Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேநீர் சொல்லும் உண்மைகள்!

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்ல தல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல் வதுண்டு’ இவற்றில் எது உண்மை?…

டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல.

உண்மை: ஒரு கோப்பை காபியில் இரு க்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்ëகு க்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்து க்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக் கும்.

டீ குடிப்பதால் பல்லில் கறை ஏற்படும்.

உண்மை: டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `டீ’ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் டீ தடுக்கிறது. பல் லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண் டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.

டீ குடிப்பது வயிற்றுவலிக்கு காரணமாகும்.

உண்மை: வயிற்றுவலி (அசிடிட்டி) ஏற்பட டீ கார ணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும்போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறு வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக் கியமான தேநீரைப் பருகு ங்ëகள்.

டீ எலும்புகளுக்கு கெடுதல் விளைவிக்கும்.

உண்மை: டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும் பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆ னால் அண் மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண் களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தே வையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டீ குடிப்பதனால் இரும்பு சத்து உடலில் சேர்வது குறைகிறது.

உண்மை: இறைச்சி அல்லாத உணவுகளிலிரு ந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேரு வதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோ க்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேரு வதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத் துக் கொள்பவர்க ளுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. டீ பிரியர்க ளாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவ ர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடை யே டீயை குடியுங்ëகள், சாப்பாட்டுக்குப் பின்பு டீ யை குடிக்க வேண்டாம்.

உடலில் தண்ணீர் பற்றாக்குறை எனப்படும் `டிஹைட்ரேஷனை’ தேநீர் ஏற்படுத்தும்,

உண்மை: மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அள வுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடி த்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.

டீ குடித்தால் உடல் எடை கூடும்

உண்மை: டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித் தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல் லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.

மேற்கண்டவை, புதிய ஆய்வுத் தகவ ல்கள். இதுபற்றி இந்துஸ்தான யூனிலி வர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில், “மிகச்சிறந்த இய ற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதி ல் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரி மான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன. உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற் றும் வாய் ஆரோக்கி யத்துக்கும் டீ ஏற்றது. டீ, உடலில் தண்ணீர் பற்றா க்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: