Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேர்ட் டிப்ஸ் . .

வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக் கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என் ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன் று உள்ளது.

வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து கா ட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொட ங்கும் டாகு மெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முத லாவதாகவும், பின்னர் N என்ற எழுத் தில் தொடங்கும் பைல்கள் அடுத் ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும் பும் பைலைத் தேர்ந் தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக் கையி ல் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல் கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொண்ட பைல்களையும் பட்டி யலிட்டுக் கேட்கலாம். எடுத்துக்காட்டாக, டெக் ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் கு என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.

பக்க எண்கள் சொற்களாக
வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகு மெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன் ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந் தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப் பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய் திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.

2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இரு க்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந் தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப் பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.

3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந் தெடுக்க வேண்டும். அது எங் கே இருக்கிறது என் று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப் ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடை க்கும். பீல்டு தேர்ந் தெடு க்கப்பட்டு கிரே கலரில் காட்டப் படும். பீல்டில் PAGE என்று தெரி யும். இது தான் அதனுடைய குறி யீடு.

4. இனி இந்த குறியீட்டிற்குப் பதி லாக \* CardText என டைப் செய்திடவும்.

5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக் காட்டாக முதல் பக்கத்தில் 1 – என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: