Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூத்த சகாக்களுடன் பிரணாப் ஆலோசனை : அத்வானியுடன் ஹசாரே குழு சந்திப்பு

ஜன் லோக்பால் மசோதா இன்று பார்லிமென்டில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், நேற்றிரவு மத்தி ய அமைச்சர் பிரணாப் முகர் ஜி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹ சாரே உண்ணா விர தத்தை மு டிவுக்கு கொண்டுவரும் வகை யில், மத்திய அரசு தீவிர நட வடிக்கையில் இறங்கியுள்ள து. ஹசாரேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து, விலாஸ்ரா விடம் ஆலோசனை நடத்திய பிரதமர், பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியுடன் ஆ லோசனை நடத்தினார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு பின், பிரணாப் முகர்ஜி, பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து, மூத்த அமைச் சர்களான சல்மான் குர்ஷித், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால், அம்பிகா சோனி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அரசு உறுதி மொழியை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என, ஹ சாரே கேட்டி ருந்தார். இந்த உறுதிமொழியை தயார் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதம் நடத்தப்பட உள்ள ஜன் லோக் பால் மசோதா குறித்த விவரங்கள் அடங்கிய கடிதம் தயாராகிவிட்டது. இக் கடிதம், இந்தி மற்றும் மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

க்கடிதம், பார்லிமென்டின் வி வாதம் துவங்குவதற்கு முன், ஹசாரே யிடம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

உறுதிமொழி கடிதத்தை ஹசா ரே பெற்றுக் கொண்டதும், உண் ணாவிரதத்தை முடித்துக் கொள் வது பற்றிய அறிவிப்பை வெளி யிடுவார் என எதிர்பார்க்கப்ப டுகிறது.

இதற்கிடையில், ஹசாரே குழு வைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் கூறுகை யில், “அரசு கோரிக் கைகளை ஏற்பதாகச் சொல்லியிருப்பது வரவேற்க த்தக்கது. பார்லி மென்டில் மசோதா நிறைவேறுவதில், கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். இல்லையென்றால் இழுபறி நிலை ஏற்படும். எனவே, மசோ தா நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றார். இதே கரு த்தை கிரண் பேடியும் தெரிவித்தார்.

அத்வானியுடன் சந்திப்பு: இன்று பார்லிமென்டில் மசோதா விவாதிக்கப் பட உள்ள நிலையில், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண் பேடி, பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன், மனோஜ் செசுடியா ஆகியோர், பாரதிய ஜனதா தலைவர் அத்வானியை சந்தித்து பேசினர். மசோதா விவாதத் திற்கு வரவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: