Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீன் வளர்ப்பு

நன்னீர் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் அடிப்படையில் மேற்கொண்டால் நல்ல வருமானம் ஈட்டிடலாம். மீன் வளர்ப்பு டன் நெற்பயிர், கால்நடைகள் மற்றும் கோழி, வாத்து ஆகிய பறவையினங்க ளையும் சேர்த்து வளர்த்திட்டால் கூடுதல் வருமானம் பெற்றிடலாம் என்பதை ஆரா ய்ச்சி மூலம் கண்டறிந்து மீன், கால்நடை, கோழி, வாத்து போன் றவைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம் அதிகலாபம் பெறலாம்.

நெற்பயிரோடு மீன் வளர்ப்பு: நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற் பயிரோடு மீன் வளர்த்தல் மு றை, நெல் அறுவடைக்குப் பின் மழை காலங்களில் பெரு மளவு நீர் வயல்களில் நிரப்பு வதால் அவற்றில் மீன் வளர்த் தல் மற்றொரு முறை. பொது வாக வயல்களில் நெல், உளு ந்து, கேழ்வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோ ம். ஆனால் வெவ்வேறு இடங்களின் சூழ்நிலைக்கேற்ப ஒரு முறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரையும் முழு மையாகப் பயன் படுத்துதல் ஒரு புதுமுறை சுழற்சி எனலாம். இம்முறை பயிர்- மீன் சுழற்சியால் அதிக பயனடைவ தோடு பயிர்களை தாக்கும் பூச்சி புழுக்களையும் களைகளையும் கட்டு ப்படுத்தலாம்.

நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை தொடர்ந்து கிள றிவிடுவதோடு, மீனின் கழிவில் நிறைந்துள்ள தழைச்சத்து பயி ர்களுக்கு தொடர்ந்து கிடை க்கின்றது. நெல் மணி யோடு விலை குறைந்த புர தம் நிறைந்த மீனும் கிடை ப்பதால் புரதப் பற்றாக் கு றை நீங்குகிறது.

நெல்லையும் மீனையும் சே ர்த்து வளர்க்க, விளையும் வயல் களில் குறைந்தது நான்கைந்து மாதங்களா வது நீர் தேங்கி இருக்க வேண்டும். இவ்வகை வயல்களின் வரப் புகள் உறுதியாகவும் உயரமாகவும் இருப்பது அவசியம். வய லின் பள்ளமான பகுதிகளில் ஆழ மான குளங்களும் அவற்றிலி ருந்து பிரிந்து செல்லும் பல வாய்க் கால்க ளும் அமைத்தால் வயலின் நீர் குறைந்து தரைமட்டத்தை அடை யும் கால ங்களில் மீன்கள் மடிந்து போகாமல் வாய்க்கால்கள் வழி யாக குளத்தை வந்தடைந்து பிழை க்கக்கூடும். வாய்க்கால்கள் 50 செ. மீ. அகலமும், 30 செ.மீ. ஆழமும் கொண்டதாய் இருக்க வேண்டும். வயலுக்கு நீர் பாய்ச்சும் வழியின் மூலமாகவும், வெளியேறும் வழி மூலமாகவும் மீன்கள் தப்பிச் செல்வதை தடுக்க வலைகளைப் பொரு த்த வேண்டும்.

மேற்கூறிய வசதிகளைக் கொண்ட வயல்களில் உறுதியான வேர்களுடன் குறைந்த வெப்பத்தையும், தேங்கி நிற்கும் நீரை யும் தாங்கக்கூடிய நீண்ட காலப் பயிர்களை பயிரிடலாம். நெற் பயிரி ன் நடவுக்குப் பின் விரலளவு மீன் அல்லது அதற்கு மேல் வளர்ந்த மீன்களை நெல்வயல்களில் எக்டரு க்கு 2000 வரை இருப்பு செய்யலாம். இத்தகைய பயிர் வகைகளை பயி ரிட்டால் நான்கைந்து மாதங்களில் எக்டர் ஒன்றுக்கு 500 கி.கி. மீன்கள் கிடைக்கிறது. இம்முறையில் நெற் பயிர்களுடன் சாதாக் கெண்டை, திலேப்பியா, விரால் போன்ற மீன் இனங்களையும் நன்னீர் இறால்க ளையும் வளர்த்தெடுக்கலாம்.

(தகவல்: -பா.கணேசன், உதவி பேராசிரியர், வெ.பழனிச்சாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288.)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: