Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

30ம் தேதிக்குள் ஜன் லோக்பால் : ஹசாரே இறுதி கெடு

வலுவான ஜன் லோக்பால் மசோதா, இம்மாதம் 30ம் தேதி க்குள் அமல்படுத்தப்பட வேண்டும்’ என்று அன் னா ஹசாரே இறுதிக் கெடு விதித்துள்ளார். ஊழ லுக்கு எதிராகவும், ஜன் லோ க்பால் மசோ தாவை அமல்படுத்தக் கோரி யும், ராம் லீலா மைதானத்தில் உண் ணாவிரதத்தை துவக்கியுள்ள காந்தி யவாதி அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர், நேற்று மாலை நிருபர்களை சந்தித்தனர். அப் போது, அன்னா ஹசாரே கூறியதாவது: லோக்பால் மசோதா வை பார்லிமென்டிலும், நிலைக்குழுவிலும் தாக்கல் செய்யு ம்போது, மத்திய அரசு க்கு இரண்டிலும் போதிய மெஜாரிட்டி உள்ளது. அவர்கள் ஜன் லோக் பால் மசோதாவை தா க்கல் செய்வதை பார்க்க தயாராக இருக்கிறோம்.

லஞ்சம் வாங்காதீர்கள்; லஞ்சம் கொடுக்காதீர் கள். இது ஒன்றே நாட்டி லிருந்து ஊழலை ஒழிக்க முக்கிய காரணியாக இருக்கும். லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் நாங்கள், அரசுடன் திறந்த மனதுடன் பேசுவதற்கு தயாராக இருக் கிறோம். இது தொ டர்பாக, அரசுடன் எவ்வித சமரசமும் செய்து கொள்ள த யாராக இல்லை. லஞ்சம் பெறும் மற்றும் ஊழல் புரி யும் அதிகாரிகளுக்கு எதிராக, சட்ட ப்படி கடுமையான தண்ட னை விதிக்கப்பட வேண்டும். இந்த ஜன் லோக் பால் மசோ தாவை தாக்கல் செய்வதற்காக இம் மாதம் 30ம் தேதியை கெடுவாக விதித்துள்ளோம். இதற்குள் மசோதாவை தாக் கல் செய்யாவிட்டால், சி றை நிரப்பும் போராட் டத் தை தீவிர ப்படுத்துவோம். இந்த மசோதா நிறைவே றும் வரை போராடிக் கொ ண்டே இருப்பேன். என் இறு தி மூச்சு உள்ளவரை இந்த மசோதாவிற்காக போரா டிக் கொண்டு இருப்பேன். இதையே என் வாழ்வில் லட்சியமாகக் கொண்டுள்ளேன். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

ஹசாரேயின் நெருங்கிய ஆதரவாளரான சுவாமி அக்னி வேஷ் பேசுகையில், “பிர  தமர் மன்மோகன் சிங்கும், ராகு லும் மக்களின் குரலை கேட்காமல், மவுனம் சாதி க்கின்றனர். கடந்த மூன் றாண்டுகளாக பிரதமர் மவு னம் காத்து வருகிறார். அவர் மவுனத்தை துறந்து, வாய் திறந்து உண்மை யை பேச வேண்டும். அமைச்சரவையின் நடவடிக் கைக்கு அவர் தான் பொறுப்பு. மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலும், ராகுலும் தங்களது தொகுதி மக்களின் குரலை காது கொடுத்து கேட்க வேண்டும். கபில் சிபல் சார்ந்துள்ள சாந் தினி சவுக் தொகுதியில் உள்ள 80சதவீத மக் கள், ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே நிலை தான், ராகுலின் அமேதி தொகுதி யிலும் உள்ளது. எனவே, லோக்பால் மசோதாவில் திருத்தம் செய்து, ஜன் லோக்பால் ஷரத்துகளையும் சேர்க்க வேண்டும்’ என் றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

One Comment

Leave a Reply