Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

ஏதோ ஒரு செருப்பு வாங்கினோ மா… அதை, பல வருடங்கள் போட் டு கிழித்து, பின் புதுச் செருப்பு வாங்கச் சென்ற கடையில், கிழிந்த செருப் பைக் காட்டி, இதே செரு ப்பு நீங்கள் வாங்கிய அதே விலை யிலேயே இப்போ தும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி, நடந்து பார் த்து, திருப்தி அடைந்த கால ம் எல்லாம் மலையேறிப் போய்விட் டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை, வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரிக காலம் இது.

ஆடையின் நிறத்திற்கேற்ற செரு ப்பு, அதிக உயரம் கொண்ட குதி கால் செருப்பு, கால்களை முழுவ தும் மூடிக் கொள்ளும் கட் ஷூ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்க ரிக்கப் பட்ட கால ணிகள் என பல, பல வகைகளில் காலணிகள் சந் தைகளில் குவிகின்றன. ஒவ்வொ ன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின் றன. குறைந்த விலையிலும், அழ கான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும். பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன. இதிலும், மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத் யேகமாகத் தயாரிக்க ப்படுகின்றன. 2,000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை.

அதாவது, திருமண ஆ டையின் நிறத்தில், அ தில் உள்ள வடிவமைப் புக்கு ஏற்ற வகையிலு ம், மணப்பெண் அணி யும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணி கள் தயாரிக்கப் படுகின் றன. விருந்து நிகழ்ச்சி, திருமண நிக ழ்ச்சிக்கு செல்வதென்றால், ஆடம்பரமான காலணிகளை அணி ந்து, அனைவரையும் அசத்த லாம். ஆனால், தினமும் அலு வல கத்திற்கு அணிந்து செல்வ தற்கு இவை எல்லாம் சரிப ட்டு வராது. மிகவும் நளின மாக, ஆனால், பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வை க்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணி வதற்கு சுகமானதாகவும், அலுவலக பயன்பாட்டிற்கு பல வகை களில் காலணிகள் இடம்பிடித்துள்ளன. சந்தையில் பல வகை களில் காலணிகள் வந் தாலும், நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது.

உங்களுக்குப் பிடித்த வற்றை தேர்வு செய்து அணியுங்கள். காலுக் கும், காசுக்கும் எந்த பா திப்பும் இல்லாத வகை யில் உங்களது தேர்வு இருக்கட்டும்.

கலர்புல் செருப்பு: கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரு ம்புகின்றனர். ஆனால், செருப்பு என்பது, நம் உள்ளங்களோடு நெருங்கிய தொடர்புடையதால், அதை வயசுக்கு தக்கபடியும், தேவைக்கு தக்கபடியும் வாங்கு வது முக்கியமானது. ஏனென் றால், உள்ளங்காலுடன் நம் உட லில் உள்ள அனைத்து நரம்புக ளுக்கும் தொடர்புடையது. உடலு க்கு தகுந்தபடி செருப்புகளை வாங்குவது நல்லது. பொருத்தமான செருப்புகளை அணிபவர்க ளுக்கு தன்ன ம்பிக்கை அதிகமாக இருக்கும்; பொருத்தமில் லாத செருப்புகளை அணிந் தால், தன்னம்பிக்கை குறையு ம். செருப்புகளை தேர்ந்தெடு த்து வாங்கும் போது, மூன்று விஷயங்களை கவனித்து வாங்குவது நல்லது. அவை, சவுகரியம், அழகு, நிறம் ஆகி யவை. கண் ணைப் பறிக்கும் கலர்களை வி ட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடி யதாக இருக்கும்.

முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப்பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால், விரல்கள் அழுத் தத்திற்கு உள்ளாகின்றன. மேலும், வர்மப் புள்ளிகளும் அழுத்தப்ப டுவதால், உடலில் பலவித பிரச் னைகளை ஏற்படுத்தும். இதனால், தலை வலி, கண்வலி, சோர்வு, கால் வலி ஆகிய பிரச் னைகள் ஏற்படும். பாதம் நீளமாக உள்ள வர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால், பாதம் மே லும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புக ளை வாங்கும் போது, அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல்லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணியவும். பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப்புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும் போது, முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து, போதுமான இடைவெளி உள்ளதா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles


Leave a Reply