சோப் போட்டு த்தான் முகம் கழுவுவேன். அடிக்கடி முகம் கழுவுறது நல்லது. ஷூட்டிங் தவிர, வேறு எப்ப வும் மேக்கப் போட மாட் டேன். புதுசா க்ரீம், ஆயில், சோப்னு எதையும் பரிசோ தனை பண்ணிப் பார்க்க மாட் டேன். கூந்த லுக்குத் தேங்காய் எண்ணெய்… நேரம் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய் மசாஜ்… அவ்வளவுதான்! ரசாயனப் பொருட்களால் உண்டாகும் அழகு கொஞ்ச காலம் தான் நீடிக்கும். அதனால், முகத் துக்காகவோ, முடிக்காக வோ, பியூட்டி பார்லர் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்!”- கணவர் ராஜகுமாரன் தோளில் சாய்ந்தபடி சொல்லும் தேவயானி, தனது ஸ்லிம் தேக ரகசியமும் பகிர்ந்து கொள்கிறார்.

”ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கணும்னு சொல்வாங்க. ஆனா, நான் ஒரு நாளைக்கு ஆறு லிட்டருக்குக் குறையா மல் தண்ணீ ர் குடிப்பேன். சில நாட்களில் 10 லிட்டர் வரைகூடக் குடிப்பேன். எவ் வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவுக்கு உடம்பு ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

அதனால, நிறையத் தண்ணீர் குடிங்க. குடிச்சுக்கிட்டே இரு ங்க!”- உதடு சுழித்து தேவயானி சொல்ல, ”இவங்க சரியான தண்ணி பார்ட்டி சார்!” எனக் கிண்டல் அடிக்கிறார் ராஜ குமாரன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: