Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாகிஸ்தானிலும் சாகும் வரை உண்ணாவிரதம் : ஹசாரேவின் உண்ணாவிரதத்தால் ஈர்க்கப்பட்ட பாகிஸ்தானி அறிவிப்பு

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தால் பெரிதும் ஈர்க்கப் பட்ட பாகிஸ் தான் வர்த் தகர் ஒருவர், பாகிஸ்தானி லும் சாகும் வரையிலான உண்ணா விரதத்தை ஆரம்பிக்க போவதாக அறி வித்துள் ளார். பாகிஸ்தா னில் ஊழலுக்கு எதிராக வும், தெற் காசியாவின் இரா ணுவமயப்படுத்தலு க்கு எதிராகவும் இந்த உண் ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக அவர்  தெரிவித்துள்ளார்.

ராஜா ஜஹங்கிர் அக்தர் எனும் 68 வயதான குறித்த நபர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் லோக்பால் மசோதாவை எப்படி அன்னா ஹசாரே மத்திய அரசிடம் பரிந்துரை செய் தாரோ அதே போன் று பாகிஸ்தான் பாரா ளுமன்றிலும் ஊழ லுக்கு எதிரான வலு வான மசோதாவை பரிந்துரைக்குமாறு தான் கோரப் போகி றேன்.

நான்  இக்கோரிக்கை யை முன்வைத்து முன் னரே போராட்டங் களை ஆரம்பித்த போதும், கைவிட் டுவிட்டேன். இப்போது அன்னா ஹசாரே மற்றும் குழுவின ருடைய போராட்டங்களை பார்க்கும்போது எனக்கு நல்ல ஊக்குவிப்பாக இருக்கிறது என தெரி வித்துள்ளார்.

மேலும் புனித ரமழான் நோன்பு மாதத்தின் இறுதியில் செப்டெ ம்பர் 12ம் திகதி முதல் உண்ணாவிரத போராட் டத்தை தொடர போவதாகவும், இடது சாரி கட்சிகள் தனக்கு ஆதரவு தந்துள்ளதா கவும் தெரிவித்துள்ள அவர், சமூக வலை தளங்கள் மூலம் இதற்கு ஆதரவு திரட்டி வருவ தாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆகஸ்ட் 16ம் திகதி அன்னா ஹசாரே டெல்லி காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட போது இந்நடவ டிக்கை சரியானதே என பாராளுமன்றில் பிரதமர் மன் மோகன் சிங் கருத்து தெரிவித்ததன் மூலம் மூலம் Mr.Clean எனும் நற்பெயரை அவர் இழந்துவிட்டதாகவும், காங்கிரஸ் அரசு ஊழல் மிகுந்ததாக மாற்றம் பெற்றுவிட்டது எனவும் பாகிஸ்தான்  டெய்லி பத்திரிகை தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங் கியுள்ள உண்ணாவிரத காட்சிகள்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: