Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாய்பிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாதுகாப்பானதா? ஒரு அலசல்.

பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகார மாக அனேக பெண்கள் நினை க்கிறார்கள். பாய் பிரண்ட் இல் லையென்று வருத்தப் படும் பெண்களும் உண்டு. பாய் பிர ண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினை ப்பும் பெண்களிடம் இரு க்கிறது.

இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோரு க்குள் எப்போதுமே பிள் ளைகள்மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. `ஆண் பெண் நட்பால் கலா சாரமே சீரழிந்து வரு கிறது` என்ற எண்ணமும் சமூகத் தினரிடையே உள்ளது.

உண்மையில் பாய்பிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாது காப்பானதா? ஒரு அலசல்.

பள்ளி – கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கி றார்கள். இது குழந்தைப் பருவத் திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஆணும் பெண்ணும் சமூக த்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல் லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.

பருவ வயது ஆரம்பிக்கும் டீன் ஏஜ் பருவத்தில்தான் எதிர் பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது பள் ளி செல்லுதல், டியூசன் செல் லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப் புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகி றார்கள்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள் கிடை க்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள். கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும் அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம் பமாகிறது.

கல்லூரிக்குள் நுழையும்போது சுதந்திரம் அதிகமாகிறது. பெற்றோரின் நேரடி கண்கா ணிப்பில் இருந்து விலகி வெளியூர் களில் தங்கி படிக்கும் சூழல் அனேகம் பேருக்கு ஏற்படுகிறது. இப்போதெல்லாம் பெண்கள் கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென் று தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண் -பெண் நட்புக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது. வயது க்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே பழகுகிறா ர்கள்.

நட்பு என்கிற ரீதியில் கல்லூரி க்குள் கூட்டமாக அமர்ந்து அரட் டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரி யை விட்டு பெண்கள் வரும் வழி யிலும், அவர்கள் அடிக்கடி செல் லும் இடங்களிலும் சந்திக்க நே ரும், நட்பாய் பழகநேரும் ஆண் களுடனும் பழக்கம் ஏற்ப டுகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல் பாகவே பெண்களுக்கு கிடை க்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒரு வன் தனக்கு மிகவும் பிடித் தமானவனாக இருக்க, அவ ன் அவளுக்கு `பெஸ்ட் பிர ண்டாக` மாறி விடுகிறான்.

`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என் னை நேசிக்கிறான், எனக்காக காத்தி ருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான்’ என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேச த்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும் போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழு மையாகத் தெரியாது. அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மை யானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும் நம்பி விடுகிறார் கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த் தும் ஏமாந்து விடுகிறார்கள்.

நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்கு கிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத் தில் உள்ள பிரபலமான இடங் களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது. இதற் கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவு களும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு தனது ஆசை நிறை வேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்பிரண்ட்’ வேறு கேள் பிரண் டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்து விட்டோம்’ என் ற எண்ணமே பெண்க ளுக்கு வருகிறது. இவ் வளவு நாள் பெற்றோரு க்குத் தெரியாமல் சுற்றி விட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சி னையை கொண்டு சென் றால் என்னாகும்? அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகி றார்கள் பல பெண்கள்.

எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்பிரண்ட் வைத்திருப்பவர்க ளுக்கு பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்க ளுக்கு சிக்கல் ஏற்படுவதே திரு மணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள் கிறார்கள்.

பெண்களின் ஆண் நட் பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் பாய் பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருண ங்களை நினைவு படுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந் தேகம் வலுத்துக் கொண்டே போகிறது. இதற்கு ப்பிறகு கணவன் -மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத் தான். அடி க்கடி நடக்கும் இதுபோன்ற பிரச் சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனை விமீது சந்தேக அம்பை வீசி விடுகிறான் கண வன். இதனால் ஏராளமான பெண் களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சி னைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள் தான் ஏராளம்.

குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக் குள் ஏற்படும் பலவீனங் களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்’ செய்யும் பாய் பிரண் டுகளும் இருக்கவே செய்கி றார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டு களும் பெருகி வருகி றார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய் பிரண்டு களும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ் சமே கொஞ் சப்பேர் தான்.

எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என் பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல் லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சி னைகளையும், தொல்லைக ளையும் சந்திக்க வேண்டியதிரு க்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

பாய்பிரண்ட் தொல்லையில் இரு ந்து தப்பிக்க பெண்களும், பெற்றோ ரும் தெளிவுடன் இருப்பது அவசி யம். அதற்கான சில விஷயங்கள்…

* பள்ளி கல்லூரிக் காலத்தில் படிப்பு, எதிர்கால லட்சியம் சம்ப ந்தமாக பேசுவது, விவாதிப்பது, உதவி க் கொள்வது மட்டுமே நட்பாகும். அதை த் தாண்டி பரிசு கொடுத்தல்- பெறுதல், தனி மையில் சந்தித்தல், புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் எல்லா மே நட்பு வட்டத்தை தாண்டியவை, பிரச்சினை க்குரியவை என்பதை பெண்கள் நினை வில் வையுங்கள்.

* பெண் குழந்தைகள் பருவ வயதை எட் டியதுமே பருவம் பற்றியும், ஆண்-பெண் நட்பு பற்றியும் பெற் றோர் விளக்க வேண் டியது அவசியம்.

* ஆண்-பெண் நட்பின் அவசியம் எதுவரை, அதன் எல்லை எதுவரை என்பது அந்தப் பருவத்திலே யே விளக்கப்பட்டு விட்டால் கல்லூ ரிப் பருவத்தை எட்டும்போது இயல் பாகவே பெண்கள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வார்கள்.

* மகள்களின் மனநிலையை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வே ண்டும். `அடக்கி வளர்க்கிறேன்’ என் று நாலு பேர் முன்னால் கண்டிப்பது, அடிப்பது கூடாது. சந்தேகப்படுவது, சதா குறை கூறிக் கொண்டே இருப் பது போன்றவை தவிர்க்கப்பட வேண் டும்.

* பள்ளி நிர்வாகத்தினரும் ஒவ்வொரு மாணவ-மாணவிக்குப் பின்னும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கல்வி கற்பிப்ப தோடு சமூகம் சார்ந்த ஒழு க்கமும், நல்ல நட்பு எப்படி இரு க்க வேண்டும் என்பதையும் சொல்லித் தர வே ண்டும்.

* பருவப் பெண்களும் பெற்றோ ருக்குத் தெரியாமல் ஆண் நண் பர்களுடன் வெளியில் சுற்றக் கூடாது. தெரிந்து பழகுகிறேன் என்று ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உரு வாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* ஜாலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான் ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள்.

* ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவி ர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள்.

*தேவையில்லாமல் தொ டர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும், தொல்லை கொடுப்பவர் களை பற்றியும் பெற்றோரிடமும், பொறுப்புக்குரியவர்களி டமும் சொல்லி வையுங் கள். பாதுகாப்பை ஏற்படுத் திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் `பாய்பிரண் டின்` மனநிலையை புரிந் து கொள்ளுங்கள். தவறா ன நட்பை ஆரம்பத்திலே யே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்துகொண் டு பழகுங்கள். உங்கள் லட் சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply