Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புத்திசாலி தவளையும் முட்டாள் தவளையும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவு க்கு மழை. அந்த ஏரி நீர் குளி ர்ச்சி அடைந்து விட்டது. அந் தக் குளிரைத் தாங்க முடி யாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலு ள்ள ஒரு கிணற்றுக்கு வந் தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற் றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட் களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந் தேன். உன்னை க் கண்டதும் எனக்கு மகிழ் ச்சி’ எனக் கூறிப் பொந் தில் வைத்திருந்த உணவு வகைக ளைப் புதிய தவளைக்கு த் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலி ருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக் கவில்லை. ‘இங்கே கிடைக் கும் உணவு நமக்கே போத வில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப் பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே செ ன்று வேடிக்கை பார்த்தன. அப் போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவ ளையிடம், ‘நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங் கியிருந்தாய்?’ எனக் கேட் டது.

‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித் தவளை.

‘ஏரியா? அப்படியென்றால் என் ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்ற பெ ரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங் களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.

இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி’ என் றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்ப வில்லை. ‘நண்பா நீ பொ ய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது’ என் றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற் றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்ப வில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார் த்து ‘நீ பொய்யன், புரட் டன், உன்னை நம்பி இங் கே வைத்திருந்தால் ஆப த்து’ என்று கூறி ஏரி த் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண் டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: