Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பர்சனல் கம்ப்யூட்டர் மறைந்துவிடுமா ?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர் , வரும் கா லத்தில் இல் லாமல் போ ய்விடும் எ ன்று பலரு ம் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவ மைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வை த்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித் துள்ளார்.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட் டர்கள், இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவை யாக இருந்தாலும், புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு, புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார். கம்ப்யூட்டரில் தற்போது மேற்கொள்ளப் படும் பணிகள், இனி பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ள ப்படும். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் என்ற ஒரு தனி சாதனம் இருக்காது என்கிறார் இவர்.

இன்றைய பெர்சனல் கம்ப்யூட் டர் மறைவதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம் சரியா கவே உள்ளது. இப்போது கணிப் பொறியில் மேற்கொள்ளப்படும் வேலைகளெல்லாம், இணைய த்தில் மேற்கொள்ளப்படுகின்றன. வேகமாகப் பரவி வரும் கிள வ்ட் கம்ப்யூட்டிங் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. பைல் கள் உருவாக்கப்படுவதும், சே மிக்கப்படுவதும், பகிர்ந்தளிக் கப்படுவதும், தகவல்கள் சேமி க்கப்பட்டு, தேடப்பட்டு பயன் படுத்தப்படுவதும் இப்போது இணையத்திலேதான் நடக் கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் இதனை மேற்கொள்ள வழி தரும் ஒரு சாதனமாகத்தான் உள்ளது. நம் பெர்சனல் கம்ப் யூட்டரில் கணிக்கும் பணியி னைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோம். எனவே நாம் இதுவரை மேற்கொண்ட வேலைகள், பயன்பாடுகளைக் கொண்ட பெர்சனல் கம்ப்யூட்டர் இனி காணாமல் போய் விடும் என்கிறார் மார்க் டீன். இந்தக் கருத்து சரி யா னதாகவே தோன்று கிறது.

ஆனால், மைக்ரோசா ப்ட் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இது குறி த்து உயர்நிலை நிர்வாக வல்லுநர் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு 40 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற் பனை செய்யப்பட இருக் கின்றன. எனவே பெர்சனல் கம்ப்யூ ட்டருக்குப் பிந்தைய காலம் என்று குறிப்பிடுவது தவறு. பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணை ந்த காலம் என்று தான் புதிய சாதனங்களைச் சொல்ல வேண் டும். இனி வரும் காலங்களில், பெர்சனல் கம்ப்யூட்டர் (அல்லது மேக் கம்ப்யூட்டர்) இல்லாத ஒரு வீடு இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார். இதுவும் சரியென்றே படுகிறது. இருப்பினும் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் எது வேண்டு மானாலும் நடைபெறலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply