Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனிய குரலுக்கு . . .

 ( டாக்டர் எம்.குமரேசன் )

பிறந்த ஒருவருடத்தில் இருந்து இன்று வரை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். “பேச்சு எப் படி வருகிறது?” என்ற உடல் இயக் க விஞ்ஞானம் எத்தனைப் பேரு க்கு தெரியும். இதோ அதைத் தெரி ந்து கொள்வோம்.

நுரையீரலில் இருந்து காற்று வரு கிறது. அப்போது குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் அதிர்வு ஏற்படு கிறது. அதை நாம் வார்த்தைகளாக்கி வெளிப்படுத்து கிறோம். இதுதான் பேச்சு. நுரை யீரலில் இருந்து வெளிப் படும் காற்று, தலை-நெஞ்சு-கழுத்தில் நிலைகொண்டு பல்-உதடு-நாக்கு-மூக்கு- அண்ணம் போன் றவைகளில் முறையான அசைவை ஏற்படுத்தும்போது, அது வார்த்தைகளாக வெளி வருகிறது. நுரையீரலில் இருந்து காற்று எழும்பி வரும்போது குர ல் நாண்கள் இணையாமல் பிரி ந்தே நின்றால், காற்றுத் தான் வரும். குரல் வராது.

குரல் நாண் இணையும் செயல் பாடு இருவகைகளில் நடக்கிற து. ஒன் று: நரம்பு, தசை இயக்க த்தால் நடைபெறுவது. இரண்டு: அடி வயி ற்றில் இருந்து வரும் காற்றால் குரல் நாண் இயங்கு வது.

நாம் பேச நினைக்கும்போது அந்த தகவல் மூளைக்குப் போகி றது. உடனே தொண்டை, கபால நரம்புகள் மூலம் தசையை இயக்கி, குரல் நாணை இணையச் செய்யும். இது ஒரு வகை. மே லே கூறியபடி மூளை, நரம் புகள் எல்லாம் இயங் காமல் தன்னிச் சையாக பேச விரும்பி னால் அதற்கு அடிவயி ற்றில் காற்றை உருவாக்கும் பயிற்சி தேவை. அதைத்தான் நாம் மூச்சு பயிற்சி என்கிறோம்.

மூச்சுப் பயிற்சியைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் குரல் பற்றி இன்னும் கூடுதலாக சில தகவல்களையும் தெரிந்து கொள் வோம்.

12- வயது வரை ஆண், பெ ண் இருபாலருக்கும் பெண் குரல் போல்தான் இருக் கும். அதை நாம் சரியாக அடையாளங் கண்டுகொள் வதில்லை. மழ லை என்பது பெண் குரல் தான். 13-14 வய தில் ஆண் களின் குரல் நாண் நீளமடையும். அப்போது குரல் வளை விரி வடைந்து, குரல்வளையில் உள்ள ஒரு குருத் தெலும்பு தள்ளிக் கொண்டு வெளியே வரும். ஆண்களின் தொண்டையில் வெளி ப்படையாக நீண்டு கொ ண்டிருக்கும் இதை “ஆ டம்ஸ் ஆப்பிள்” என் பார்கள்.

பெண்களுக்கு குரல் நா ண் நீளவும் செய்யாது. விரிவடையவும் செய் யாது. 16- வயதிற்குப் பிறகும் ஆண்களுக்கு பெண் குரல் இருந்தால் அது “பியூபர் போனியா” என்ற கோ ளாறாக கருதப்படுகிறது. இதற்கு குரல் நாணை இழுக்கும் சிகிச்சை தேவை. ஒரு நாளில் இந்த சிகிச்சையை செய்து விடலாம் என்றாலும், தொ டர்ந்து மூன்று மாத ங்கள் “பீச் தெரபி” அல்லது “வாய் ஸ் தெரபி” பயிற்சி பெற வே ண்டும்.

இறைவன் கொடுத்த பெரு ஞ்செல்வம் குரல். கைரே கையில் தனித்தன்மை இரு ப்பது போல் ஒவ்வொருவ ரின் குரலிலும் அடையாளம் காணும் அளவிற்கு தனித் தன்மை இருக்கும். இந்த குரலை வைத்துத்தான் ஆசிரிய ர்கள், பேச்சாளர்கள், வக்கீல்கள், பாடகர்கள், விற்பனை பிரதிநிதிகள் போன்ற பலரும் முறையாக பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்து கிறார்கள்.

குரலில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?

ஒவ்வாமை, அழற்சி, உணவுக் குழாயில் ஆசிட் உரு வாகுதல், குரலை முறையற்று பயன்படுத்துதல், அதிகமாக பயன்படுத்துதல், குரல்வளையில் கட்டி உருவாகுதல், குரல் வளையில் புற்று நோய் ஏற்படுதல், குரல் வளை நரம்பு செல்களில் மாற்றம் ஏற்படு தல், மனோரீதியான பாதிப்பு, பிறவி நோய் குறைபாடுகள், தைராய்டு, குரல்வளை வா தம், நரம்பு தளர்ச்சி போன்றவைகளால் குரல் மாற்றம் ஏற்படலாம்.

நுரையீரல் சளியாலும் குரல் கெடும். காசநோய், தொழு நோய், பால்வினை நோய்க ளாலும் குரல் பாதிப்பு ஏற் படக் கூடும். தற்போது பான் பராக் மெல்லுகிறவர்களில் பெரும் பாலானவர்கள் குரல் வளை பாதிப்பிற்கு உள்ளாகு கிறார்கள்.

குரல்வளையில்- குரலில் பாதிப்பு ஏற்படும்போது அந்த பாதிப்பு எதனால் ஏற்படுகி றது என்பதை முதலில் கண் டறிய வேண்டும். நோயாளி யின் முழு உடல் பிரச்சினைகளையும் கேட்டறிதல், ரத்த பரி சோதனை, தொண்டைச் சளி பரிசோதனை, குரல் பரிசோத னை, எக்ஸ்-ரே, எண்டோஸ்கோப் போன்றவைகளில் தே வை ப்படுபவைகளைச் செய்து பாதிப்பைக் கண்டறிய வே ண்டும். மருந்து அல்லது ஆப ரேஷன் அதற்கு தீர்வாக இரு க்கும்.

குரலைத் தொழிலாகக் கொ ண்டவர்கள் விரும்பினால் குர லை பாதுகாக்கவும் முடியும். குரலை தேவைப்படுத்துவது போல் இனிமையாக வளப்படுத் திக்கொள்ளவும் முடியும். ஆசிரி யர்களில் 20 சதவீதம் பேர்க ளுக்கு குரலில் பிரச்சினை இரு க்கிறது. இய ல்புக்கு மீறி சத்தம் போட்டு வகுப்பு நடத்து வது, ஓய்வில் லாமல் வீட்டிலும் டியூஷன் நடத்துவது, வகுப் புகளில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை பிரயோகம் செய்தல் போன் றவை களால் அவர்கள் குரலில் நெருக்கடி ஏற்படுகிறது. குரல் நெரு க்கடி ஏற்படும் போது நினைத்த படி வேகமாக பேச முடி யாது. திடீ ரென்று பேச முடி யாமல் போனது போல் தோன்றும். பேசும்போது அல்லது பேசி முடித்த பின்பு வலி, சோர்வு ஏற்படும். தொண்டையை அடிக்கடி கனைக்க வேண் டியதுபோலவும் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைக ளை கட்டுப்படுத்தவும், தீர்க்கவும் மூச்சுப் பயிற்சி அவசிய மாகிறது.

மூச்சு நான்கு வகைப்படுகிறது.

* கழுத்து மூச்சு.

* நுரையீரல் மூச்சு.

* உதரவிதான மூச்சு.

* எல்லா உறுப்புகளுக்குமான முழு மூச்சு.

இதில் முழு மூச்சே சிறப்பானது. இந்த பயிற்சியை முறை யாகப் பயின்று வீட்டிலும் மேற்கொண்டால் குரலில் மேம் பாடு கிடைக்கும். கூட வே ஒட்டுமொத்த உடலு க்கும், மனதி ற்கும் ஆரோக்கியம் கிடைக் கும். முதுகுவலி, தலை வலி நீங்கும். மூளை செயல்திறன் அதிக ரித்து, மன அழுத்தம் நீங்கும். நினைவாற்றல் அதிகரி க்கும். கிட்னி நன்றாக செய ல்படும். ரத்த அழுத்தம், ஆஸ்துமா தொந்தரவு குறையும். நன்றாக தூக்கம் வரும். இப்படி ஏராளமான பலன்கள் உள் ளன. ஆசிரி யர்கள், வக்கீல்கள், பாடகர்கள், விற்பனை பிரதி நிதிகள் இந்த பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டு  கிறார்கள்.

குரலைத் தொழிலாகக் கொண்டவர் கள் கவனிக்க…

* பேசுவதற்கு முன்பு காபி, மது போன் றவைகளை அருந்தக் கூடாது. உடல் ஒத்துக்கொள்கிறவர்கள் எலுமிச்சை சாறு அருந்தலாம். பேசுபவர் களுக்கு உமிழ்நீர் நன்றாக சுரக்க வேண்டும். அதற்காக அவர்கள் தினமும் 4 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். திடீரென்று தொண்டை வற ண்டு போனால் நுனி நாக் கினை மடித்து லே சாக கடிக்க வேண் டும். அவ்வாறு செய் தால் உடனடியாக உமிழ்நீர் ஊறும்.

* புகை பிடிக்கக் கூடாது. மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். சாக்லேட் சாப்பிடக்கூடாது. பால், ஐஸ்கிரீம் போன்றவைகளையும் தவிர் க்க வேண்டும்.

* ஆசிரியர்கள் பாடம் நடத் தும் வகுப்பறைகள் ஈரப்பத மாக இருக்கவேண்டும்.

* பாடம் சொல்லிக் கொடுக் கும்போது, தொண்டையை சரி செய்வதாக நினைத்துக் கொ ண்டு அடிக்கடி கனைக்க க்கூ டாது.

* போனிலும், வீட்டிலும் கத்திப் பேசக்கூடாது. செல்போனில் பேசும் நேரத்தை பெருமளவு குறைக்க வேண்டும்.

* சத்தமுள்ள இடத்தில் நின்று கொ ண்டு பேசக்கூடாது.

* ஒரே நேரத்தில் இரண்டு வேலை களைப் பார்க்க தொண்டை சிரமப் படும். அதனால் சாப்பிடும்போது பேசக்கூடாது. பேசும் போது சாப்பிடவும் கூடாது.

* பேசுவதில் சிரமமோ, சோர்வோ ஏற்பட்டால் உடலின் உள் உறுப்புகளுக்கும், வெளி உறுப்புகளுக்கும் பயிற்சி தேவைப் படும். சிகிச்சையும் தேவைப்படும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: