Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (21/08)

அன்புள்ள சகோதரிக்கு —
எங்களுக்கு, இரண்டு மகன்கள். பெரியவன், நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். சின்ன வனும் நன்றாக படி த்து, மாஸ்டர் டிகிரி முடித்து இருக்கிறான். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் போது, கூட படிக்கும் பிள்ளைகள் இவனை கலாட்டா செய்ததி ல், மனநலம் பாதிக்கப்பட்டு, தற்சமயம் சிகிச்சை பெற்று, வீட்டில் இருக்கிறான்.

வெளியில் செல்ல பயப்படுகிறான். இதனால், வீட்டில் எப் போதும் உட்கார்ந்து கொண்டும், தூங்கிக் கொண்டும் இருப் பான் ; ஆனால், எந்தப் பிரச்னையும் செய்ய மாட்டான்.

இந்த மாதிரி அவன் உட்கார்ந்து இருப்பது, பெரியவனுக்கு பிடி க்கவில்லை. அடிக்கடி அவன் காதில் விழும்படி, “தண்டச் சோ று, சும்மா எப்படித்தான் உட்கார்ந்து இருக்க முடிகிறதோ?’ என் று, ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

சின்னவன் அமைதியாக இருந்தாலும், இந்த மா திரி யாராவது மட்டமா க பேசினால், அவனுக்கு கோபம் வந்து, அவர்களி டம் கத்தி பேசி விடு கிறான். அப்போதுதான், அவனுக்கு மனசு சமா தானமாகிறது. இந்நி லையில், நாங்கள் என் ன செய்வது என்று தெரி யவில்லை.

பெரியவன் சம்பாத்தி யத்தில் நாங்கள் யாரும் சாப்பிடுவது இல்லை; அவன் சம்பளத்தை அப் படியே வங்கியில் போட் டு விடுவான். வீட்டு செலவு எல்லாம், என் கணவர்தான் பார் த்துக் கொள்கிறார். தம்பி எதிரிலேயே, “எங்காவது போய் சாவு; இல்லை என்றால் பிச்சை எடுத்து சாப்பிடு…’ என்று சொல்கி றான். இவர்களை எப்படி சமாளிப்பது என்று, நீங்கள் தான் எங்களுக்கு நல்ல முடிவு சொல்ல வேண்டும். சின்னவன், யாரி டமும், எந்த பிரச்னையும் செய்ய மாட்டான்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரி.

அன்புள்ள சகோதரிக்கு —
உங்களின் கடிதத்தில், உங்களின், உங்கள் கணவரின் வயது, கல்வித் தகுதி, பணி பற்றி தகவல்கள் இல்லை. உங்களுக்கு எந்த வருடம் திருமணமானது? உங் களிரு மகன்களின் வயது, கல்வித் தகுதி என்ன? உங்களின் மூத்த மகன் என்ன பணி செய்கிறார்? உங் கள் இளைய மகன் என்ன படிக்கும் போது, மன நிலை பாதிக்கப்பட் டார்? கூட படிக்கும் பிள்ளைகள் கலாட்டா செய்ததில், மன நலம் பாதிக்கப்பட்டார் என எழுதியிருக் கிறீர்கள். கலாட்டா செய்தது மாணவரா, மாணவியரா? முதன் முதலில் உங்கள் இளைய மக னை மருத்துவரிடம் எப்போது காட்டினீர்கள்? என்ன மன வி யாதி என்று சொன்னார்? மருந்துகள் தற்காலிகமாக கொடுத்தா ரா, ஆயுளுக்கும் சாப்பிடச்சொல்லி கொடுத்தாரா? மூத்த மக னுக்கு திருமணமாகி விட்டதா, இல்லையா? திருமணமாக வில்லை என்றால், பெண் பார்த்து, கட்டி வைத்தீர்கள் என்றால், அவர் இளையவனை தொந்தரவு செய்யாமல், தனிக் குடித்தனம் போய் விடுவார் இல்லையா? மேற்சொன்ன விவரங்களும் உங்கள் கடிதத்தில் இல்லை.

உங்களது கணவர் உயர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர் என யூகிக்கிறேன். நீங்கள் காலமெ ல்லாம் கணவனை சார்ந்து வாழ்ந்திருக்கிறீர்கள். வீட்டில் ஆண் கள் ராஜ்ஜியம். உறவினர் யாரும் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதில்லை. உங்களுக்கு ஒரு மகள் இருந்திருந்தால், மகன் களால் வரும் பிரச்னைகளை இச்சையாகவோ, அனிச்சையா கவோ சரிப்படுத் தியிருப்பார்.

இரு மகன்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிள்ளை இளையவன் தான். நீங்கள் செல்லம் கொடுத்ததால், உங்கள் இளைய மகன் வீணாகியிருக்கலாம். தவிர, அவனுக்கு கல்லூ ரியில் நடந்த பிரச்னையை நீங்களும், உங்களது கணவரும் விவேகமாக அணுகவில்லை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய விஷயம், விஷ விருட்சமாகி, தீரா பிரச்னை தரு கிறது.

உங்களது இளைய மகனை நீங்களிருவரும் நிரந்தர ஆயுட்கால மனநோயாளி ஆக்கி விடாதீர்கள். வெளியே போகப் பயப்படுகி றான் என்றால், நீங்களோ, உங்களது கணவரோ துணைக்கு செல்லுங்கள். விட்ட படிப்பை தொடரச் செய்யுங்கள் அல்லது பணிக்கு அனுப்புங்கள் அல்லது வியாபாரம் செய்ய சிறுகடை வைத்துக் கொடுங்கள்.

மாதத்திற்கு ஒரு தடவை குடும்ப அங்கத்தினர்கள் கூடுங்கள். பிஸ்கெட், டீ சாப்பிட்டுக் கொண்டே பேசி, ஒருவருக்கொருவர் இருக்கும் மனமாச்சர்யங்களை களையுங்கள்.

இளைய மகனுக்கு என்ன வகை எதிர்காலம் ஏற்படுத்தி தரலாம் என்பதை, உங்கள் மனநல மருத்துவரிடம் கலந்தாலோசியு ங்கள். உடன் உங்கள் மூத்த மகனும் இருக்கட்டும்.

இளைய மகனின் பிரச்னையிலேயே நீங்கள் மூழ்கி கிடந்து, மூத்தவனின் திருமணத்தை மறக்கிறீர்கள். மூத்தவன், இளைய வனுடன் சண்டை போடுவதன் மூலம், மறைமுகமாக தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்கிறான்; புரிந்து கொள்ளுங் கள்.

சம்பாதிக்கும் மகனையும், மனநலம் பாதிக்கப்பட்ட மகனையும் பொருளாதார ரீதியாய் நீங்கள் இருவர் தான் கவனித்துக் கொள் கிறீர்கள். மூத்தவன், தன் சம்பளத்தை அப்படியே வங்கியில் போட்டுக் கொள்கிறான். நீங்களிருவரும் உயிரோடு இருக்கும் போதே, இளைய மகனுக்கு புனர்வாழ்வு அமைத்துக் கொடுப்பது தானே சமயோசிதம். என்னதான் பணம் இருந்தாலும், ஆரோக் கியமான மனநிலை மீண்டால்தானே, சின்னவன் தன்னை தற்காத்துக் கொள்வான்.

மொத்தத்தில், மூத்த மகனை விரோதமாக பார்க்காதீர்கள். விரோதமாக பார்த்தால் உங்களுக்கும், அவனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாகும்.

நூறு சதவீதம் மன ஆரோக்கியம் உள்ள மனிதர்கள், உலகத்தில் இல்லவே இல்லை; ஏதாவது ஒரு சதவீதத்தில் பாதிக்கப்பட்டே இருக்கின்றனர். பாதிப்பை வெளிக்காட்டாமல் படிக்கின்றனர், பணிபுரிகின்றனர், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர், அமைச் சராய் இருக்கின்றனர், சாமியாராக இருக்கின்றனர், ஏன்… மருத்துவர்களாய் கூட இருக்கின்றனர். மனநிலை பாதிக்கப்பட் டவன் என லேபிள் குத்தி, சின்னவனை காய்கறிக் குவியல் ஆக்கி விடாதீர்கள்.

சிறு, சிறு வெளி வேலைகளை அவனை செய்து வரச் சொல் லுங்கள். அவனுடைய அர்த்தமற்ற பயங்களை பேசி, பேசி களையுங்கள். சித்த வைத்தியம், ஹோமியோபதி மருத்துவம் சின்னவனை தெளிச்சி பெற வைக்கும்.

அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே உறவுப்பாலம் இடுங்கள்.
மாதம் ஒருமுறை நால்வரும், எங்காவது மினிச் சுற்றுலா சென்று வாருங்கள்.

வீட்டில் சாப்பிட்டு, தூங்கி, தூங்கி வழிந்தால், உங்கள் இளைய மகன் குண்டாகி விடுவான். இப்போதே அவன், 95 கிலோ இருப்பான் என யூகிக்கிறேன். அவனது எடையை குறையுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது, இளையவனை கர் நாடாக இசை கேட்கச் சொல்லுங்கள். அவனுக்கு ஒரு நாளை க்கு, ஆறு தடவை உப்போ, சர்க்கரையோ இடாத எலுமிச்சை சாறு கொடுங்கள்.

வீட்டில் மீன் வளருங்கள்.
அவனுக்குள் இறங்கி, அவனை மீட்க, பெற்ற தாயால்தான் முடியும். உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழித்து, பிறர் மீது குற் றம் சாட்டாதீர்கள்.

வாரா வாரம் கோவிலுக்கு போய், இளையவனுக்கு பரிகாரப் பூஜைகள் செய்து வாருங்கள். ஒரு தடவை குணசீலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு போய், 11 நாள் தங்கி வாருங்கள்.

 
—என்றென்றும்
 தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
 (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply