Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்று விஞ் ஞானிகள் தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் அமெ ரிக்காவின் “நாசா” விஞ்ஞானி கள் பல ஆண்டுகளாக ஆராய் ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ் வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளி ல்லா விண்கலம், புகைப் படங்களை எடுத்து பூமி க்கு அனுப்புகிறது.
சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய போட்டோவை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்தனர். நீரோட்டத்துக்கான தடம் செவ்வாய் கிரகத்தின் மேற் பகுதியில் காணப்படுகி ன்றன. எனினும் புகை ப்படம் தெளி வாக இல் லாததால் அதை உறுதி ப்படுத்த முடிய வில்லை என்றும் விஞ்ஞா னிகள் கூறினர். இப் போது அங்கு மனிதர்களும் வாழ முடியும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டு ள்ளனர். இது மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியாது என்ற முந்தைய கருத்தை பொய்யாக்கி இருக் கிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பிராணவாயுவின் (ஆக்சிஜன்) கலவையை கொ ண்டதாக உள்ளது. இங்குள்ள ரசாயன ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை யில் இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆக்சிஜன் உள் ளதால் செவ்வாய் கிரகத்தில் மனி தர்கள் வாழ முடியும். ஆக்சிஜன் காணப்படுவதால் அங்கு தண்ணீரும் இருக்க அதி க வாய்ப்பு உள்ளது. மனி தர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடி ய எந்த பொருளும் காணப்படவில் லை. இந்த ஆராய்ச்சி விஞ்ஞானிக ளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்ப டுத்தி உள்ளது. செவ்வாய் கிரகத் தில் காணப்படும் தண்ணீர் பருவ நிலையால் உருவாகிறதா? அல்ல து நிரந்தரமாக உள்ளதா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. நிலையாக தண்ணீர் இருக்கு மானால், செவ்வாய் கிரகத்தில் மனி தர்கள் குடியேற முடி யும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ள னர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply