Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லோக்பால்:ஹசாரே குழு – அரசு இடையே திடீர் முட்டல்

லோக்பால்:ஹசாரே குழு – அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு

காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் ஒரளவுக்கு வெ ற்றியை நெருங்கி வந்த நேர த்தில் திடீர் பின்னடைவு ஏற் பட்டுள்ளது. ஹசாரே வலியு றுத்திய அம்சங்கள் ஒரள வுக்கு அரசும், எதிர் கட்சியி னரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வந்தது.

இன்று மாலை அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி அரசு எடுத்து வரும் நிலைகளை விளக்கி ஹசாரே போராட்டத்தை கை விட கோரிக்கை விடுவார் என்றும் டில்லி வட்டாரம் தெரிவி த்தன. ஆனால் ஹசாரே குழுவினர் அமைச்சர் சல்மான் குர் ஷீத்தை சந்தித்த பின்னர் அரசு ஓட்டெடுப்புக்கு மறுத்து வருகிறது. இதனால் எங்களுக்கு திருப்தி இல்லை என ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள பிரசாந்த் பூஷண் நிருபர் களிடம் தெரிவித்தார். மாலை 6 மணியளவில் ஹசாரே தனது போராட்டத்தை முடித்துக்கொள்வார் என எதிர்பார்க் கப்பட்டது ஏமாற்றத்தில் முடிந்தது.

ஜன்லோக்பால் வலியுறுத்தி கடந்த 16 ம் தேதி முதல் உண்ணாவிரத போரா ட்டத்தை துவக்கினார் ஹசாரே. இன் றுடன் 12 நாடகள் அவர் உண வு எதுவும் எடுத்துக் கொள் ளாததால் உடல் நிலை பாதிக்கப்பட்டு ள்ளன என டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். மேலும் கூடுதல் டா க்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹசாரே விதித்த 3 நிபந்தனைகளில் ஒன் றான பார்லி.,யில் மசோதா மீதான விவாதம் இன்று காலை யில் துவங்கியது. மத்திய அமைச்சர் பிரணாப் முக ர்ஜி , பா.ஜ., வை சேர்ந்த சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, ஐக்கிய ஜனதாதளம் சரத்யாதவ், தி.மு.க,வை சேர்ந்த இளங்கோ வன் உள்ளிட்டவர்கள் தங்களுடைய வாதங்களை எடுத்து ரை த்தனர்.

விவாதத்தின் முடிவில் ஹசாரே பரிந்துரைத்த கருத்துக்கள் அடங்கிய மசோதாவை நிறைவேற்ற அரசு தயாராகி வரு கிறது. மேலும் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற் றும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதுவே ஹசா ரேவுக்கு பெரும் வெற்றியாக கருதப்பட்டது.

சல்மான் குர்ஷீத்துடன் ஹசாரே குழுவினர் சந்திப்பு: இதற் கிடையில் மாலை 3 மணியளவில் திடீர் பின்னடைவு ஏற்ப ட்டது. இன்று விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷி த் வீட்டில், ஹசாரே குழு வில் இடம்பெற்றுள்ள பூஷண், அரவிந்த் கெர்ஜி வால், மணீஷ் சிசோடியா , மேதாபட்கர், ஆகியோர் சந்தித்து பேசினர். சல்மா ன் குர்ஷித் பிரதமரை சந் தித்து பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் தலை வர்கள் பிரணாப்பை சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரசாந்த்பூஷண், அரசு ஓட்டெடுப்பு நடத்த மறுத்து வருகிறது. ஓட்டெடுப்போ அல்லது தீர்மானமோ நிறைவேற்றப்படும் என அரசு தரப் பில் உறுதியளிக்கவில்லை. இது இல்லாத பட்சத்தில் இது அர்த்தமற்றதாகி விடும். இது ஏன் என்று எங்களுக்கு புரிய வில்லை. ஹசாரே பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு உரிய பிரதிபலன் இல்லை. என்றார். பார்லி.,யின் நிலை என்ன என்பதை மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர் என்றார்.

அரசு தொடர்ந்து ஏமாற்றுகிறது: ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் ‌பேசுகையில்; அரசு எங் களை தொடர்‌ந்து ஏமாற்றியும், துரோகம் செய்தும் வரு கிறது. இது நடப்பது 4 வது முறையாகும். நாங்கள் விரும்பு வது விவாதத்தின் மீது ஓட்டெடுப்பு, அல்லது தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்னை கிளம்பியதை அடுத்து பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை அழைத்து அவசர ஆலோசனை நடத்தி வரு கிறார். இவருடன் அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, விலாஸ்ராவ் தேஷ் முக், பவன்குமார் பன்சால் ஆகியோர் இருந்தனர்.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply