Wednesday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்னா ஹசாரேயால் மத்திய அரசு திணறல்:ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு

ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண் ணா விரத போராட்டத்தால், எந்த முடிவும் எடுக்க முடி யாமல் மத்திய அரசு திணறி வருகிறது. ஊழல் எதிர்ப்பு க்கு, மக்கள் அமோக ஆத ரவு தெரிவித்து வருவதும், மத்திய அரசுக்கு நெருக்கடி யை ஏற் படுத்தியுள்ளது.

பார்லிமென்டில், பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்திய வாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா விரத போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொட ர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள், ஹசா ரேவுக்கு, தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

டில்லியில் மட்டுமி ன்றி, நாட்டின் அ னைத்து மாநிலங்க ளிலும், ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி, உச்சக்கட்ட த்தை எட்டியுள்ளது. “படித்தவர்களும், பணக்காரர்களும் மட்டுமே, ஹசாரே யின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்’ என்ற அரசின் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில், அனைத்து தரப்பு மக்களும், போராட் டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, மத்திய அரசுக்கு, கடும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று, உண்ணாவிரத பந்தலில் பேசிய அன்னா ஹசாரே, “”அரசின் கருவூலத் தில் உள்ள நிதி, மக்களுக்கு சொந்த மானது. இந்த கருவூலத்துக்கு, திருடர் களால் ஆபத்து ஏற்பட வில்லை. இந்த நிதியை பாது காக்கும் பொறுப்பில் யார் அமர்த்தப்பட் டுள்ளனரோ, அவர் களால் தான், ஆபத்து ஏற்படுகிறது. லோக்பால் மசோதா விவ காரத்தை தொடர்ந்து, மற்ற பல விஷய ங்களு க்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்.

“என் போராட்டத்தின் பின்னணியில், பா.ஜ., மற்றும் ஆர். எஸ். எஸ்., இருப்பதாக சொல்பவர்களை, மனநல மருத்துவ மனைக்கு அனுப்ப வேண் டும். மேலும், அமெரிக்கா வுடனும் என் போராட் டத்தை தொ டர்புபடுத்தி பேசினர். இனி, பாகிஸ் தானுடனும் தொடர்புப டுத்தி பேசுவர்” என, மத்திய அரசை கடுமை யாக விமர்சித்தார்.

பேச்சுக்கு தயார்: ஹசா ரே குழுவைச் சேர்ந்த அரவி ந்த் கெஜ்ரி வால், மனிஷ் சிசோ டியா ஆகியோர் கூறுகையில், “லோக்பால் மசோதா விவகா ரம் குறித்து, அரசுடன் பேச்சு நடத்த தயார். ஆனால், அரசு தரப் பில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. யாருடன் பேச்சு நடத்துவது, எப்போது பேசுவது என, எங்களுக்கு தெரிய வில்லை,” என்றனர்.

அதேநேரத்தில், லோக்பால் மசோதா விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங்கும், எந்த உறுதியான முடிவையும் அறிவிக்கா மல், விட்டுக் கொ டுத்துச் செல்லவும், பேச்சு வார் த்தை நடத்தவும் தயார் என, மழுப்பலாகவே பதில் அளித்தார்.

ஆனால், காங்கிரஸ் த லைவர்களோ, ஹசாரே குழு வினரை கடுமையாக விமர் சித்து வருகின்றனர்.திணறல்: பிரதமரின் மழுப் பலான பதிலும், காங்கிரஸ் கட்சியினரின் கோப மும், லோக்பால் விவகாரத்தில், மத்திய அரசு முடிவு எடுக்க முடி யாமல் திணறி வருவதை, வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது. ஹசாரேயின் உண்ணாவிரத போரா ட்டம், இன்னும், 10 நாட் கள் வரை நீடிக்கும் என் பதால், இனி வரும் ஒவ் வொரு நாளும், மத்திய அரசுக்கு, பெரும் போராட்டமும், நெருக்கடி யாகவுமே இருக்கும் என்கின்றன, டில்லி அரசியல் வட்டாரங்கள்.

மத்திய அரசு எச்சரிக்கை:””அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், பார்லிமென்ட் நிலைக்குழுவை விமர்சனம் செய்வது உரிமை மீறல் விவகாரம்,” என, மத்திய அரசு எச்சரிக்கை விடு த்துள்ளது. பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயண சாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:லோக்பால் மசோ தா தொடர்பாக, பார்லிமென்ட் நிலைக்குழு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு ள்ளதை, “நேரத்தை வீணடிக்கும் செயல்’ என, ஹசாரே குழு வினர் விமர்சித்துள்ளனர்; இது சரியல்ல. பார்லிமென்ட் நிலைக்குழு என்பது மினி பார்லிமென்ட் போன்றது.

இந்த அமைப்பை விமர்சனம் செய்வது, பார்லிமென்டை விமர் சனம் செய்வது போன்றது. எனவே, இது உரிமை மீறல் விவ காரமாகும். சிலர், பார்லிமென்ட் உறுப்பினர்களை, “கொள் ளைக்காரர்கள்’ என கூறுகின்றனர். இது, தனிநபர் தாக்குதல் அல்ல; பார்லி மென்டை அவமதிக்கும் செயல். ஊழலுக்கு எதிராக போரா டுவதாக கூறிக் கொள்பவர்கள், ஜனநாயக அமைப்புகளை அநாகரி கமாக விமர்சிப்பது ஏற்கக் கூடிய தல்ல. அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின் றனர் என்பதை, அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

%d bloggers like this: