Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது.

பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் பேனா சிந்தும் மையில் அக்கால, இக்கால மக்கள் எழுந்துவந்து நட மாடுகின்றனர், விரல்களின் விளை யாட்டில் சிற்பங்கள் பிறக்கின்றன, ஓவியங்கள் உயிர்ப் பெறுகின்றன, கண் பாவங்கள் கதை சொல்கின்றன.

ஆம், எழுத்தாளர், கவிஞர், பரத நாட் டியக் கலைஞர், ஓவியர், சிற்பி, சமூ க ஆர்வச் செயல்பாட்டாளர் என்று பன்முகம் காட்டும் சிந்து, இன் னும் கல்லூரிப் படிப்பை முடிக் காதவர்.

சென்னையில் பொறியியல் பயின்ற சிந்து, தற்போது ஸ்காட்லாந்தில் படைப் பிலக்கிய எழுத்து முதுகலைப் படிப்பு படித்து வருகிறார்.

கல்லூரி விடுமுறையில் சென்னை வந் திருந்திருந்த சிந்துவை ‘சாகுந்தலத்தில்’ (அவரது வீடு) சந்தித்துப் பேசி னோம்.

கலை, இலக்கிய ஆர்வம் கொண்ட நீங்கள், பொறியியல் படிக்கப் போனது எப்படி?

பிளஸ் டூவில் நான் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு! -வீரேந்தர் சேவாக்கை போல முதல் கேள்வியையே சிக்ஸரு க்கு விளாசு கிறார் சிந்து.

தனது தலைப்பிரசவ நாவல் உருவானது கு றித்து…?

பொறியியல் படிப்பு மு டித்ததும், சிவில் சர் வீஸ் எக்ஸாமுக்கு த யார் செய்வதற்காக நான் டெல்லி சென்றேன். அப்போது என் மனதில் நீண்டநாட்களாக ஊறிக் கிடந்த விஷயங்கள் ‘கலை டாஸ்கோப்பிக் ரிப்ளெக்ஷன்ஸ்’ நாவலாக வடிவம் பெற்றன. நான் கண்ட, கேட்ட, படித்த, அனுபவித்த விஷயங் கள்தான் இந்நாவல். இதன் அடிப்படைக் கரு மாறவில்லை என்ற போதி லும், இரண்டு, மூன்று முறை திருப்பித் திருப்பி திருத்தி எழுதி னேன்.

‘கலைடாஸ்கோப்பிக் ரிப்ளெக்ஷன்ஸ்’ நாவல், எந்த மாதிரிக் கலவையான விஷயங்களைப் பிரதிபலிக்கிறது?

ஐந்து தலைமுறைகளாக நீளும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை இது. அவர்களின் விதி, முரண் பாடுகளின் பூமியான இந்தி யா வின் விதியுடன் எவ்வாறு சிக்க லான விதத்தில் பின்னிப் பிணை ந்து ள்ளது, நமது சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் சாதீயம் எப்படி தனிமனிதர்களின் வாழ் வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது போன்றவை பற்றியெல்லாம் இந்நாவல் பேசுகிறது. புதிய கேள் விகளை எழுப்புகிறது. இதில் முத ன்மைக் கதாபாத்திரமான ‘காதம் பினி’யுடன் கிராமம் தொடங்கி நகரங்களுக்கு நீங்களும் பயணம் செய்யலாம். 1894-ல் தொடங்கும் நாவலின் பயணம், 2003-ம் ஆண்டு வரை நீள்கிறது.

நகரத்தில் வளர்ந்த உங்களால் எந்தளவுக்கு கிராமப்புறச் சூழல், பிரச்சினைகளை எழுத்தில் கொண்டுவர முடியும்?

நான் நகரத்தில் வளர்ந்த, ஆங்கிலம் படித்த பெண் ணாக இருக்கலாம். ஆ னால் நானும் தமிழ்ப் பெண் தானே? இந்தச் சமூகத்தின் பெருமை கள், சிக்கல்கள், சவால் களை நானும் அறிவே ன். சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில், வே லூர் அருகே உள்ள பள் ளிகொண்டா என்ற எங்கள் பாட்டி ஊருக்குப் போயிருக் கிறேன். கிராமப்புறக் காற்றைச் சுவாசி த்திருக்கிறேன். நான் ஒன்றும் அன்னியப் பெண்ணில்லையே?

சரி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள், தமிழ்ச் சமூகம் குறித்து ஆங்கிலத்தில் எழுதியது ஏன்?

என் தமிழ் எழுத்து மீது எனக்கு நம்பிக்கை வராததுதான் காரணம் -பட்டென்று வருகிறது பதில்.

இந்த நாவலுக்கான விமர்சனங்கள், கருத்துகள் எவ்வாறு இருந்தனவாம்?

எதிர்மறையாக அதிகக் கருத்துகள் இல்லை. ‘இன்றைய இளைய சமுதாயத்தின் பல கேள் விகளை சிந்து பிரதிபலிக் கிறார்’ என்று சென்னை ஐகோர்ட்டு நீதி பதி கே. சந்துரு பாராட்டியதும், ‘மற்ற இளம் இந்திய எழுத்தாளர் களைப் போல சல்மான்ருஷ்டி, நைபாலின் பாணியை சிந்துகைக் கொள்ள வில்லை. நீங்கள் உங்க ளின் தமிழ் அடை யாளத்தை விட்டுவிடாதிருக்கிறீர்கள், என்று கவிஞர் தமிழச்சி தங்க ப்பாண்டியன் குறிப்பிட்டதும் மறக்க முடியாத பாராட்டுகள்” -சிந்துவின் முகத்தில் மெலிதான பெருமித இழை.

சிந்துவின் நாவல், வோடபோன் கிராஸ்வேர்டு புத்தக விரு துக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும், இந்த ஆண்டின் ஆறு சிறந்த நூல்களில் ஒன்று என ‘வெர்வ்’ பத்திரிகையால் தேர் வு செய்யப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கவை.

நாவல் தவிர…?

சில சிறுகதைகள், கவி தைகள், கட்டுரைகள் எழு தியிருக்கிறேன். அவை, இந்திய, ஸ்காட்லாந்து ஆங்கில இதழ்களில் பிரசு ரமாயிருக்கின்றன. என து, ‘தேவ தாசி- கோவில் நடனமணி’ என்ற சிறுக தை, ஒரு சர்வ தேச இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றி ருக்கிறது. எடின்பர்க் பிரின்ஜ் பெஸ்டி வல் என்ற இலக்கிய விழா வில், நான் இணைந்து எழுதியுள்ள ஆங்கில நாடகம் அரங் கேறுகிறது. அடுத்த நாவலுக்கான பணி யிலும் தற்போது இறங்கியிருக்கிறேன்.

உங்களின் எழுத்து எப்படிப்பட்டது?

உண்மை பேசுவது. மறைப்பாகவோ, மிகையாகவோ இல்லாமல் உண்மையைக் கண்ணாடிப் போல் அப்படியே பிரதிபலிப்பதே சரி என்பது எனது எண்ணம்.

பரதநாட்டியம்?

ஆறு வயது முதல் ஆடிவருகி றேன். பத்மினி துரைராஜ் எனது குரு. பந்தநல்லூர் பாணியில் ஆடுகிறேன். மகாபலிபுரம், சிதம்பரம் நாட்டிய விழாக்கள் உள்ளிட்ட இட ங்களில் எனது பாதங்கள் பதிந்தி ருக்கின்றன.

‘உங்களின் கலை உள்ளத்தின் பின்னணி யார்?’

எனது சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் சர்வ சுதந் திரம் அளித்திருக்கும் பெற்றோர் (ஞானராஜசேகரன்- சகுந்த லா), நல்ல தோழி, விமர்சகியாக உள்ள தங்கை நந்திதா உள்ளிட்டோர்…

ழுத்தே எனது சமூக செயல் பாட்டுக் கருவி என்று கூறும் சிந்து, சமீபத்தில் எடின்பர்க்கில் சக இந்திய மாணவர் களுடன் இணை ந்து அன்னா ஹசாரே வுக்கு ஆதர வாகக் குரல் உயர்த்தியிரு க்கிறார்.

சிந்துவுக்கு நமது நிறைவுக் கேள்வி இது-

அப்பாவைபோல் படம் இயக்குவீ ர்களா?

நிச்சயமாய். ஆனால் எனது படங்க ளில் மசாலா மணம் வீசாது!

நன்று!

சிந்து… இதயம் திறந்து…

உங்களின் பலம்: உண்மை சொல்வது.
பலவீனம்: உணர்ச்சி வசப்படுவது.
கோபப்படுவது: சுதந்திரம் இல்லாததைப் பார்க்கும்போது.
கலை: தீராத தாகம்.
பரதநாட்டியம்: ஓர் உள்ளார்ந்த முழுமையான உணர்வு.
பாதித்த நாவல்: சல்மான் ருஷ்டியின் ‘மிட்நைட்ஸ் சில்ரன்’.
தமிழில் பிடித்த எழுத்தாளர்: ஜெயகாந்தன்.
பிடித்த சிறுகதை: நாப்தலீன் (ஈராக்).
பிடித்த தமிழ்த் திரைப்படம்: தில்லானா மோகனாம்பாள்.
அப்பாவின் படங்களில் பிடித்தது: மோகமுள்.
ஏக்கம்: தமிழ் எழுத்தாளர்கள் போல் எழுத முடியவில்லையே?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: