Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து- “பொன்னீம்’

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோ லா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீ ம் என்ற இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து அறிமுகப்படு த்தப் பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன ம் (என்டோமாலஜி ரிசர்ச் சென் டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையி லும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தீவிர ஆய்வில் இறங்கினர்.

இந்த ஆய்வு மாணவர்கள் புங் கை எண்ணெய், வேப்பெண் ணெ ய் மற்றும் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட சில பொருட்களைக் கொண்டு இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து உருவாக்கினார்க ள். இதற்கு “பொன்னீம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பொன்னீம் தயாரிப்பது எப்படி: 45% வேப்ப எண்ணெய், 45% புங்க எண்ணெய் இரண்டையும் 10% சோப்புடன் கலக்கவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 10 லிட்டர் கொள் ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில் லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண் ணீரில் நன்றாக கலந்துவிடும். மீண்டும் ஒரு குச்சியைக் கொ ண்டு நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிற கு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ள லாம் . ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லிட்டர் வரை தே வைப்படும்.

பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:
அசுவினி: இளம் இலைகளின் அடிப்பகுதி யில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த்துளைப்பான்: தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்ததுபோல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கி விடு ம். நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகிய வற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.

முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக் கொல்லியைக் கொண்டு நெல், பருத்தி, நிலக்கடலை, சோ ளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி, தேயி லை போன்ற மலைப்பயிர்கள், ரோஜா, மல்லிகை முதலான மல ர்கள் ஆகியவற்றைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சி களையும் புழுக்களையும் அழிக்கலாம். இதை பயன் படுத்து வதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையி லும் பாதிப்பு ஏற் படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானிய ங்கள் மற்றும் பழங்களின் சுவையும் அதிகரிக்கும்.

தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபும்-638 653.   எம்.அகமது கபீர், 93657 48542.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply