Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழிகள் 21

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோ ஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளி ருந்து மலர வேண் டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க் கையை சந்தோஷமாக அமைத் துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண் டா?

இந்த கேள்விகளை மையமாக வை த்து எழுதப்பட்ட ஒரு பிரபல மான புத் தகம் “தி வே டு ஹேப்பினெஸ்‘ இங்கி லாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன் று வரை பல லட்சம் பிரதிகள் வெளி யாகியுள்ளது. 70 மொழி களில் மொழி பெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித் துள்ளது.

தி வே டு ஹேப்பினஸ்‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழி முறைகள். “இவற்றை உணர் ந்து பின்பற்றத் தொடங்குவது தான் உண்மையான சந்தோஷ த்துக் கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடி த்துச் சொல்கிறார்.

“சந்தோஷத்தின் வழி’யாக அவ ர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்க மாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட் டும் பார்க்காதீர்கள், பின் வி ளைவுகளை யோசித்து மன சைக் கட்டுப்படுத்தப் பழகுங் கள்.

3. உங்களுடைய உறவுகளுக் கு, நண்பர்களுக்கு, பிஸின ஸ் கூட்டாளிகளுக்கு விசுவாச மாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலு ம் பரவாயில்லை, குழந்தைக ளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர் களுக்கு வேண்டிய உதவி களைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ் வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானா லும் பரவாயில்லை, ஏற்றுக்கொள் ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்த னை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங் களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங் கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவ ரது முயற்சியைக் கெடுத்து வி டாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாது காப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக் கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழ வேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங் கள், கேலிசெய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக் கு எதையெல்லாம் செய்ய க்கூடாது என்று நினைக் கிறீர்களோ, அதை நீங்க ளும் அவர்களுக்குச் செய் யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத் துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply