Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெண்டை சாகுபடி: வருடம் முழுவதும் . . .

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிண ற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம். இம் மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர். ஆனி- ஆடி பட்டத்தில் ஒருவிதமான காற்றும் உஷ்ணமும் நிலவும். இச்சூழ்நிலை யில் மஞ்சள் நரம்பு நோய் செடிகளைத் தாக்கும். விவசாயி களுக்கு பேயர் கம்பெனிக்காரர்கள் உதவி செய்வார்கள். இவர்களிடம் “கொளச்’ என்னும் மருந்துள்ளது. இந்த மருந்தினை விதை யுடன் கல ந்து விதைத்தால் வியா தி வருவதில்லை. பேயர் கம்பெனி விதையுடன் மருந்து கலந்து கொடுத்து உதவுகி ன்றது. இந்த கம்பெனியில் அதிக மக சூல் தரும் ஒட்டு வீரிய ரகங்களும் உள்ளன. (மைக் கோவின் ஒட்டு வீரிய ரகங்களான நம்பர் 10, 11, 12) விதையு டன் மருந்து கலப்பது எப்படியெனில், ஒரு கிலோ விதைக்கு 30 கிராம் கொளச் மருந்து கலக்க, ஆறிய அரிசி கஞ்சியை எடுத்துக்கொண்டு அதில் விதைமருந்து இட்டு நன்கு கலந்து பின் விதையினை நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள் ளலாம். சாகுபடிக்கு தேர் ந்தெடுத்த நிலத்தி னை நன்கு உழுது ஏக்கருக் கு நன்கு மக்கிய தொழு உரம் 10 டன் இட்டு மீண் டும் இயற்கை உரம் மண் ணோடு நன்கு கலக்கும் படி உழவேண்டும். நிலத்தில் 60செ.மீ. இடைவெளி கொடு த்து பார்சால் அமைக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த ரகங் களின் விதையை பாரில் விதைக்கு விதை 20 செ.மீ. இடை வெளி யில் குழிக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைத்தபின் எம்.என். மிக்சர் 5 கிலோவை மணலுடன் கலந்து நிலத்திற்கு ஒரே சீராக இடவேண்டும். உடனே பாச னம் செய்ய வேண் டும். செடி முளைத்து மூன்று இலை பரு வத்தை அடைந்தவுடன் ஒரு லிட் டர் நீருக்கு 10 கிராம் அன் ன பேதி உப்பு மற்றும் 20 கிராம் யூரி யா இவைகளை கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும். வளர்ச்சி காலத்தில் மூன்று முறை களையெடுக்க வேண்டும். இரண்டாவது களையெடுக்கும் சமயம் ஏக்கருக்கு ஒரு மூடை டிஏபி, 1 மூடை பொட்டாஷ் இட்டு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.

செடியின் வயது 25 நாட்கள் இருக்கும்போது “கான்பிடார்’ என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவு தெளித்துவிட வேண்டும். இதுநல்ல காரமுள்ள மருந் தாகும். இது விதை விதைத்து 70 நாட்கள் வரை செடியை மஞ்சள் நோய் வராமல் தடுக்கும். செடி நட்ட 25ம் நாளிலி ருந்து காய்க்கத் துவங்கும். சாம்பல் நோய் தென்பட்டால் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந் தகம் கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண் டும்.

உஷ்ணம் தணிக்க: ஆனி -ஆடி பட்டத்தில் காற்று மற்றும் ஒரு வி தமான ஒடுக்கம் இரு க்கும். இதை தவிர்க்க வெண் டைச் செடிகளைச் சுற்றி கொத் தவரை செடிகளை வளர்க்க வேண்டும். பூசா நவுபகார் என் னும் ரகம் அடர்த்தியாக உயர மாகவும் வளரும். கீழே சாயா மல் இருக்க குச்சிகள் நட்டு அதனுடன் செடிகளை கட்டிவிட வேண்டும். கொத்தவரை செடிகள் வெண்டை செடிகள் உஷ் ணத்தினால் பாதிக்கப் படாமல் பாதுகாக்கும். மேலும் கொத்தவரை கொடுக்கும் மகசூலும் விவசாயிகளுக்கு வர மாக அமையும். ஏக்கரில் ரூ.1000 வரை வரவு கிட்டும்.

வெண்டை அறுவடை: நிலத்தில் விதை விதைத்த 35ம் நாள் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் அறுவடை கிடைக்கும். மொத்தமாக 20, 25 அறுவடைகள் கிடைக்கும். விவசாயிகள் கவனித்து இளசான காய்களை பறிக்க வேண்டும். கவனிப்பு சரியில்லையேல் காய்கள் முதி ர்ச்சி அடைந்துவிடும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply